Homeகீரைகளின் பயன்கள்வேம்பு மருத்துவ பயன்கள்

வேம்பு மருத்துவ பயன்கள்

THATSTAMIL-GOOGLE-NEWS

வேம்பு மருத்துவ பயன்கள்

வேறு பெயர்

விருந்தம் , விசிமந்தம் , விசுமிகினி வருட்டம் மாலுகம் , பிசுமந்தம் , பிசாவப்பிரியம்.

இதன் குணம்

💚குடற்பூச்சிகளைக் கொல்லும்
💚நகச்சுற்றைக் குணமாக்கும்.
💚பித்த குன்மம் நீங்கும்.
💚மலக்கட்டு நீங்கும்.
💚மூலச்சூடு தணியும்.
💚தலைவலி போக்கும் .

வேம்பு மருத்துவ பயன்கள்

கிராம மக்களுக்குப் பெரிதும் பயன்படும் மரம் வேம்பு. இதனை ஆதிசக்தி மூலிகை என்றும் பராசக்தி மூலிகை என்றும் சித்தர்கள் வழங்கியுள்ளனர்.

வேம்பின் இலை , பூ , பட்டை , வேர் , விதை அனைத்துமே மருத்துவப் பயனுடையவை . வேப்பமரக்காற்றினால் , காற்றில் பரவும் நோய்க்கிருமிகள் அழிந்துவிடும்.

வேப்பிலை மிகுந்த பயனுடையது. கிருமிக் கூட்டங்களையும் , புழு , பூச்சிகளையும் கொல்லும் சக்திபடைத்தது. கண்ணுக்குப் புலப்படாத நுண் கிருமிகளால் உண்டாகும் அம்மை , விஷ சுரம் , கொப்புளங்கள் , சொறி , சிரங்கு , தொழுநோய் , விஷகடிகள் ஆதியனவற்றை நீக்கவல்லது. இதன் பூ கசப்பாக இருந்தாலும் ருசியும் மணமும் கொண்டது.

வேம்பின் பூவில் பச்சடி செய்து , ரசம் வைத்துச் சாப்பிடும் வழக்கமும் உண்டு. வேப்பம் பூ வடகம் நம்மவரால் பெரிதும் விரும்பப்படுகிறது.

வேப்பம் பூவை வாட்டி வைத்தால் தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள ஈர் , பேன் முதலியன நீங்கும்.

வேம்பு மருத்துவ பயன்கள்

வேப்பம் பூவைச் சாப்பிடுவதால் குடல் சுத்தமாகும் .அஜீரணம் நீங்கிப் பசியுண்டாகும். நாக்கு ருசியற்றுப்போதல் , பெரு ஏப்பம் , போன்ற நோய்களைக் குணப்படுத்த வேப்பம் பூவைப் பயன்படுத்துவர்.வேப்பம்பூவைச் சேகரித்து , உலர்த்தி அதனைக் கொண்டு வேப்பம்பூ இரசம் , வேப்பம்பூத்துவையல் முதலியவற்றை செய்து உணவுடன் உபயோகிப்பர்.

வேப்பம் பூ கசாயம் வயிறுசம்பந்தமான சகல நோய்களையும் குணமாக்கும் , இந்தக் கசாயத்துடன் நெல்லிக்காய்ச்சாற் றையும் , தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும் .

வேப்பம் பழ விதைகளை வெயிலில் உலர்த்தி பருப்பெடுத்து அரைத்துப் புரையோடிய புண்களுக்கு வைத்துக்கட்டினால் அவை இலகுவில் குணமடையும்.

வேப்பெண்ணெய் பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தம் , கபம் போன்ற நோய்களைப் போக்குதற்குப் பெரிதும் பயன்படுகிறது.

வேப்பம் பட்டையை எடுத்து உலர்த்தி , இடித் துத்தூள் செய்து பசுவின் பாலுடன் கலந்து தினந்தோறும் காலை , மாலை குடித்து வந்தால் மலக்கட்டு , மூலச்சூடு , குன்ம வயிற்றுவலி ஆகியன நீங்கும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments