HomeTNPSC GROUP 4Tamil Ilakkanam Pirithu Eludhuga – பிரித்து எழுதுக

Tamil Ilakkanam Pirithu Eludhuga – பிரித்து எழுதுக

THATSTAMIL-GOOGLE-NEWS

Tamil Ilakkanam Pirithu Eludhuga – பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக – Pirithu Eludhuga for TNPSC GROUP2 and GROUP4, VAO EXAMS

சமச்சீர் பாடப்புத்தகம் மற்றும் புதிய பாட புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ் புத்தகத்தில் இருந்து பிரித்து எழுதுக என்ற தலைப்பில் வினாக்கள் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு நோக்கில் சில முக்கியமான பிரித்து எழுதுக வினாக்களும் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

6ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
  1. அமுதென்று – அமுது + என்று
  2. நிலவென்று – நிலவு + என்று
  3. செம்பயிர் – செம்மை + பயிர்
  4. எட்டுத்திசை – எட்டு + திசை
  5. சீரிளமை – சீர்மை + இளமை
  6. தமிழெங்கள் – தமிழ் + எங்கள்
  7. இடப்புறம் – இடது + புறம்
  8. பொய்யகற்றும் – பொய் + அகற்றும்
  9. பாட்டிருக்கும் – பாட்டு + இருக்கும்
  10. வெண்குடை – வெண்மை + குடை
  11. பொற்கோட்டு – பொன் + கோட்டு
  12. அஃறிணை – அல் + திணை
  13. பாகற்காய் – பாகு +அல் + காய்
  14. அவனளிபோல் – அவன் + அளிபோல்
  15. கொங்கலர் – கொங்கு + அலர்
  16. வழித்தடம் – வழி + தடம்
  17. வேதியுரங்கள் – வேதி + உரங்கள்
  18. நன்மாடங்கள் – நன்மை + மாடங்கள்
  19. முத்துச்சுடர் – முத்து + சுடர்
  20. நிலத்தினிடையே – நிலத்தின் + இடையே
  21. தட்பவெப்பம் – தட்பம் + வெப்பம்
  22. ஏனென்று – ஏன் + என்று
  23. தரையிறங்கும் – தரை + இறங்கும்
  24. நிலவொளி – நிலவு + ஒளி
  25. கண்டறி – கண்டு + அறி
  26. மருத்துவத்துறை – மருத்துவம் + துறை
  27. இல்லாதியங்கும் – இல்லாது இயங்கும்
  28. ஒளடதமாம் – ஔடதம் + ஆம்
  29. செயலிழக்க – செயல் + இழக்க
  30. இடமெல்லாம் – இடம் + எல்லாம்
  31. குற்றமில்லாதவர் – குற்றம் + இல்லாதவர்
  32. மாசற – மாசு + அற
  33. சிறப்புடையார் – சிறப்பு + உடையார்
  34. கைப்பொருள் – கை + பொருள்
  35. மானமில்லா – மானம் + இல்லா
  36. பசியின்றி – பசி + இன்றி
  37. படிப்பறிவு – படிப்பு + அறிவு
  38. அறிவுடைமை – அறிவு + உடைமை
  39. இவையெட்டும் – இவை + எட்டும்
  40. காட்டாறு – காடு + ஆறு
  41. நன்றியறிதல் – நன்றி + அறிதல்
  42. கண்ணுறங்கு – கண் + உறங்கு
  43. பாட்டிசைத்து – பாட்டு + இசைத்து
  44. பொறையுடைமை – பொறை + உடைமை
  45. நீலவான் – நீலம் + வான்
  46. ஓய்வற – ஓய்வு + அற
  47. நின்றிருந்த – நின்று + இருந்த
  48. விண்வெளி – விண் + வெளி
  49. ஆழக்கடல் – ஆழ + கடல்
  50. அவ்வுருவம் – அ + உருவம்
  51. மலையெல்லாம் – மலை + எல்லாம்
  52. இன்னயிர் – இனிமை + உயிர்
  53. இன்புற்றிருக்க – இன்புற்று + இருக்க
  54. வண்ணப்படங்கள் – வண்ணம் + படங்கள்
  55. பண்டமாற்று – பண்டம் + மாற்று
  56. கல்லெடுத்து – கல் + எடுத்து
  57. பொருளுடைமை – பொருள் + உடைமை
  58. உள்ளுவதெல்லாம் – உள்ளுவது + எல்லாம்
  59. போகிப்பண்டிகை – போகி + பண்டிகை
  60. வாழையிலை – வாழை + இலை
  61. பொங்கலன்று – பொங்கல் + அன்று
  62. கையமர்த்தி – கை + அமர்த்தி
  63. நாடென்ற – நாடு + என்ற
  64. நானிலம் – நான்கு + நிலம்
  65. பெருவானம் – பெருமை + வானம்
  66. வணிகச்சாத்து – வணிகம் + சாத்து
  67. கலமேறி – கலம் + ஏறி
  68. அடிக்குமலை – அடிக்கும் + அலை
  69. கதிர்ச்சுடர் – கதிர் + சுடர்
  70. மூச்சடக்கி – மூச்சு + அடக்கி
  71. விரிவடைந்த – விரிவு + அடைந்த
  72. நூலாடை – நூல் + ஆடை
  73. எதிரொலிக்க – எதிர் + ஒலிக்க
  74. தம்முயிர் – தம் + உயிர்
  75. தானென்று – தான் + என்று
  76. எளிதாகும் – எளிது + ஆகும்
  77. பாலையெல்லாம் – பாலை + எல்லாம்
7ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
  1. தந்துதவும் – தந்து + உதவும்
  2. இரண்டல்ல – இரண்டு + அல்ல
  3. வானொலி – வான் + ஒலி
  4. காடெல்லாம் – காடு + எல்லாம்
  5. கிழங்கெடுக்கும் – கிழங்கு + எடுக்கும்
  6. பெயரறியா – பெயர் + அறியா
  7. ஒப்புமையில்லாத – ஒப்புமை + இல்லாத
  8. குரலாகும் – குரல் + ஆகும்
  9. மனமில்லை – மனம் + இல்லை
  10. நேற்றிரவு – நேற்று + இரவு
  11. அனைத்துண்ணி – அனைத்து + உண்ணி
  12. காட்டாறு – காட்டு + ஆறு
  13. தீதுண்டோ – தீது + உண்டோ
  14. தன்னெஞ்சு – தன் + நெஞ்சு
  15. பொருட்செல்வம் – பொருள் + செல்வம்
  16. வேட்டையாடிய – வேட்டை + ஆடிய
  17. யாதெனின் – யாது + எனின்
  18. பூட்டுங்கதவுகள் – பூட்டும் + கதவுகள்
  19. கல்லளை – கல் + அளை
  20. தோரணமேடை – தோரணம் + மேடை
  21. யாண்டுளனோ – யாண்டு + உளனோ
  22. நேரமாகி – நேரம் + ஆகி
  23. வாசலலங்காரம் – வாசல் + அலங்காரம்
  24. பெருங்கடல் – பெருமை + கடல்
  25. இவையெல்லாம் – இவை + எல்லாம்
  26. கேடில்லை – கேடு + இல்லை
  27. எவனொருவன் – எவன் + ஒருவன்
  28. ஏடெடுத்தேன் – ஏடு + எடுத்தேன்
  29. இன்றாகி – இன்று + ஆகி
  30. துயின்றிருந்தார் – துயின்று + இருந்தார்
  31. வனப்பில்லை – வனப்பு + இல்லை
  32. வண்கீரை – வண்மை + கீரை
  33. கோட்டோவியம் – கோட்டு + ஓவியம்
  34. செப்பேடு – செப்பு + ஏடு
  35. கரைந்துண்ணும் – கரைந்து + உண்ணும்
  36. நீருலையில் – நீர் + உலையில்
  37. மாரியொன்று – மாரி + ஒன்று
  38. எழுத்தாணி – எழுத்து + ஆணி
  39. எழுத்தென்ப – எழுத்து + என்ப
  40. கற்றனைத்தூறும் – கற்றனைத்து + ஊறும்
  41. என்றுரைக்கும் – என்று + உரைக்கும்
  42. உயர்வடைவோம் – உயர்வு + அடைவோம்
  43. கட்டியடித்தல் – கட்டி + அடித்தல்
  44. வார்ப்பெனில் – வார்ப்பு + எனில்
  45. தேர்ந்தெடுத்து – தேர்ந்து + எடுத்து
  46. வாய்த்தீயின் – வாய்த்து + ஈயீன்
  47. இன்புருக – இன்பு + உருக
  48. இன்சொல் – இனிமை + சொல்
  49. தன்னாடு – தன்மை + நாடு
  50. அறக்கதிர் – அறம் + கதிர்
  51. ஓடையெல்லாம் – ஓடை + எல்லாம்
  52. இவையில்லாது – இவை + இல்லாது
  53. ஞானச்சுடர் – ஞானம்+ சுடர்
  54. மலையளவு – மலை + அளவு
  55. முதுமொழி – முதுமை + மொழி
  56. எதிரொலித்தது – எதிர் + ஒலித்தது
  57. தானொரு – தான் + ஒரு
8ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
  1. என்றென்றும் – என்று + என்றும்
  2. வானமறிந்த – வானம் + அறிந்த
  3. ஐம்பால் – ஐந்து பால்
  4. இருதிணை – இரண்டு + திணை
  5. நன்செய் – நன்மை + செய்
  6. ஓடையாட – ஓடை + ஆட
  7. நீளுழைப்பு – நீள் + உழைப்பு
  8. சீருக்கேற்ப – சீருக்கு + ஏற்ப
  9. அறிந்ததனைத்தும் – அறிந்தது + அனைத்தும்
  10. விழுந்ததங்கே – விழுந்தது + ஆங்கே
  11. வானமளந்தது – வானம் + அளந்தது
  12. நெடுந்தேர் – நெடுமை + தேர்
  13. பருத்தியெல்லாம் – பருத்தி + எல்லாம்
  14. வல்லுருவம் – வன்மை + உருவம்
  15. நலமெல்லாம் – நலம் + எல்லாம்
  16. பாலூறும் – பால் + ஊறும்
  17. இவையுண்டோர் – இவை + உண்டோர்
  18. இன்னோசை – இனிமை + ஒசை
  19. இடமெங்கும் – இடம் + எங்கும்
  20. செத்திறந்த – செத்து + திறந்த
  21. தாமினி – தாம் + இனி
  22. கனகச்சுனை – கனகம் + சுனை
  23. கோயிலப்பா – கோயில் + அப்பா
  24. கலனல்லால் – கலன்+அல்லால்
  25. பகைவென்றாலும் – பகை + என்றாலும்
  26. நமனில்லை – நமன் + இல்லை
  27. சீவனில்லாமல் – சீவன் + இல்லாமல்
  28. வெங்கரி – வெம்மை + கரி
  29. கசடற – கசடு + அற
  30. பாடறிந்து – பாடு + அறிந்து
  31. வாசலெல்லாம் – வாசல் + எல்லாம்
  32. என்றிருள் – என்று + இருள்
  33. மட்டுமல்ல – மட்டும் + அல்ல
  34. காலிறங்கி – கால் + இறங்கி
  35. கயிற்றுக்கட்டில் – கயிறு + கட்டில்
  36. விலங்கொடித்து – விலங்கு + ஒடித்து
  37. காட்டையெரித்து – காட்டை + எரித்து
  38. முழவதிர – முழவு + அதிர
  39. முறையெனப்படுவது – முறை + எனப்படுவது
  40. என்றாய்ந்து – என்று + ஆராய்ந்து
  41. இதந்தரும் – இதம் + தரும்
  42. தூக்கிக்கொண்டு – தூக்கி + கொண்டு
  43. இன்பதுன்பம் – இன்பம் + துன்பம்
  44. பெற்றெடுத்தோம் – பெற்று + எடுத்தோம்
  45. விழித்தெழும் – விழித்து + எழும்
  46. கண்ணோடாது – கண் + ஓடாது
  47. பெருஞ்செல்வம் – பெருமை + செல்வம்
  48. போவதில்லை – போவது + இல்லை
  49. அக்களத்து – அ + களத்து
  50. படுக்கையாகிறது – படுக்கை + ஆகிறது
  51. கதிரென – கதிர் + என
  52. ஊராண்மை – ஊர் + ஆண்மை
  53. நம்பர்க்கங்கு – நம்பர்க்கு + அங்கு
  54. திரிந்தற்று – திரிந்து + அற்று
  55. குணங்களெல்லாம் – குணங்கள் + எல்லாம்
  56. உள்ளேயிருக்கும் – உள்ளே + இருக்கும்
  57. ஆனந்த வெள்ளம் – ஆனந்தம் + வெள்ளம்
9ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
  • கண்டெடுக்கப்பட்டுள்ளன – கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
10ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
  • அருந்துணை – அருமை + துணை
  • எந்தமிழ்நா – எம் + தமிழ் + நா
11ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
  1. அணிந்துரை – அணிந்து + உரை
  2. பொதுச்சிறப்பு – பொது + சிறப்பு
  3. தமிழரசி – தமிழ் + அரசி
  4. நாட்டுப்பண் – நாடு + பண்
  5. பொன்வண்டு – பொன் + வண்டு
  6. மணிமாலை – மணி + மாலை
  7. வாழையிலை – வாழை + இலை
  8. தமிழ்நிலம் – தமிழ் + நிலம்
  9. மலையருவி – மலை + அருவி
  10. தமிழன்னை – தமிழ் + அன்னை
  11. தென்னைமரம் – தென்னை + மரம்
  12. தேன்மழை – தேன் + மழை
  13. கனிசாறு – கனி + சாறு
  14. தமிழ்படி – தமிழ் + படி
  15. நடந்துசெல் – நடந்து + செல்
  16. படித்தநூல் – படித்த + நூல்
  17. வீடில்லை – வீடு + இல்லை
  18. முரட்டுக்காளை – முரடு + காளை
  19. அச்சுப்பலகை – அச்சு + பலகை
  20. மார்புக்கூடு – மார்பு + கூடு
  21. எஃகுக்கம்பி – எஃகு + கம்பி
  22. பஞ்சுப்பொதி – பஞ்சு + பொதி
  23. செங்கயல் – செம்மை + கயல்
  24. திருப்புகழ் – திரு + புகழ்
  25. உயர்ந்தோங்கும் – உயர்ந்து + ஓங்கும்
  26. தண்டுடை – தண்டு + உடை
  27. இயைவதாயினும் – இயைவது + ஆயினும்
  28. புகழெனின் – புகழ் + எனின்
  29. மன்னுயிர் – மன் + உயிர்
  30. பெருந்தவத்தாய் – பெருமை + தவத்தாய்
  31. என்றிவை – என்று + இவை
  32. பெருங்கலம் – பெருமை + கலம்
  33. மாசற்றார் – மாசு + அற்றார்
  34. வீட்டுத்தோட்டம் – வீடு + தோட்டம்
  35. முரட்டுக்காளை – முரடு + காளை
  36. பகட்டுவாழ்க்கை – பகடு + வாழ்க்கை
  37. சோற்றுப்பானை – சோறு + பானை
  38. கயிற்றுவண்டி – கயிறு + வண்டி
  39. காட்டுமரம் – காடு + மரம்
  40. ஆற்றுநீர் – ஆறு + நீர்
  41. வயிற்றுப்பசி – வயிறு + பசி
  42. வரவறிந்தான் – வரவு + அறிந்தான்
  43. பள்ளித்தோழன் – பள்ளி+தோழன்
  44. நிலத்தலைவர் – நிலம் + தலைவர்
  45. திரைப்படம் – திரை + படம்
  46. மரக்கலம் – மரம் + கலம்
  47. பூங்கொடி – பூ + கொடி
  48. பூந்தொட்டி – பூ + தொட்டி
  49. பூஞ்சோலை – பூ + சோலை
  50. பூப்பந்து – பூ + பந்து
  51. வாயொலி – வாய் + ஒலி
  52. மண்மகள் – மண் + மகள்
  53. கல்லதர் – கல் + அதர்
  54. பாடவேளை – பாடம் + வேளை
  55. காலங்கடந்தவன் – காலம் + கடந்தவன்
  56. பெருவழி – பெருமை + வழி
  57. பெரியன் – பெருமை + அன்
  58. மூதூர் – முதுமை + ஊர்
  59. பைந்தமிழ் – பசுமை + தமிழ்
  60. நெட்டிலை – நெடுமை + இலை
  61. வெற்றிலை – வெறுமை + இலை
  62. செந்தமிழ் – செம்மை + தமிழ்
  63. கருங்கடல் – கருமை + கடல்
  64. பசுந்தளிர் – பசுமை + தளிர்
  65. பைந்தளிர் – பசுமை + தளிர்
  66. பொற்சிலம்பு – பொன் + சிலம்பு
  67. சிறுகோல் – சிறுமை + கோல்
  68. முறையறிந்து – முறை + அறிந்து
  69. இழுக்கின்றி – இழுக்கு + இன்றி
  70. அரும்பொருள் – அருமை + பொருள்
  71. மனையென – மனை + என
  72. பயமில்லை – பயம் + இல்லை
  73. பற்பொடி – பல் + பொடி
  74. கற்பொடி – கல் + பொடி
  75. உலகனைத்தும் – உலகு + அனைத்தும்
  76. திருவடி – திரு + அடி
  77. சிற்றூர் – சிறுமை + ஊர்
  78. நீரோடை – நீர் + ஓடை
  79. கற்பிளந்து – கல் + பிளந்து
  80. புவியாட்சி – புவி + ஆட்சி
  81. அமுதென்று – அமுது + என்று
  82. மணிக்குளம் – மணி + குளம்
  83. புறந்தருதல் – புறம் + தருதல்
  84. மண்ணுடை – மண் + உடை
  85. தடந்தேர் – தடம் + தேர்
  86. காலத்தச்சன் – காலம் + தச்சன்
  87. உழுதுழுது – உழுது + உழுது
  88. பேரழகு – பெருமை + அழகு
12ஆம் வகுப்பு பிரித்து எழுதுக
  1. செம்பரிதி – செம்மை + பரிதி
  2. வானமெல்லாம் – வானம் + எல்லாம்
  3. உன்னையல்லால் – உன்னை + அல்லால்
  4. செந்தமிழே – செம்மை + தமிழே
  5. ஆங்கவற்றுள் – ஆங்கு + அவற்றுள்
  6. தனியாழி – தனி + ஆழி
  7. வெங்கதிர் – வெம்மை + கதிர்
  8. இனநிரை – இனம் + நிரை
  9. புதுப்பெயல் – புதுமை+பெயல்
  10. அருங்கானம் – அருமை+கானம்
  11. எத்திசை – எ+திசை
  12. உள்ளொன்று – உள் + ஒன்று
  13. ஒருமையுடன் – ஒருமை + உடன்
  14. பூம்பாவாய் – பூ + பாவாய்
  15. பெருங்கடல் – பெருமை + கடல்
  16. ஏழையென – ஏழை + என
  17. முன்னுடை – முன் + உடை
  18. நன்மொழி – நன்மை + மொழி
  19. உரனுடை – உரன் + உடை
தேர்வு நோக்கில் பிரித்து எழுதுக
  1. இறைஞ்சி – இறைஞ்சி + இ
  2. வாழிய – வாழ் + இய
  3. முட்டீது – முள் + தீது
  4. பனையளவு – பனை + அளவு
  5. சதுரகராதி – சதுர் + அகராதி
  6. மாண்புடையார் – மாண்பு + உடையார்
  7. தினையளவு – தினை + அளவு
  8. தமிழ்ப்பசி – தமிழ் + பசி
  9. புத்துயிருட்டி – புதுமை + உயிர் + ஊட்டி
  10. அவையஞ்சான் – அவை + அஞ்சான்
  11. பசுந்தலை – பசுமை + தலை
  12. வேண்டியதில்லை – வேண்டியது + இல்லை
  13. புகழெனக்கு – புகழ் + எனக்கு
  14. மின்னனுவியல் – மின்னனு + இயல்
  15. செங்கதிரவன் – செம்மை + கதிரவன்
  16. மெய்ஞ்ஞானம் – மெய் + ஞானம்
  17. பசியறாது – பசி + அறாது
  18. புகலிடம் – புகல் + இடம்
  19. பைங்குவளை – பசுமை + குவளை
  20. வேடமணிந்து – வேடம் + அணிந்து
  21. செந்தாமரை – செம்மை + தாமரை
  22. காட்டுயிர்கள் – காடு + உயிர்கள்
  23. ஐம்பூதங்கள் – ஐந்து + பூதங்கள்
  24. விலங்கினம் – விலங்கு + இனம்
  25. வாழிடம் – வாழ் + இடம்
  26. உயிரென – உயிர் + என
  27. சிறையிலடைத்த – சிறையில் + அடைத்த
  28. தாய்மையன்பு – தாய்மை + அன்பு
  29. மலர்க்கரம் – மலர் + கரம்
  30. உணர்வரிய – உணர்வு+அரிய
  31. உலகறிய – உலகு+அறிய
  32. உரமூட்டும் – உரம்+ஊட்டும்
  33. உலகமெலாம் – உலகம்+எலாம்
  34. உலகனைத்தும் – உலகு+அனைத்தும்
  35. உட்பொருள் – உள்+பொருள்
  36. உடையதுடையரோ – உடையது+உடையரோ
  37. உலகிதனை – உலகு+இதனை
  38. உலகத்துயர்ந்த – உலகத்து+உயர்ந்த
  39. உயிரினங்கள் – உயிர்+ இனங்கள்
  40. உள்ளமுடைமை – உள்ளம்+உடைமை
  41. ஊர்ப்புறம் – ஊர்+புறம்
  42. ஊனுடைய – உன்+உடைய
  43. ஊராண்மை – ஊர்+ஆண்மை
  44. ஊற்றாந்துணை – ஊற்று+ஆம்+துணை
  45. எடுத்தெறிய – எடுத்து+எறிய
  46. உடனெய்தும் – உடன்+எய்தும்
  47. உயிரோவியமே – உயிர்+ஓவியமே
  48. ஊரிட்ட – ஊர்+இட்ட
  49. ஊற்றுக்கோல் – ஊன்று+கோல்
  50. இயற்றமிழ் – இயல்+தமிழ்
  51. இயற்கையெய்தினார் – இயற்கை+எய்தினார்
  52. இவையுண்டு – இவை+உண்டு
  53. இலரெனினும் – இலர்+எனினும்
  54. இருப்புமுனை – இருப்பு+முனை
  55. இவருக்கிட்ட – இவருக்கு+இட்ட
  56. இளஞ்சிறுவர் – இளமை+சிறுவர்
  57. இடையீடின்றி – இடையீடு + இன்றி
  58. இணையிலா – இணை+ இலா
  59. செஞ்சொல்லை – செம்மை + சொல்லை
  60. செந்தமிழ் – செம்மை+தமிழ்
  61. சிலருண்டு – சிலர்+உண்டு
  62. சான்றோர்க்கணி – சான்றோர்க்கு + அணி
  63. சோர்விலன் – சோர்வு+இலன்
  64. சிதரசைத்து – சிதர்+அசைத்து
  65. சொல்லரிய – சொல்+அரிய
  66. செந்நெல் – செம்மை+நெல்
  67. சிறுபடை – சிறுமை+படை
  68. சினமெனும் – சினம்+எனும்
  69. சிந்தென்று – சிந்து + என்று
  70. சொல்லாய்வை – சொல் +ஆய்வை

 

Read Also,

thatstamil

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

Most Popular

Recent Comments