Homeசமையல்மசாலா செய்யும் முன் கவனிக்க வேண்டிய சில சமையல் குறிப்புகள்

மசாலா செய்யும் முன் கவனிக்க வேண்டிய சில சமையல் குறிப்புகள்

THATSTAMIL-GOOGLE-NEWS

சமையல் குறிப்புகள்

🔹எப்போதும் எண்ணெயோடு கொஞ்சம் நெய் அல்லது வனஸ்பதி சேர்த்தால் ருசியும் மணமும் கூடும்.

🔹வதக்கும் போது எண்ணெய் மட்டும் உபயோகித்தால் , மசாலாவிலிருந்து சுலபமாக நெய் பிரிவது போல் எண்ணெய் பிரியாது.

🔹அரைத்த மசாலாவை குறைந்த அளவிலேயே வறுக்கவும். அப்போதுதான் நிறமும் ருசியும் நிலைக்கும்.

🔹மசாலா வாணலியில் ஒட்டிக்கொண்டால் பொரிக்கும் எண்ணெயோ , நெய்யோ குறைவென்று காட்டுகிறது.

🔹காய்கள் வேகவைத்த தண்ணீரை வீணாக்க வேண்டாம். அதை கிரேவி , சூப் , ரசம் அல்லது குழம்பு வைக்க உபயோகிக்கலாம்.

🔹சமையலுக்கு குக்கரை உபயோகித்தால் சமைக்கும் நேரத்தைக் குறைக்கலாம் , வெங்காயமும் , மசாலாவும் குக்கரிலேயே எண்ணெய் விட்டு வதக்கவும். பிறகு பச்சைக்காய் கறிகளோடு போதுமான உப்பும் தண்ணீரும் சேர்க்கவும் காய்கறிகள் வேக , குறிக்கப்பட்ட நேரத்தின் படி சமைக்கவும் . இந்த முறையைக் கையாண்டால் சமைக்கும் நேரத்தைக் குறைப்பதோடு காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துக்களும் காக்கப்படுகிறது.

சமையல் குறிப்புகள்

🔹அரைக்கும் மசாலாவில் தேங்காய் சேர்த்தால் , அதிக நேரம் வறுக்க வேண்டாம்.

🔹சிறிது சர்க்கரை சேர்த்தால் கிரேவி ( குழம்பு ) ருசிகூடும்.

🔹தக்காளி கிடைக்காத காலங்களில் தக்காளி சாஸ் ( Sauce ) சிறிது உபயோகிக்கலாம்.

🔹கிரேவியில் ( குழம்பில் ) நிறத்தைக் காக்க நல்ல பழுத்த தக்காளிகளையே உபயோகிக்கவும்.

🔹தரமான மிளகாய் , மிளகாய்த்தூள் கிரேவிக்கு நல்ல நிறத்தைத் தரும் . கூடுமானவரை நீள ரக சிகப்பு மிளகாய் உபயோகிக்கவும். வெய்யிலில் உலர்த்தி வீட்டிலேயே மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.

🔹கசகசாவை மிக்ஸியில் அரைப்பதாயிருந்தால் , வெந்நீரில் 10 அல்லது 15 நிமிடம் ஊறவைத்து அரைக்கவும் , அல்லது கசகசாவை வெறும் வாணலியில் சிறிது சூடாக்கி மிக்ஸியில் முதலில் பொடி செய்து , பிறகு மற்ற மசாலா சாமான்களை சேர்த்து அரைக்கவும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments