Homeசித்த மருத்துவம்மூல நோய் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் அற்புத மூலிகைகள்

மூல நோய் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் அற்புத மூலிகைகள்

THATSTAMIL GOOGLE NEWS

மூல நோய் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் அற்புத மூலிகைகள்

உள் அழல் ஆற்றி( Demulcent )

உடற் கட்டுகள் சிதைக்கப்படும்போது அல்லது நோய்க் கிருமிகளால் அழிக்கப்படும் போது ஏற்படு கின்ற அழற்சியையும் ( Tnflammation ) உறுத்தலையும் ( Irritation ) நீக்கக் கூடிய பொருள் உள் அழல் ஆற்றியாகும்.

The drug that sooths or Protects tissues and mucoun membranes from irritation.

🪴முக்கிய மூலிகைகள்🪴

🔷குங்கிலியம்
🔷அதிமதுரம்
🔷ஆமணக்கு
🔷செம்பருத்தி
🔷வெண்ணெய்
🔷சீந்தில்
🔷இலுப்பை
🔷தேற்றான் கொட்டை
🔷மணத் தக்காளி
🔷தண்ணீர் விட்டான் கிழங்கு

மூல நோய்

உபயோகிக்கும் முறைகள்

🪴குங்கிலியம்🪴

இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் குக்கில் வெண்ணெய் மூலச்சூடு , வெளிமூலம் , மூல எரிவு போன்ற நோய்களில் வெளிப்பிரயோகமாக உபயோகிக்க சுகம் தரும். அத்துடன் குங்கிலியம் வெண்ணெய் மேற்கூறிய நோய் நிலைகளில் உட் பிரயோகமாகவும் ஏலத்துடன் சேர்த்து கொடுக்கலாம்.

🪴அதிமதுரம்🪴

அதிமதுரத்தை நீரில் போட்டு அவித்து எடுக்கும் தடிப்பான பானத்தை அதிமதுரப் பால் எனலாம்.

இவற்றை வேண்டியளவு அருந்திவர உணவுப் பாதையில் ஏற்படும் விரணங்கள் ஆறும்.

🪴துத்தி🪴

இதன் விதையைப் பொடித்து சீனி கூட்டி 250-500 மி.கி அளவு காலை மாலை சாப்பிட்டு வர , உட் சூடு நீங்கும்.

இதன் இலையை நெய் தடவி வாட்டி மூலத்துக்குப் போட்டுக் கட்டிவர மூலச்சூடு , மூலமுனை ஆகியவை ஆறும்.

🪴ஆமணக்கு🪴

இதன் எண்ணெயை எடுத்து சீலையில் நனைத்து முலைக்காம்பு வெடிப்பு , முலைக்காம்பு புண் ஆகிய வற்றுக்குப் போட ஆறும்.

🪴செம்பருத்தி🪴

மாலை சாப்பிட்டு இலைச்சாறு / குடிநீர் அருந்தி வர , உடற்குடு ஆகியவை நீங்கும் .

🪴இலுப்பை🪴

இதன் எண்ணெயைப் பித்த வெடிப்பு மற்றும் விரணங்களுக்கு பூசி வர சுகம் தரும்.

🪴தேற்றான் கொட்டை🪴

இதன் விதையினால் வெள்ளை , வெட்டை , உட் சூடு ஆகியவை தீரும். இதனைக் கொண்டு தயாரிக்கப்படும் லேகியத்தை நாகபஸ்பத்துடன் சேர்த்துக் கொடுக்க மூலநோய். உள் விரணம் தீரும.

🪴சீந்தில்🪴

சீந்திற் சர்க்கரையை அப்பிரக பஸ்பத்துடன் சேர்த்துக் கொடுக்க உடற்குடு , சுரம் நீங்கி தேகம் வன்மையடையும்.

🪴மணத் தக்காளி🪴

இதனைச் சமைத்து உண்ண வாய்ப்புண் ஆறும்.

🪴தண்ணீர் விட்டான் கிழங்கு🪴

இதன் கிழங்கை உலர வைத்துப் பொடித்து , காலை , மாலை 5 கிராம் வரை பசுப்பாலில் கொடுத்து வர வெட்டை , உட்சூடு ஆகியவை தீரும் .

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments