பாரதிதாசன் பற்றிய முழு தகவல்கள் | Bharathidasan History in Tamil
- பாவேந்தர் பாரதிதாசன் (29.04.1891 – 21.04.1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) கனகசபை – இலக்குமி அம்மையார்க்கு ஏப்ரல் 29, 1891 அன்று பிறந்தார்.
- இவருடைய இயற்பெயர் கனக சுப்புரத்தினம்.
- தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.
- பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான “பிசிராந்தையார்” என்ற நாடக நூலுக்கு 1970 இல் சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.
- பதினாறு வயதில் புதுவை அரசினர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பாரதியின் மீது கொண்ட பற்றின் காரணமாக தம்மை பாரதிதாசன் ஆக ஆக்கிக்கொண்டார்.
- அகவல், எண் சீர்விருத்தம், அறுசீர் விருத்தம் ஆகியவை இவருடைய பாடல்களில் மிகுதியாகப் பயன்படுத்தி உள்ளார்.
- பாரதியின் வேண்டுகோளுக்கு இணங்க இவர் பாடிய “எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்ற பாடலைக் கேட்ட அவர், அக்கவிதையைத் தாமே, “ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியின் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கனகசுப்புரத்தினம் எழுதியது” எனச் சுதேசமித்திரன் இதழுக்கு அனுப்பினார்.
- தொடக்க கல்வி கற்றது = திருப்புளி சாமியாரிடம்.
- இவர் தமிழ் பயின்றது = புலவர் பு.அ.பெரியசாமியிடம்.
- இவரின் கவித்திறன் கண்டு “நாவலர் சோமசுந்தர பாரதியார்” தலைமையில் அறிஞர் அண்ணா அவர்கள் இவருக்கு “புரட்சிக்கவி” என்ற பட்டத்தையும் 25000 ரூபாய் நன்கொடையும் அளித்தார்.
- வ.ரா.வின் அழைப்பின் பேரில் “இராமனுஜர்” என்னும் படத்திற்கு திரைப்படப்பாடல் எழுதினார். 1990ஆம் ஆண்டு தமிழக அரசு இவரின் நூல்களை எல்லாம் நாட்டுடைமை ஆக்கியது.
- மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் ஆகியவை பற்றித் தம் பாடல்களில் உரக்க வெளிப்படுத்தியமையால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார்.
- பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் தந்தவர். குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, சேர தாண்டவம், ஆகிய காப்பியங்களையும் எண்ணற்ற பாடல்களையும் இயற்றியவர்.
- ‘குயில்’ என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார்.
- இவருடைய ‘பிசிராந்தையார்’ நாடகத்துக்குச் சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
- ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்ற இவரின் தமிழ் வாழ்த்துப் பாடலைப் புதுவை அரசு தனது தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ளது.
- தமிழக அரசு இவருடைய பெயரால் திருச்சியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
சிறப்பு பெயர்
- புரட்சிக்கவி (அறிஞர் அண்ணா)
- புரட்சிக்கவிஞர் (பெரியார்)
- பாவேந்தர்
- புதுவைக்குயில்
- பகுத்தறிவு கவிஞர்
- தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
- இயற்க்கை கவிஞர்
புனைப் பெயர்கள்
- பாரதிதாசன் பல்வேறு புனைப் பெயர்களில் தனது கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவன,
- கண்டழுதுவோன்
- கிறுக்கன்
- கிண்டல்காரன்
- பாரதிதாசன்
படைப்புகள்
- அகத்தியன் விட்ட புதுக்கரடி, அமைதி, செந்தமிழ் நிலையம், அழகின் சிரிப்பு, இசையமுதம், பாரதசக்தி நிலையம்,, இரணியன் அல்லது இணையற்ற வீரன் (நாடகம்),
- குடியரசுப் பதிப்பகம், இருண்ட வீடு (33 தலைப்பு), முத்தமிழ் நிலையம், இளைஞர் இலக்கியம், பாரி நிலையம், உயிரின் இயற்கை, மன்றம் வெளியீடு, உரிமைக் கொண்டாட்டமா?, குயில்,
- எதிர்பாராத முத்தம், வானம்பாடி, எது பழிப்பு, குயில், ஒரு தாயின் உள்ளம் மகிழ்கிறது, கடவுளைக் கண்டீர்!, கண்ணகி புரட்சிக் காப்பியம், அன்பு நூலகம்,
- கதர் இராட்டினப்பாட்டு, காசி ஈ.லட்சுமண பிரசாத்), கலை மன்றம், கற்புக் காப்பியம், காதல் நினைவுகள், காதல் பாடல்கள், பூம்புகார் பிரசுரம்,
- காதலா? – கடமையா?, குடியரசுப் பதிப்பகம், குடும்ப விளக்கு, முல்லைப் பதிப்பகம், குயில் பாடல்கள், பூம்புகார் பிரசுரம், குறிஞ்சித் திட்டு, சஞ்சீவி பர்வதத்தின் சாரல்,
- சேர தாண்டவம், தமிழ் இயக்கம், தமிழச்சியின் கத்தி, தமிழுக்கு அமுதென்று பேர், தலைமலை கண்ட தேவர், பூம்புகார் பிரசுரம், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப் பாட்டு, திராவிடர் புரட்சித் திருமணத் திட்டம்,
- தேனருவி இசைப் பாடல்கள், நல்ல தீர்ப்பு, முல்லைப் பதிப்பகம், நீலவண்ணன் புறப்பாடு, பாண்டியன் பரிசு, பாரதிதாசன் ஆத்திசூடி, பாரதிதாசன் இளையார் ஆத்திசூடி, பாரதிதாசன் கதைகள்,
- முரசொலிப் பதிப்பகம் கடலூர் டி.எஸ்.குஞ்சிதம், பாரதிதாசன் பன்மணித் திரள், பிசிராந்தையார், புகழ் மலர்கள் நாள் மலர்கள், புரட்சிக் கவி, துரைராசு வெளியீடு,
- பெண்கள் விடுதலை. பொங்கல் வாழ்த்துக் குவியல், மணிமேகலை வெண்பா, அன்புநூலகம், மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது, முல்லைக் காடு, காசி ஈ.லட்சுமண பிரசாத், விடுதலை வேட்கை, வீட்டுக் கோழியும் – காட்டுக் கோழியும், குயில் புதுவை, வேங்கையே எழுக.
பாரதிதாசன் இயற்றிய நூல்கள்
- இசை அமுது
- பாண்டியன் பரிசு
- எதிர்பாராத முத்தம்
- சேரதாண்டவம்
- அழகின் சிரிப்பு
- புரட்சிக்கவி
- குடும்ப விளக்கு
- இருண்ட வீடு
- குறிஞ்சித்திட்டு
- கண்ணகி புரட்சிக்காப்பியம்
- மணிமேகலை வெண்பா
- காதல் நினைவுகள்
- கழைக்கூத்தியின் காதல்
- தமிழச்சியின் கத்தி
- இளைஞர் இலக்கியம்
- சுப்பிரமணியர் துதியமுது
- சுதந்திரம்
- தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது)
உரைநடை நூல்கள்
- திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்
- சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
பாரதிதாசன் நாடகங்கள்
- சௌமியன்
- நல்ல தீர்ப்பு
- பிசிராந்தையார் (சாகித்ய அகாடமி விருது பெற்றது)
- சக்திமுற்றப் புலவர்
- அமைதி ஊமை (தங்கக் கிளி பரிசு)
- இரணியன் அல்லது இணையற்ற வீரன்
- சௌமியன்
- படித்த பெண்கள்
- இன்பக்கடல்
- நல்லதீர்ப்பு
- அம்மைச்சி
- ரஸ்புடின்
- அமைதி
பாரதிதாசன் நடத்திய இதழ்கள்
- குயில்
- முல்லை (முதலில் தொடங்கிய இதழ்)
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
- பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர்.
- தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது
- ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.
- 1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
- 1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
- 2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.
இறப்பு
- எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.
இதையும் படிக்கலாமே
பாரதியார் பற்றிய முழு தகவல்கள் | Bharathiyar History in Tamil