தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

கற்பூரவள்ளி இலையின் பயன்கள்

இது கொடிபோல் படரும்.
வீடுகளில் தொட்டிகளிலும் வளர்க்கலாம் . இலை வட்டமாக தடிப்பாக இருக்கும் . இலை ஓரத்தில் அரிவாள் வெட்டுப்போன்று கூரிய முனைகள் இருக்கும். இதன் மேல் சாம்பல் பூத்ததுபோன்றிருக்கும்.இதன் இலையைக் கசக்கினால் கற்பூர வாசனை வீசும் .

குழந்தைகளுக்கு ஏற்படும் செங்கிரந்திக்கு கற்பூரவல்லி இலையைப் பிழிந்து சாறு எடுத்து அதில் குன்றிமணி இலைச் சாறு , வெங்காயச்சாறு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கி காலை மாலை கொடுத்துவர நோய் குணமாகும்.

கற்பூரவள்ளி

காசம் , இருமல், கபம் வாதத் தொடர்பான நோய்கள் ஆகியனவற்றிற்கும் கற்பூரவல்லி மருந்தாகப் பயன்படுகிறது.

பூவரச மரங்கள் பெருமளவில் நமது நாட்டில் காணப்படுகின்றன . இதன் இலை , பூ , காய் , பட்டை அனைத்துமே மருத்துவப் பயன்பாட்டுக்குரியன . பல வியாதிகளைக் குணப்படுத்தும் சக்தியுள்ளவை. இதன் பூவை அரைத்து சிரங்கு நோய்க்குப் பூசிவரக் குணமாகும்.

பூவரசமரத்தின் இலைகளைக் காயவைத்து அதை நெருப்பி லிட்டுச் சாம்பலாக்கி தூள் செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து சொறி , சிரங்குகளுக்கு மேற்பூச்சாகப் பூசி வந்தால் நோய் குணமாகும்.

Poovarasam

உடலில் காணப்படும் வீக்கங்களுக்கு பூவரசன் இலையை அரைத்து வேகவைத்து களிபோலக் கிண்டி தினசரி காலை , மாலை பூசிவர வீக்கம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!