குடல் புழுக்களை அகற்றும் அற்புத மூலிகைகள்
🌳முக்கிய மூலிகைகள்…🌳
🔹பலாசு விதை
🔹வாய்விடங்கம்
🔹காட்டு சீரகம்
🔹வசம்பு
🔹பாகல்
🔹பூனைக்காலி விதை
🔹வேம்பு
🔹குப்பை மேனி
🔹நொச்சி
🔹அன்னாசி
🔹சிவதை
🔹சரக்கொன்றை
உபயோகிக்கும் முறைகள்
🌳பலாக விதை🌳
இதனைத் தண்ணீரில் ஊற வைத்து , மேல் தோலை நீக்கிய பின் உட் பருப்பைப் பொடித்து 260 மி . கி . வீதம் தேனில் கலந்து தினம் மூன்று வேளை , மூன்று நாட்களுக்குக் கொடுத்து , நான்காம் நாள் காலையில் சிற்றாமணக்கெண்ணெய் ஒரு அவுண்ஸ் குடிக்க , கழிச்சலுடன் குடலில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
🌳வாய்விடங்கம்🌳
விதையைப் பொடியாக்கி 4 – 6 கிராம் வரை நாளைக்கு இரு முறை தேனில் கலந்து ஒரு கொடுத்து , அடுத்த நாள் சிற்றாமணக்கெண்ணெயைக் குடிக்க , குடலிலுள்ள புழுக்கல் வெளியேறும்.
🌳காட்டுச் சீரம்🌳
இதனைப் பொடித்து மூன்று கிராம் வரை தேன் கூட்டி , தினம் இரு வேளை மூன்று நாட்களுக்குசி கொடுக்க , வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.
🌳பூனைக்காலி விதை🌳
இதற்கு வயிற்றுப் புழுக்களை அகற்றும் தன்மை உண்டு. மற்றும் மருந்துகளுடன் சேர்த்து உபயோகிக்கலாம்.
🌳வசம்பு🌳
வசம்புப் பொடியை தேனில் குழைத்து உண்டு வரின் நாடாப்புழு நீங்கும்.
🌳பாகல்🌳
இதன் இலையை இடித்து மல வாயிலில் வைத்துக் கட்ட தானப் பூச்சி நீங்கும்.
🌳வேம்பு🌳
இதன் பாகங்கள் அனைத்துக்கும் புழுக்கொல்லிசு ” செய்கை உண்டு . இதன் இனம் துளிரை நன்கு அரைத்து பனை வெல்லத்துடன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க , வயிற்றுப் புழு நீங்கும் .
🌳குப்பைமேனி🌳
இதன் இலைச் சாறு சிறுவர்கட்கு 5-20மி .லி . வரை கொடுக்க , வயிற்றைக் கழியச் செய்து வயிற்றுப் புழுவை அகற்றும்.
🌳நொச்சி🌳
இதனுடைய வேரைக் குடிநீர் செய்து கொடுக்க , வயிற்றுப் புழு அகலும். வெண் நொச்சியின் உலர்ந்த பழத்திலும் ( Dry Fruits ) குடற் புழுவை அகற்றும் செய்கையுண்டு.
🌳அன்னாசிப் பூ ( filicium Verum )🌳
இதற்குக் குடல் புழுக்களை அகற்றும் செய்கை உண்டு.
🌳சிவதை🌳
வெண்சிவதை வயிற்றுப் புழுக்களை அகற்றும் தன்மை உடையது .
🌳சரக் கொன்றை🌳
இதன் கொழுந்து இலைச் சாறு 160 மி.லி. எடுத்து உட்கொள்ள , கிருமிகள் தானப் பூச்சிகள் மலத்துடன் வெளியேறும் .
குறிப்பு : உகந்த மூலிகைகள்
வட்டப்புழு – ( Round worm )
பலாசு
காட்டுச் சீரகம்
பூனைக்காலி வித்து
வாய்விடங்கம்
தானப் புழு- ( Thread worm )
காட்டுச் சீரகம்
சரக் கொன்றை
பாகல்
நாடாப் புழு ( Tapeworm )
மாதுளை வேர்
இருவி
வசம்பு
கமுகு – பாக்கு