கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கவிதை மற்றும் கிறிஸ்மஸ் விழா வரலாறு பற்றிய கட்டுரை | Happy Christmas Wishes in Tamil
கிறிஸ்மஸ் தின வாழ்த்து கவிதைகள்
“இயேசு பாலு குமரன் இப்பூவுலகில் பிறந்து மக்களின் பாவங்களை போக்கவிருக்கிறார்” அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். |
மெரி கிறிஸ்துமஸ் வாழ்த்து
“இடையர்களுக்கு வழிகாட்டியாய் அமைந்து, இயேசு பிரானே சென்றடைய உதவிய ஆகாயத்து விண்மீன்கள் நமக்கும் வழிகாட்டியாக அமைந்து நம் வாழ்க்கையை மேன்மை அடைய உதவும்” அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள். |
கிறிஸ்துமஸ் வாழ்த்து படங்கள்
“கானாவூர் திருமணத்தில் இயேசு கிறிஸ்து தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியது போல, நம்மிடம் உள்ளளனவற்றை கொண்டு வாழ்வில் நமக்கு தேவையானவற்றை அடைந்து நம் வாழ்வினை சீரமைப்போமாக.” அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்.. |
[ராமு சோமுவின் உரையாடல்]
ராமு: டேய் சோமு நாம் நம்முடைய ஆலயத்துக்கு சென்று வருவோமா?
சோமு: ஏன் திடீரென்று கேட்கிறாய்?
ராமு: கிறிஸ்மஸ் காலம் ஆரம்பித்து விட்டது அல்லவா. அதனால் தான். பார்த்துவிட்டு வருவோமா?
சோமு: ஓஹோ. செல்வோமே.
ராமு: எங்க பார்த்தாலும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பார்த்தாயா?
சோமு: ஆமாம் டா ராமா. எல்லார் வீட்டிலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது கிறிஸ்துமஸ் குடில்கள் வைக்கப்பட்டுள்ளன. கிறிஸ்மஸ் மரமும் வைத்து வைத்திருக்கிறார்கள்.
ராமு: அன்று எங்கள் வகுப்பில் ஆசிரியர் எங்களுக்கு கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை பற்றி கூறினார் நான் வேண்டுமென்றால் அதைப் பற்றி உனக்கு சொல்லவாடா?
சோமு: சொல்லு ராமு நானும் கேட்டுக்கொண்டே வருகிறேன்.
கிறிஸ்மஸ் என்றால் நாம் நினைக்கிற அலங்காரம், வண்ண வண்ண விளக்குகள், வான வேடிக்கை, பெரிய விருந்து ஆகிய மட்டும் அல்ல. கிறிஸ்துமஸ்க்கான அர்த்தமே மதநல்லிணக்கத்தோடும் சகோதரத்துவத்துடனும் அனைவரும் ஒன்று இணைந்து கூடி மகிழ்ந்து நிம்மதியாகவும் வளமாகவும் வாழவும் வழிவகுக்கும் ஒரு விழாவாகும்.
கிறிஸ்மஸ் என்பது எதைக் குறிக்கிறது என்றால், இயேசு கிறிஸ்து பிறந்த தினமாக கொண்டாடப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் கிறிஸ்தவம் ஆரம்பித்த காலத்தில் கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படவில்லை.
ஆனால் அக்காலத்திலும் அதற்கு முன்பும் டிசம்பர் 25ஆம் நாள் அன்று ரோமின் பேகன்கள் (Pagans of Rome) சனி கடவுளை கௌரவப்படுத்தும் விதம் பொருட்டு சடுர்நலியா (Saturnalia) இந்த விழாவினை அந்நாளில் கொண்டாடி வந்தனர்.
இந்த விழாவில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி விருந்து உண்டு மரங்களில் அலங்கார பொருள்களிட்டு பரிசு பொருட்களை மாறி மாறி கொடுத்தும் ஆடல் பாடல்களில் தங்களை ஈடுபடுத்தி களிப்புற்றனர்.
பின்பு ரோமாபுரி ஆண்ட முதலாம் பேரரசர் கான்ஸ்டன்ட் (Constantine) என்பவர் சடுர்நலியா (Saturnalia) கொண்டாடப்பட்டு வந்த நாளான டிசம்பர் 25ஆம் நாளை இயேசு கிறிஸ்து பிறந்த தினமாக அறிவித்தார்.
பின்பு பிறப்பு கி.பி. 350 இல் போப் ஜூலியஸ் டிசம்பர் 25ஆம் நாளை கிறிஸ்து இயேசு பிறந்த தினம் ஆக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இப்படியாக தான் கிறிஸ்மஸ் தினம் பிறப்பு எடுத்தது.
ஜோசப்பு-க்கும் அன்னை மரியாளுக்கும் பெத்லகேமில் இயேசு பிறந்தார். அவர் உலக மக்களை காக்க வந்த மெசியா என்று கருதப்பட்டார். கப்ரியல் என்ற தூதர் அக்குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயரிடும்மாறு மரியாளுக்கு அறிவித்தார் இம்மானுவேல் என்பதற்கு “கடவுள் நம்மோடு”. என்று பொருள்.
மேலும் கிறிஸ்துமஸ் தினத்தை எக்ஸ்மாஸ் (Xmas) இன்று ஏன் அழைக்கிறோம்?
X என்றால் கிரேக்க எழுத்தில் chris என்றும் அர்த்தம் அதனால் கிரேக்க எழுத்தின் படி எக்ஸ்மாஸ் என்று அழைக்கிறோம்.
அடுத்ததாக, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் கிறிஸ்துமஸ் தாத்தா (Santa Claus) எப்படி உருவானது என்று பார்ப்போம்.
அவர் 280 கி.பி. இல் தற்போதைய துருக்கி நாட்டில் உள்ள மயிரா, எனுமிடத்தில் செயின்ட் நிக்கோலஸ் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் பெரிய உருவமும் பெரிய இதயத்துடன் வாழ்ந்து வந்தவர்.
அவர் தம்மிடம் இருந்த உடைமைகளையும் செல்வங்களையும் கொண்டு பிறருக்கு வாரி வழங்கி உதவி செய்து வந்தார்.
அவருடைய உதவும் பன்பை சொல்ல வேண்டுமானால் இதை கண்டிப்பாக செல்ல வேண்டும். ஓர் தந்தை தன்னோடைய 3 பெண்கைளையும் அடிமைகளாக வறுமையினால் விற்க முன்வந்தார். இதை கண்டு மனம் பதைத்த செயின்ட் நிக்கோலஸ் 3 பைகளில் பணம் போட்டு கொடுத்து அப்பெண்களின் வாழ்க்கையை சீரமைத்தார்.
அவர் இறந்த நேரத்தில் அவரைச்சுற்றி தேவதைகள் அவரை தம்மோடு சொர்கத்திற்கு கொண்டு சென்றதாகவும் கூறுகின்றனர். அவர் இறந்த பின்பும் அவர் பின்பற்றி வந்த நல்ல செயல்களை மக்கள் இன்றும் பின்பற்றி வருகின்றனர்.
அவர் ஞாபகமாக மக்கள் கிறிஸ்மஸ் தினத்தில் இப்போதும் பரிசு பொருட்களை கொடுத்தும் வருகின்றனர்.
வடதுருவத்தில் வசிக்கும் மக்கள் இப்பொழுதும் கிறிஸ்மஸ் தாத்தா வானவெளியில் கலைமான்களால் (Reindeer) இழுக்கப்படும் வண்டியில் கிறிஸ்மஸ் பொருட்களைக் கொண்டு செல்கிறார் என்று நம்புகின்றனர்.
இன்றளவும் டிசம்பர் ஆறாம் தேதி சாண்டா கிளாஸ் தினமாக (Santa Claus day) கொண்டாடி வருகின்றனர்.
அடுத்ததாக கிறிஸ்துமஸ் மரம்.
கிறிஸ்துமஸ் திருவிழாவின் முக்கிய அங்கமாக காணப்படும் இம்மரமானது, பிர் மரத்தால் செய்யப்படுவது ஆகும். கிறிஸ்மஸ் மரம் அலங்காரமாக வைக்கப்படுவது முதலில் எங்கும் காணப்படவில்லை.
பதினாறாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் இவ்வழக்கம் காணப்பட்டது. பின்னர் 1841 இல் பிற நாடுகளுக்கு முக்கியமாக இங்கிலாந்துக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது எவ்வாறு என்றால், இங்கிலாந்து அரசி ராணி விக்டோரியா (Queen Victoria) ஜெர்மனி இளவரசர் ஆல்பர்ட்யை (Prince Albert) திருமணம் செய்த பிறகுதான். இவ்வழக்கம் உலகில் உள்ள பிற இடங்களுக்கும் பரவப்பட்டது.
மேலும் கிறிஸ்மஸ் மரங்களில் காணப்படும் ஒளி விளக்குகளை பற்றி நாம் சொல்லாமல் இருக்க முடியாது. இவ்வலங்காரத் திட்டத்திற்கு கோலிட்டவர் மின்சார பல்பை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசனின் உதவியாளர் எட்வர்ட் ஜான்சன் (Edward Johnson) என்பவர் ஆவார்.
இயேசுவின் போதனை மொழிகள்
“பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் எல்லாரும் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தந்து அருள்வேன்”.
“நல்ல ஆயன் நானே…என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்”.
“வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை”.
“உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்”.
“பிறர் உங்களுக்குச் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறவற்றை எல்லாம், நீங்களும் அவர்களுக்குச் செய்வீர்களாக “.
“மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்”.
“உன்மீது நீ அன்பு கொண்டு இருப்பது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் நீ அன்பு கொள்வாயாக”.
“தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை”.
கிறிஸ்மஸ் தினத்தை கொண்டாடும் நாடுகள்
இவ்வுலகில் அதிக நாடுகளில் கொண்டாடப்படும் ஒரு விழா, கிறிஸ்மஸ் விழாவாகும்.
இவ்வுலக வரைபடத்தில் சிவப்பினால் வண்ணம் செய்யப்பட்ட நாடுகள் அனைத்தும் கிறிஸ்மஸ் விழாவினை பொதுத் திருவிழாவாக அறிவித்த நாடுகளாகும்.
கிறிஸ்மஸ் வெறும் பண்டிகை திருவிழா மட்டுமல்ல, நாம் அனைவரும் ஒருவர் ஒருவர் இணைந்து ஒருவருக்கொருவர் பரிசு பொருள்களை கொடுத்தும், அன்போடும் அரவணைப்போடும் ஒருவருக்கு ஒருவர் , உதவி தேவைப்படும் நேரத்தில் உதவியும், அவர்களுக்கு பெருந்துணையாக இருந்து, ஒன்றிணைந்து வாழ்க்கையில் நிம்மதியாக, சிறப்புற்று வாழவும் வழி செய்கிறது.
இவ்வுலகில் கிறிஸ்து பிரான் பிறந்ததின் மூலம் ஒரு புதிய ஆரம்பம் உருவானது என்பது நாம் நினைவில் கொள்ள வைக்கிறது.
இயேசு கிறிஸ்து எவ்வாறு இவ்வுலகில் தம் உயிரை தியாகம் செய்து மக்களின் பாவங்களை போக்கி, மக்களை சொர்கத்திற்கு அழைத்துச் செல்ல தம் வாழ்க்கையை தியாகம் செய்தாரோ, அது போல் நாமும் மற்றவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களும் நலம் பெற, நம்மால் அவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்து கொள்ளவும் உதவியாக இருக்க வேண்டும், என்பதனை நமக்கு நினைவுபடுத்துகிறது.
மேலும் இது கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், அனைத்து மதச்சாரரும் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு விழாவாகவும் இருக்கிறது. எனவே கிறிஸ்துமஸ் தின விழாவை நாம் அனைவரும் நம்முடைய குடும்பத்தாரும் சுற்றத்தாரோடும் நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ச்சியாக வாழ்வோமாக. இவ்மகிழ்ச்சியோடு நாம் இனி வரப்போகிற 2025 ஆம் ஆண்டை தொடங்கலாம் என்று அந்த இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்.