Homeசித்த மருத்துவம்உமிழ் நீர் சுரக்கவும் -குறைக்கவும் உதவும் மூலிகைகள்

உமிழ் நீர் சுரக்கவும் -குறைக்கவும் உதவும் மூலிகைகள்

THATSTAMIL-GOOGLE-NEWS

உமிழ் நீர் சுரக்கவும் -குறைக்கவும் உதவும் மூலிகைகள்

உமிழ் நீர் perukki- Sialogogue

உமிழ் நீர்ச் சுரப்பை அதிகப்படுத்தி நாவினை ஈரமாக்கச் செய்யும் பொருள் உமிழ் நீர் பெருக்கியாகும்.

Drog that inereases the Seoretion of Saliva

🪴முக்கிய மூலிகைகள்🪴

🔷அக்கராகாரம்
🔷இஞ்சி
🔷ஓமம்
🔷புகையிலை
🔷வெற்றிலை
🔷மிளகு
🔷கிராம்பு
🔷கற்பூரவள்ளி

உபயோரிக்கும் முறைகள்

🪴அக்கராகாரம்🪴

இதன் வேரை வாயில் போட்டு மெல்ல நாவறட்சி நீங்கும்.

🪴இஞ்சி🪴

இதனை வாயிலிட்டு மெல்ல உமிழ் நீர் பெருகும் . இந்தீர்ப் பெருக்கால் தொண்டைப் புண் , குரல் கம்மல் நீங்கும்.

🪴ஓமம்🪴

இதனை வாயில் போட்டால் காரமாகவிருக்கும். அத்துடன் உமிழ் நீரைப் பெருக்கும்.

🪴புகையிலை🪴

இது வாய் உலர்வதைப் போக்கும். வாயில் சிறு துண்டு புகையிலையைப் போட்டு உமிழ்ந்து கொண் டிருந்தால் வாயில் நீர் ஊறும். பல்வலி உள்ளவர்கள் இதனை உபயோகித்தால் பல்வலி நீங்கும்.

🪴வெற்றிலை🪴

வெற்றிலையை வாயிலிட்டு மெல்லும்போது உமிழ்நீர் ஊறும். அத்துடன் நறுமணம் வீசும்.

🪴மிளகு🪴

இதனை வாயிலிட்டு மெல்ல உமிழ்நீர் பெருகும்.

🪴கிராம்பு🪴

கராம்பை மிகவும் குறைந்தளவில் வாயில் போட்டு மெல்ல உமிழ்நீர் பெருகும்.

🪴கற்பூரவள்ளி🪴

இதன் இலையை வாயிலிட்டு சுவைக்க உமிழ்நீர் ஊறும்.

உமிழ் நீர் சுரக்கவும் -குறைக்கவும் உதவும் மூலிகைகள்

உமிழ்நீர் சுருக்கி- Antisialogogue

உமிழ்நீர் சுரப்பைக் குறைக்கும் பொருள் . உமிழ் நீர் சுருக்கியாகும்.

Drug that suppresses the secretion of saliva .

🪴முக்கிய மூலிகைகள்🪴

🔷கிலு கிலுப்பை
🔷பேரீஞ்சு
🔷கோப்பிக் கொட்டை

உபயோகிக்கும் முறைகள்

🪴கிலு கிலுப்பை🪴

இதனின் இலைச் சாற்றை சுவைத்து உண்ண வாய் வறளும்.

🪴பேரிஞ்சு🪴

கர்ச்சூர் எனப்படும் பேரீச்சங்காயை உண்ண உமிழ்நீர்ச் சுரப்பு குறையும்.

🪴கோப்பிக் கொட்டை🪴

கோப்பிப்பானம் அருந்துவதை அதிகரித்தால் உமிழ் நீர் குறைந்து வறட்சியாகிப் பசியைக் குறைக்கும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments