உடல் சூட்டை தணிக்கும் மூலிகைகள்
இது உடம்பிலுள்ள அதிக வெப்பத்தைக் குறைத்துக் குளிர்ச்சியைத் தரும் பொருள் .
Drugs have the power of cooling of the body or reduce the body temparature .
🪴முக்கிய மூலிகைகள்🪴
🔷சந்தனம்
🔷தாமரை
🔷பச்சை பயறு
🔷பொன்னாங்கண்ணி
🔷வாழை இலை, பட்டை
🔷விலாமிச்சு வேர்
🔷நன்னாரி
🔷விழாம் பழம்
🔷வெண்டைக்காய்
🔷வெந்தயம்
🔷வெள்ளரிக்காய்
🔷ரோஜா பூ
🔷ஆமணக்கு
🔷திராட்சை
🔷செம்பரத்தை
உபயோகிக்கும் முறைகள்
🪴சந்தனம்🪴
சந்தனாதித் தைலத்தை வைத்துத் தலை முழுகி வர கை , கால் , கண் எரிச்சல் நீங்கும்.
சந்தன தூள்-2 பங்கு
நீர் – 16 பங்கு
இவை இரண்டையும் கூட்டி கால் பங்காகக் குறுக்கி குடிநீர் தயாரித்து , அதன் எடைக்கு ஆறு கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பின் வடிகட்டித் தேவையான அளவு பன்னீர் கலந்து உட் கொள்ள மூலச்சூடு , பிரமேகம் , சுரம் தீரும்.
🪴தாமரை🪴
இதனுடைய பூவுக்கு குளிர்ச்சி உண்டாக்கித் தன்மையுண்டு . இதனைத் தைலம் தயாரிப்பதற்குச் சேர்த்துக் கொள்ளலாம். இதன் கிழங்குக்கு உள்ளழலாற்றிச் செய்கையுண்டு.உணவு சமைத்தும் உண்ணலாம்.
🪴பச்சைப் பயறு ( பாசிப் பயறு )🪴
இதனைப் பொடியாக்கி உடலில் தேய்த்துக் குளிக்க , கண் , தலை , உடம்பு ஆகியன குளிர்ச்சி அடையும்.
🪴பொன்னாங்காணி🪴
இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலத்தைச் சிரசில் வைத்து முழுகிவர , கண் நோய்கள் நீங்கி , உடல் குளிர்ச்சி அடையும்.
🪴வாழை🪴
இதன் இலை , பட்டைச் சாறு ஆகியவ குளிர்ச்சியுண்டாக்கிச் செய்கையுண்டு . தீ சுட்ட புண்களுக்கு இதனை உபயோகிக்கலாம்.
🪴விலாமிச்சு வேர்🪴
இதன் தைலம் வைத்து வாரத்துக்கு ஒருமுறை முழுகிவர , உடல் குளிர்ச்சியுண்டாகும்.
🪴நன்னாரி🪴
நன்னாரி வேரை மணப்பாகு செய்து அருந்த குளிர்ச்சியுண்டாகும். வேரின் சாற்றினைத் தடித்த சீலையில் வடித்து , கண்ணுக்கு விட கண் குளிர்ச்சி அடையும்.
🪴விழாம்பழம்🪴
இதனைக் கொண்டு குளிர்பானம் தயாரித்து அருந்த , உடலுக்குக் குளிர்ச்சி உண்டாகும்.
🪴வெண்டைக்காய்🪴
இதனை கறி சமைத்து உண்ண , உடலுக்குக் குளிர்ச்சியுண்டாகும் . வெப்பத்தை அடக்கும் ; நரம்பை பலமுறச் செய்யும்.
🪴வெந்தயம்🪴
வெந்தயத்தை வறுத்துப் பொடித்து அதேயளவு கோதுமையைச் சேர்த்து களி தயாரித்துச் சாப்பிட , உடல் வெப்பம் நீங்கும்.
🪴வெள்ளரிக்காய்🪴
வெள்ளரிப் பிஞ்சையோ , காயையோ சுத்தம் செய்து பச்சையாக உண்ண , உடல் வெப்பம் தணியும்.
🪴ரோசாப் பூ🪴
இதனைக் கொண்டு பன்னீர் தயாரித்துக் கண்ணுக்கு விட , கண் குளிர்ச்சியடையும்
🪴ஆமணக்கு🪴
ஆமணக்கெண்ணெயை , தலையில் தேய்த்துவர , உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி உண்டாகும்.
🪴திராட்சை🪴
இதன் பழரசத்தை அருந்திவர , வெப்பம் தணியும்.
🪴செம்பரத்தை ( செவ்வரத்தை )🪴
பூவின் இதழ்களை எடுத்து அதனுடன் ஆறு பங்கு நீர் சேர்த்துக் குடிநீரோ , ஊறல் நீரோ தயாரித்து வேளை ஒன்றுக்கு 35 மி.லி. வீதம் குடிக்க , உடல் குளிர்ச்சி பெறும் .