Homeசித்த மருத்துவம்சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம்

சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம்

THATSTAMIL-GOOGLE-NEWS

சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம்

இது சிறுநீரகம் மற்றும் அதனுடன் இணைத் திருக்கும் சிறுநீர்க் குழாய் , சிறுநீர்ப்பை ஆகிய இடங் களில் உண்டாகும் கற்களைக் கரைத்து வெளியேற்றக் கூடிய பொருளைக் குறிக்கும்.

Drug having the power of dissolving various stones in the urinary system ( Kidney , Urcter , Bladder )

முக்கிய மூலிகைகள்

🔷மாவிலங்கு
🔷வாழை
🔷சிறுபீளை
🔷எலுமிச்சம் துளசி
🔷அசமதா ஓமம்
🔷குடசப்பலை பட்டை
🔷தண்டு கீரை

சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம்

உபயோரிக்கும் முறைகள்

🪴மாவிலங்கு🪴

இதன் பட்டை சிறுநீர்க் கற்களைக் கரைக்கும். இது குடிநீரில் ஒரு முக்கிய அங்கம் பெறுகின்றது.

🪴வாழை🪴

வாழைக் கிழங்குச் சாறு அல்லது தண்டுச் சாறு 30-60 மி.லி. தினம் ஒருவேளை குடித்துவர , சிறுநீர் கற்கள் கரைந்து வெளியேறும்.

🪴சிறுபீளை🪴

சிறுபீளைச் சமூலம் , சிறுநெருஞ்சில் , மாவிலங்கம் பட்டை இவற்றைச் சம எடையாக எடுத்துத் தேவையான அளவு நீர்விட்டு எட்டில் ஒரு பாகமாகக் குறுக்கிப் பருக , கல்லடைப்பு நீங்கும்.

🪴எலுமிச்சம் துளசி🪴

இதனைக் குடிநீர் செய்து அருந்த , சிறுநீர்ப் பையிலுள்ள கற்கள் கரையும்.

🪴அசமதா ஓமம்🪴

இதனிலிருந்து தீநீர் வடித்து அதனை அளவுப்படி கொடுக்க , கல்லடைப்பு நீங்கும்.

குறிப்பு : இது சாதாரண ஓமத்திலும் காரம் கூடியது. ஆனால் இதற்குப் பதில் சரக்காகச் சாதாரண ஓமத்தைச் சேர்ப்பதில் தவறில்லை.

🪴குடசப்பாலைப் பட்டை🪴

இதன் பட்டைக்குக் கல்கரைக்கும் செய்கை உண்டு. இதற்குரிய குடிநீரில் இப் பட்டையைச் சேர்த்துக் கொள்ளலாம்.

🪴தண்டுக் கீரை🪴

தண்டுக் கீரை – 10 பங்கு
மிளகு – 1 பங்கு

இவற்றைச் சேர்த்து நீர்விட்டு நாலிலொன்றாகக் குறுக்கிக் குடிநீர் தயாரித்துக் குடிக்க , கல்லடைப்பு நோய் நீங்கும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments