தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

தூதுவளை பயன்கள்

தூதுவளை பயன்கள்

வேறு பெயர் ! – தூது வேளை , தூதுளை , தூதுணம் , அலர்க்கம் , கங்கவல்லி.

தூதுவளை மருத்துவ பயன்கள் :

🔹பசியையுண்டாக்கும்
🔹வாய்வைக் கண்டிக்கும்
🔹உடலுக்கு வலிமையூட்டும்
🔹காது மந்தம் போக்கும்
🔹ஆஸ்துமாவை தணிக்கும்
🔹அறிவு வளர்ச்சியைப் பெருக்கும்
🔹கபக்கட்டு விலகும்
🔹காசம் போக்கும்
🔹இளமை யுண்டாகும்
🔹சீரணத்தை ஒழுங்காக்கும்
🔹மாதவிலக்கை ஒழுங்காக்கும்.
🔹மலக்கட்டை நீக்கும்
🔹தாது நட்டத்தை நீக்கும்.

🍀தூதுவளை சிறு கொடியினத்தைச் சேர்ந்தது. இது வறட்சியான பிரதேசங்களிலும் வேலிகளில் சுயமாகவே வளரக்கூடியது. இதன் இலைகள் கத்தரிச்செடியின் இலைகள் போன்றிருக்கும். இதில் கொக்கி போன்று முட்கள் நிறைந்திருக்கும். இதன் பூ கத்தரிப்பூ நிறமுடையது. இதன் காய் கண்டங் கத்தரிக்காய் போன்றது.

🍀தூதுவளை நல்ல மருந்தாகப் பயன்பட்டு வருகின்றது. இக்கீரையை எடுத்து நெய்சேர்த்து வதக்கித் துவையல் , குழம்பு , கடையல் போன்றனவற்றைச் செய்து உணவுடன் சேர்த்து உண்ணலாம்.

தூதுவளை பயன்கள்
தூதுவளை

🍀தூதுவளையின் இலை , பூ , காய் , பழம் , வேர் ஆகியவை உடலுக்கு வெப்பத்தைக் கொடுக்க வல்லன. இதனால் உடலில் சேரும் கோழையை அகற்றி உடலுக்கு வலிமையூட்டவல்லன.

🍀தூதுவளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டும் ஆற்றல் வாய்ந்தது , இக்கீரையை நெய்விட்டுவதக்கி உப்பு , புளி , காரம் சேர்த்து செய்யப்படும் துவையலானது பசியையுண்டாக்கும் , வாயுவைக் கண்டிக்கும்.

🍀இக்கீரையை பசுவெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சி அந்த நெய்யை எலும்புருக்கி நோயுடையவர்களுக்கும் , காசம் , மார்புச் சளியுடையவர்களுக்கும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிட்டும்.

🍀தூதுவளைப்பூவை உணவாகக் கொண்டால் உடற்பலமும் , முகவசீகரமும் , அழகும் பெறலாம். தூதுளங்காய் திரி தோஷங்களையும் நீக்கவல்லது.

🍀கபரோ கங்கள் , பித்ததோஷம் , உருசியின்மை , பித்தவாதம் , மலபந்தம் ஆதியனவற்றை நீக்கும் வல்லமை தூதுளங்காய்க்குண்டு.

🍀தூதுளங்காயை நெய்யிட்டு வதக்கிக் குழம்புகளில் சேர்த்து உண்ணலாம் . தூதுளை வேரை வெற்றிலை பாக்குடன் சேர்த்துத் தின்றுவர வாதம் , பித்தம் , சிலேத்துமம் என்று சொல்லப்படுகின்ற முத் தோஷங்களும் நீங்கும்.

🍀உடலுக்கு வலிவும் , வனப்பும் அளிப்பதுடன் நோய்கள் பலவற்றை நீக்கும் . தூதுவளைக் கீரையை வாரம் ஒருமுறையேனும் உணவுடன் சேர்த்துக் கொள்வது சிறந்தது.

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!