இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2025

Vinayagar Chaturthi wishes in Tamil விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை 2025

Vinayagar Chaturthi wishes in Tamil | தமிழில் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2025

வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் நாம் காண இருப்பது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை பற்றியதுதான். தட்ஸ்தமிழ் (THATSTAMIL) சார்பாக அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இந்த விநாயகர் சதுர்த்தி கவிதையை வழங்கிய நண்பர் RK ராகுல் அவர்களுக்கு தட்ஸ்தமிழ் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

விநாயகர் சதுர்த்தி 2025 தமிழ் தேதி – 27.08.2025 புதன் கிழமை

Vinayagar Wishes in Tamil | விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 2025

விநாயகர் சதுர்த்தி
iniya vinayagar chaturthi wishes in tamil text

இன்ப நிலை அடைய! இனிய வாழ்வு வாழ!
துன்பங்கள் ஒழிய!

ஏழைகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் ஏகதந்தனே!
என்றும் உனை மறவேனே!

எந்நாளும் அருள் புரிய,
இறைவன் பலம் அறிய,
காலம் எல்லாம் காக்கும் காவலனே
எங்கள் கணேசனே!

அகில உலகிற்கும் அதிபதியே!
ஆசை நாயகன் கணபதியே!

நெஞ்சில் உனை சுமக்கும் வரையில்,
நெருங்காது கவலைகள்!

உனை நினைக்காமல் உறங்காது விழிகள்!!

Vinayagar Chaturthi Quotes in Tamil தமிழில் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

வலிகள் பல வந்தாலும், வாழ்வுதனை வெறுத்தாலும்,
யானை முகத்தனை பார்த்தால்,
சித்தம் தெளிந்து ஞான நிலை பெருகும்!

உள்ளமெல்லாம் உருகும்!

முழு முதற் கடவுளே!
ஏழு கடல் காவலரே!

ஏற்றி விடு எண்ணியபடி!

நினைத்த காரியம் கை கூடும் படி!

கடனை அடைக்க,
கவலை துடைக்க,

நோய் நொடி அகல,
நிகழ்ச்சி பல நிகழ,

நித்தமும் நிம்மதியாக!
சத்தமும்
அமைதியாக!

தீராத வேதனை விலக!
ஆறாத காயங்கள்
ஆற!

விதியை மாற்ற,
வீதி தோறும் உனை  போற்ற,
வலம்!
வருவாய் உலா!

பாச பரம்பொருளே!
நேச கரம் தரும்
குருவே!..

தொடக்கம் நீர் தானே!
கரை சேர,
வளம் சேர!

வினை அகல,
துணை நீர் தானே!

கலங்குகின்ற கண்ணுக்கு,
மானிட மண்ணுக்கு,
பன்னீர் தெளிக்கும் தெளியவனே!

உனை வணங்கி நிற்கும் போதெல்லாம்!

உச்சி குளிர்ந்து, உள்ளம் மகிழ்ந்து,
உன் திருவடி சேர ஏங்குதே மனம்!

பக்திக்கு சக்தி
அளித்த அமுதே!
முக்தி தரும் முத்தே!

Vinayagar Chaturthi Quotes in Tamil | தமிழில் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Ganesh Chaturthi Quotes in Tamil 2025

ஆரோக்கியமான வாழ்விற்கு, ஆரம்பமே நீர் தானே!

எளிய மக்களுக்கும்,
இறைவனே நீர் தானே!

ஒழுக்கமான வாழ்விற்கு,
ஒளிவிளக்கு நீர் தானே!

பேரின்ப
பெருங்கடவுளே!

உன்னை கண்ட போதெல்லாம்!

பார்வையின் மகிமை அறிகிறேன்!
படைப்பின் அர்த்தம் உணர்கிறேன்!

உன் தரிசனம்!
வேண்டுமே நித்தம்!

உன் அருள் ஆசி
வேண்டுமே நித்தம்!

சர்வ சக்தி விநாயகனே,
வித்யா விநாயகனே!!
துணை நிற்பாய்!!
துயர் தீர்ப்பாய்!!

தும்பிக்கை வழி வந்த எங்கள் நம்பிக்கையே!!

உயிரில் கலந்த உறவே!
உன் திருவருவே!!

தரிசிக்க
தினம் தினம்!

ஊற்றுகின்றேனே பாலை!
சாற்றுகின்றேனே,
மாலை!
ஏற்றுகின்றேனே,
சுடரை!
சுற்றுகின்றேனே,
சுதனை!

போற்றிகின்றேனே!
முழு முதல்வனை!

அனைத்து அன்பர்களுக்கும்,
அன்பிற்கினிய
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!

தமிழில் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

உனை உருவாக்க,
ஒரு பிடி களிமண் போதுமே!
உனை வழிபட,
ஒரு பிடி அருகம்புல் போதுமே!

மஞ்சள் தெளித்து, மண் வாசனை எனை ஈர்த்து!

ஆற்றில் குளித்து,
அன்றாடம் வணங்கி ஆனந்த மனம் வாழுமே!!
அமைதி மனம் சேருமே!
ஆசைகள் பல
தீருமே!

இறைவனாகிய,
நீர் அளித்த நன்கொடை, இயற்கையாய் ஜொலிக்க!!

இன்னும் என்ன வேண்டும்!
இது போதுமே!
உன் திருவருள் போதுமே!

எண்ணிடலங்கா பெயர்களை
உடைய என் தலைவனே!!

ஐந்து கரம் உடையவனே!

சிந்தனை வளம் பெற அருள் புரிவாய்,
என் சிங்கார பாலனே!!

எடுத்த முயற்சி,
வெற்றி பெற
வழி செய்வாய்,
விநாயகனே!

அடுத்த நொடி உயிர் பிரிந்தால் கூட,
அக்கினியோடு உடல் சேர்ந்தால் கூட,
அடுத்த ஜென்மம் எடுத்தால் கூட,
உனை மறவாத வரம் வேண்டுமே!

கட்டுவேனே உனக்காக ஒரு கோவில்!

கரம் கூப்பி வணங்கி, பிறர் துயர் துடைப்பேனே உன் பெயர் சொல்லி!!

அரச மர நிழலில் அழகாக உனை அமர்த்தி!

ஆழ்வேனே அன்பால்!
வாழ்வேனே உன்னால்!

பிள்ளையார் சுழி போட்டு,
தொடங்கிய காரியம் எல்லாம் ஜெயம்! 

Ganesh Chaturthi Quotes in Tamil 2025

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

உன்னை பார்த்த பிறகு ஒரு பக்குவம் வரும்!

அறம் பொருள் இன்பம் வீடு பெறும்!

ஏழைகளின் இறைவனே, எப்போதும் துணை நில்!

லட்சியத்தை அடைய, நற்கதி அடைய!!

எத்தனையோ சித்துகள் செய்கிறாய்,
சிம்மாசனத்தில் அமர்ந்து!

மானிட உலகம்,
ஆசைக்கு மயங்காமல்,
அடுத்தவருக்கு தீங்கு செய்யாமல் இருக்க நல் வழி செய்!

ஊர் மக்கள்,
உள்ளம் நிறைய எல்லாம் வளமும் நலமும் பெற்று!..

நாணயமாக வாழ
நல் வழி செய்!..

ஏட்டிலே இருந்ததை பாட்டிலே சொல்வது போல!

வீட்டிலே இருந்த என்னை நாட்டிலே உலவ விட்டு,
பல எண்ணம் கொண்ட மனிதர்களை அறிந்து,
வாழ்வின் தரம் புரிந்து,
பாதைகள் பல கடந்து வந்தேனே உன்னை நாடி!

நல் புத்தி அருள,
பல் சித்தி பயில,

காத்தருள்வாய் கணேசனே!!

அண்டம் முழுதும் ஆனைமுகன் ஆட்சி!

நீ சென்ற இடமெல்லாம் சிறப்பு,
உனை தொடர்வது  எங்களின் உயிர்ப்பு!

கணங்களுக்கு எல்லாம் தலைவனே!
அவையை  அரசனே!

பச்சரிசி பொங்கல் இட்டு,
தட்டு நிறைய கொளுக்கட்டை வைத்து,
பழங்கள் பல படையல் இட்டு,
தாமரை பூ வைத்து, அருகம்புல் மாலை சூடி,
தங்க கணபதிக்கு
ஆவணி சதுர்த்திக்கு
அற்புத சக்திக்கு பக்தியுடன் கூடிய
இறை வழிபாடு உனக்கே!!

பார்வதி உருவாக்கிய உலகே!
உனை காண வரும் உலகே!

சிவனின் தலை பிள்ளையே!
இம் மண்ணின் முதல் பிள்ளையே!

அழகனின் சகோதரனே,
தமிழ் இனத்தின்
மகா மகனே!

மக்களின் துயர் துடைக்க
மறு பிறவி எடுத்த
மாபெரும் மைந்தனே!

Ganesh Chaturthi Wishes in Tamil 2025

ஒரு பிடி களிமண் போதுமே!
உனை வழிபட,
ஒரு பிடி அருகம்புல் போதுமே!
அதில் இட!!

மஞ்சள் தெளித்து, மண் வாசனை,
ஈர்த்து!

ஆற்றில் குளித்து,
அன்றாடம் வணங்கி ஆனந்த மனம் வாழுமே!!
அமைதி மனம் சேருமே!
ஆசைகள் பல
தீருமே!!

மக்கள்
அனைவருக்கும்
மனம் நிறைந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

Vinayagar Chaturthi wishes in Tamil விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை 2025

எங்கள்
தொல்லைகளை நீக்கி தோள் கொடுக்கும் தோழனே!

நிதி இல்லாமலே வரலாம்,
உன் சன்னிதிக்கு!
உனை கண்ட,
மறு நிமிடமே,
சென்று விடலாம் நிம்மதிக்கு!!

பசியுடன் வருபவருக்கு,
பந்தியில் இடம் உண்டு!
பக்தியுடன் வருபவருக்கு,
உன் நெஞ்சில் இடம் உண்டு!

சுற்றம் வாழ தினம் சுற்றி வருகின்றோம்!
உன்னை!

தோல்வியே தழுவி வந்த மனம்,
வேதனையில் உருகி நொந்த மனம்,

உனை பார்த்த நொடியில் மகிழ்ச்சியாய் மாறுதே அந்த மனம்!!

தேர்வு எழுதுவோருக்கு,
தொழில் செய்பவர்களுக்கு,
பணி புரிபவர்களுக்கு
நம்பிக்கையே, நாயகன் உன்னை எண்ணியே
நாளும் நாங்கள்!!

உன் கருணை பார்வையாலே
காலங்கள் பல கடந்து,
காரியங்கள் பல
நிகழ்ந்து,
உள்ளம் நெகிழ்ந்து மகிழ்ச்சி கூடுதே!

அடியேன் எனை
நீ மறவாதே!
நாடி வந்த எனை
நீ பிரியாதே!

சொர்க்கம் தேடி அலையாமல்,
அதனின்
மார்க்கம் தேடி வருகின்றோமே!

உன் பாதம் விழுந்து வணங்குகின்றோமே!

இன்னும் மடியாமல்
மீள்கின்றோமே!
நீயே உயிர் என்று வாழ்கின்றோமே!!

உனது கோவில் கோபுர அழகில் கரைகின்றோமே!

இரு கை கூப்பி
இனிதே உனை போற்றுகின்றோமே!!

இயல்பாகவே உன்னுள் இணைகின்றோமே!

ஆனந்த கண்ணீர் மழை வடிக்கின்றோமே!

சில்லு சில்லாய் தேங்காய் உடைக்கின்றோமே!

சிதறிய எண்ணம் சேர்கின்றோமே!!

தீப ஆராதனை காட்டுகின்றோமே!

தீபத்திலே உனை காண்கின்றோமே!

தெய்வீக நிலையை அடைகின்றோமே!

பேரின்ப பேரருளை
பெறுகின்றோமே!!

பிள்ளையார் சுழி போட்டு தொடங்குகின்றோமே

வெற்றிப்பயணம் தொடர்கின்றோமே!!

அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

Vinayagar Chaturthi wishes in Tamil

உன்னை பார்த்த பிறகு ஒரு பக்குவம் வரும்!

அறம் பொருள் இன்பம் வீடு பெறும்!

ஏழைகளின் இறைவனே, எப்போதும்
துணை நில்!

லட்சியத்தை அடைய, நற்கதி அடைய!!

அனைவருக்கும்,
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

சுற்றம் வாழ உனை சுற்றி சுற்றி வந்த மனம்!

தோல்வியே தழுவி நொந்த மனம்,

வேதனையில் உருகி வெந்த மனம்,

உனை பார்த்த நொடியில் மகிழ்ச்சியாய் மாறுதே அந்த மனம்!!..

அனைவருக்கும்,
மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

சில்லு சில்லாய் தேங்காய் உடைக்கின்றோமே!

சிதறிய எண்ணம் சேர்கின்றோமே!!

தீப ஆராதனை காட்டுகின்றோமே!

தீபத்திலே உனை காண்கின்றோமே!

தெய்வீக நிலையை அடைகின்றோமே!

பேரின்ப பேரருளை
பெறுகின்றோமே!!

பிள்ளையார் சுழி போட்டு தொடங்குகின்றோமே!!

வெற்றிப்பயணம் தொடர்கின்றோமே!

அனைவருக்கும்,
இதயம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

அடுத்த நொடி உயிர் பிரிந்தால் கூட,

அக்கினியோடு உடல் சேர்ந்தால் கூட,

அடுத்த ஜென்மம் எடுத்தால் கூட,
உனை மறவாத வரம் வேண்டுமே!
விநாயகா!!

அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

வீட்டிலே இருந்த என்னை நாட்டிலே உலவ விட்டு,
பல எண்ணம் கொண்ட மனிதர்களை அறிந்து,
வாழ்வின் தரம் புரிந்து,
பாதைகள் பல கடந்து வந்தேனே உன்னை நாடி!

நல் புத்தி அருள,
பல் சித்தி பயில,

அனைவருக்கும், இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் கவிதை 2025

அரச மர நிழலில் அழகாக,
உனை அமர்த்தி!

கட்டினோமே உனக்கு ஒரு கோவில்!

பிள்ளையார் சுழி போட்டு,
தொடங்கிய காரியம் எல்லாம் ஜெயம்!

பேராசைகள் எல்லாம் மாயம்!

அனைவருக்கும்,
அன்பான விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!

உச்சியில் பிள்ளையார் என்று உயரத்தில் நீ இருந்தாலும்,
உச்சம் வந்து
உன் நின் திருவடி
தொடுகின்றோமே!

உலகே உன் ஆட்சி!
ஊருக்கு ஊர் கோவில் அதற்கு,
சாட்சி!

உனை காண்பதே கண் கொள்ளா காட்சி!

மனிதர் குலம்
மதி விளங்க!
மற்ற உயிர்களும்
அதில் சிறக்க,

மணிமகுடம் சூட்டுகின்றோமே உனக்கு!!

சிம்மாசனத்தில் அமர்ந்து சிக்கல்கள் பல தீர்ப்பாய் அப்பனே
விநாயகா!!

இம்மண்ணின் மக்கள் குறை தீர்ப்பாய் அப்பனே!
விநாயகா!

நீர்  தானே விண்ணிற்க்கும் நாயகா!
விநாயகா!

சர்வ சக்தியின் விதையே!
பூர்வ ஜென்ம புண்ணியமே!!
புத்தியை தெளிய செய்வாய் விநாயகா!!

வாழிய உன் புகழ்!
வாழிய வாழியவே!!

இதையும் படிக்கலாமே,