Homeசித்த மருத்துவம்புண்கள் விரைவில் குணமாக-சித்த மருத்துவம்

புண்கள் விரைவில் குணமாக-சித்த மருத்துவம்

THATSTAMIL-GOOGLE-NEWS

புண்கள் விரைவில் குணமாக

அழுகலகற்றி(Antiseptics)

உடற்கட்டுகளையும் மற்றைய பொருட்களையும் அழுகவிடாமல் தடுக்கின்ற பொருட்கள் இதுவாகும்.

Substances which destroy or inhibit the growth of micro – organisms in the living tissues.

🪴முக்கிய மூலிகைகள்🪴

🔷வேம்பு
🔷மாசிப்பத்திரி
🔷சந்தனம்
🔷மஞ்சள்
🔷சாம்பிராணி
🔷சித்திரப்பாலாவி
🔷புகையிலை
🔷அரிவாள் மூக்குப்பச்சிலை
🔷ஊமத்தை
🔷புங்கு
🔷வெற்றிலை

உபயோகிக்கும் முறைகள்

🪴வேம்பு🪴

வேப்பிலையை நீர் விட்டரைத்துப் போட நாட்பட்ட புண்கள் , மற்றும் தோலைப் பற்றிய விரணங்கள் குணமடையும். இத்துடன் சிறிது மஞ்சளும் சேர்த்து அரைக்கலாம்.

🪴சந்தனம்🪴

முகப்பருவுக்கு சந்தனத்தைப் பசும்பால் விட்டு அரைத்து போடலாம்.

260 மி . லி . வெந்நீரில் 8 கிராம் சந்தனத் துளைப் போட்டு ஒரு மணி நேரம் ஊறியபின் , வடிகட்டி எடுத்து 15 – 30 மி . லி . வீதம் கொடுக்க , சரும ரோகங்கள் , தேக எரிவு ஆகியன நீங்கும்.

🪴சாம்பிராணி🪴

சாம்பிராணிப் பதங்கத்தை 100 மி . லி நீரில் கலந்து அதனால் புண்களைக் கழுவப்புண்கள் ஆறும்.

🪴புகையிலை🪴

புகையிலையை எடுத்து எரித்துச் சாம்பலாக்கி அச்சாம்பலை வெண்ணெயுடன் கலந்து புண்கள் மீது பூச , புண்கள் ஆறும்.

புண்கள் விரைவில் குணமாக

🪴புங்கு🪴

இதனுடைய வேரை எடுத்துக் கழுவிச் சுத்தம் செய்து , பின் தோலைச் சீவிப் பிழிந்து அதன் பாலை எடுத்துச் சம அளவு தேங்காய்ப் பால் சேர்த்துக் மெல்லிய துணியில் நனைத்துக் கட்ட பிளவை , ஆறாத புண்கள் , மேகப் புண்கள் முதலியன ஆறும்.

🪴வெற்றிலை🪴

தீப்பட்ட புண்மீது வெற்றிலையை வைத்துக் கட்ட எளிதில் ஆறும்.

🪴மாசிப்பத்திரி ( மாசில் பச்சை )🪴

இதன் இலையை உயர்த்திப் பொடித்து புண்ணுக்கு போட ,புண் ஆறும்

🪴மஞ்சள்🪴

மஞ்சளைப் பொடித்து நீரில் கரைத்து துணியில் வடிகட்டி எடுத்து அதனால் புண்களைக் கழுவ , கிருமிகள் அகலும்.

புண்கள் விரைவில் குணமாக

🪴சித்திரப்பாலாவி🪴

இதன் பாலை எடுத்துப் புண்களுக்கும் , உதடு , நாக்கு வெடிப்புக்களுக்கும் தடவி வர புண் ஆறும்.நகச்சுற்றுக்கும் பூசலாம். கால் ஆணிக்கும் ( Corn ) போடலாம்.

🪴அரிவாள் மூக்குப்பச்சை🪴

வெட்டுக் காயங்கட்கு இந்த இலையை அரைத்துப் போட காயம் வெகு விரைவில் ஆறும்.

🪴ஊமத்தை🪴

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்கு ( Boil ) ஒற்றடம் போட , கட்டிகளில் ஏற்படும் வலி நீங்கும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments