Homeதமிழ்வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் | V.O. Chidambaram Pillai History in Tamil | thatstamil

வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் | V.O. Chidambaram Pillai History in Tamil | thatstamil

THATSTAMIL-GOOGLE-NEWS

வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் | V.O. Chidambaram Pillai History in Tamil | thatstamil

.உ.சிதம்பரனார்

 • வ.உ.சிதம்பரனார் ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாதபிள்ளை – பார்வதி தம்பதியரின் மகனாக, 1872ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் பிறந்தார்.
 • அடிப்படை ஒட்டப்பிடாரத்திலும், உயர்நிலைக் கல்வியை தூத்துக்குடியிலும், சட்டக் கல்வியைத் திருச்சியிலும் பெற்று 1895ல் வழக்கறிஞரானார்.
 • இவர் பாலகங்காதர திலகர் கவரப்பட்டு 1905ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
 • இவர் தூத்துக்குடியில் சுதேசி பண்டக சாலையையும், தருமசங்க நெசவு சாலையையும் நிறுவினார்.
 • வ.உ.சி.யின் சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளால் எரிச்சலடைந்த ஆங்கிலேய அரசு 1908-ம் ஆண்டு மார்ச் 9ம் நாள் பின் சந்திரபாலரின் விடுதலைக் கொண்டாட்டத்தின் போது அரசாங்கத்தை அவமதித்ததாகவும், சுதந்திரத்திற்காக பொதுமக்களை தூண்டியதாகவும் கூற, இவர் மேல் வழக்கு பதிவு செய்து இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
 • அரச நிபந்தனைக்கு 20 ஆண்டுகள், சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்கு 20 ஆண்டுகள் ஆக மொத்தம் 40 ஆண்டுகள் அந்தமான் சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தவர் திருநெல்வேலி ஜில்லா செசன்ஸ் நீதிபதி ஏ.எஃப்.ஃபின்ஹே அந்தத் தீர்ப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 • முறையீட்டின் போது அவரை அந்தமான் அனுப்ப இயலாது என்பதால் கோவைச் சிறையில் அடைக்கப்பட்டார். அங்குதான் அவர் செக்கிழுக்க வைக்கப்பட்டார்.
 • இந்திய அரசு இவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செப்டம்பர் 5, 1972ல் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.
 • பிப் 2011ல் இந்திய அரசு தூத்துக்குடி துறைமுகத்திற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயர் வைத்து சிறப்பு செய்துள்ளது.
 • அவர் 1906-ம் ஆண்டு அக்டோபர் திங்களில் பாண்டித்துரைத்தேவர் தலைவராகக் கொண்டு தூத்துக்குடியில் “சுதேசி நாவாய்ச் சங்கம்” என்கிற கம்பெனியைத் தொடங்கினார்.
 • அதன் சட்ட ஆலோசகராக சேலம் சி.விஜய ராகவாச்சரியரும்.அதன் செயலாளராக சிதம்பரனாரும் திகழ்ந்தனர்.
 • காலியோ மற்றும் லாவோ என்ற இரு கப்பல்களை வாங்கி தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே இயக்கினார்.
 • இவர் மெய்யறிவு, மெய்யறம் ஆகிய நூல்களை எழுதியதுடன் விவேகபானு இந்துநேசன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும் விளங்கினார்.
 • தென்னாட்டுத் திலகர், கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் புகழப்பட்ட சிதம்பரனார் 1936-ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் இயற்கை எய்தினார்.

நூல்கள்

 • வ.உ.சி. இயற்றிய நான்கு நூல்களுமே கவிதைகளால் ஆனவைதான்.
 • மெய்யறம்
 • மெய்யறிவு
 • பாடல் திரட்டு
 • சுயசரிதை

உரை எழுதிய நூல்கள்

 • இன்னிலை – 1917
 • தொல்காப்பியம் (இளம்பூரனார் உரையுடன்) – 1928
 • சிவஞான போதம் – 1935
 • திருக்குறள் – 1935

கட்டுரைகள்

 • கடவுளும் பக்தியும்
 • கடவுள் ஒருவரே
 • மனிதனும் அறிவும்
 • மனமும் உடம்பும்
 • வினையும் விதியும்
 • விதி அல்லது ஊழ்

சிலைகள்

 • சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலக முகப்பு.
 • திருநெல்வேலி பாளையங்கோட்டை நுழைவாயில்.
 • சென்னை மெரீனா கடற்கரை.
 • தூத்துக்குடி துறைமுகம்
 • மதுரை சிம்மக்கல்
 • திருநெல்வேலி வ.உ.சி. நினைவு இல்லம்

நினைவு இல்லங்கள்

 • ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி. யின் இல்லம். தமிழ்நாடு அரசு வ.உ.சிதம்பரனார் பிறந்த தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊரில் வ.உ.சிதம்பரனார் இல்லம் அமைத்துள்ளது.
 • இதில் நூலகம் ஒன்று அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இங்கு வ.உ.சி. அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் தலை

 • வ. உ. சிதம்பரம் பிள்ளை நினைவு அஞ்சல் தலை, ஆண்டு 1972
 • வ.உ.சி. யின் நூற்றாண்டு விழாவின் போது முன்னாள் பிரதம மந்திரி திருமதி. இந்திரா காந்தி அம்மையாரால் 5 செப்டம்பர் 1972 அன்று வெளியிடப்பட்டது.

திரைப்படம்

 • வ.உ.சி. யின் வாழ்க்கை வரலாறு கப்பலோட்டிய தமிழன் என்ற பெயரில் வெளியானது. நடிகர் திலகம் திரு. சிவாஜி கணேசன் அவர்கள் வ.உ.சியாகத் தோன்றினார். திரு. டி. ஆர். பந்துலு அவர்கள் படத்தைத் தயாரித்து இயக்கினார்.

செக்கு

 • கோயம்புத்தூர் மத்தியசிறையில் வ.உ.சி. இழுத்த செக்கு சென்னை காந்தி நினைவு மண்டபத்தில் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது.

துறைமுகம்

 • தூத்துக்குடி துறைமுகம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

இதையும் படிக்கலாமே

சுப்பிரமணிய சிவா பற்றிய தகவல்கள் | Subramaniya Siva History in Tamil

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments