சிறுதானிய உணவுகள் -சோள சுகியன்
🔷மஞ்சள் சோளம்-1/2கப்
🔷பொடித்த வெல்லம்-1/2கப்
🔷தேங்காய் துருவல் – 1/4கப்
🔷உளுத்தம் பருப்பு -1/4கப்
🔷முந்திரி பருப்பு -4
🔷ஏலக்காய் தூள் – 1/2டீஸ்பூன்
🔷நெய் – 2டீஸ்பூன்
🔷உப்பு,எண்ணெய் – தேவையான அளவு
🥣உளுத்தம் பருப்பை நன்றாக ஊறவைத்து , நீரை வடித்து , சிட்டிகை அளவு உப்பு சேர்த்து , கெட்டியாக அரைக்கவும்.
🥣சோளத்தை தனியாக ஊறவைத்து நீரை வடித்து , தேங்காய்த் துரு ஏலக்காய்த்தூள் , வெல்லம் , சேர்த்து கரகரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.
🥣வாணலியில் நெய் ஊற்றி அரைத்த சோள விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற வைத்து , சிறிய உருண்டைகளாக்கவும்.
🥣இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து , அரைத்து வைத்துள்ள உளுந்து மாவில் தேய்த்து , நன்றாக காய்ந்த எண்ணெயில் பொரித்து பரிமாறவும்.