Homeசித்த மருத்துவம்மூலிகை பல் பொடி தயாரிப்பு முறைகள்

மூலிகை பல் பொடி தயாரிப்பு முறைகள்

THATSTAMIL-GOOGLE-NEWS

மூலிகை பல் பொடி

” பல் போனால் சொல் போச்சு ” என்பது பழமொழி. சொல் மட்டும் போவதில்லை . ஒரு வருக்கு உடல் நலமும் கெட்டுப் போகும். ‘ நொறுங்கத் தின்றால் நூறு வயது ‘ என்பதும் பழமொழியாகும். உண்ணும் உணவை நன்றாக சுவைத்தும் , மென்றும் உண்ண பற்களைப் போல் இன்றியமையாதவை வேறு உண்டோ.

மென்று உண்ணாத உணவு எளிதில் சீரணிப்பதில்லை. எளிதில் சீரணிப்பது உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது . மலக்கட்டு ஏற்படாது. மூலம் போன்ற நோய்கள் தலை காட்டாது. ஆதலால் நாம் உடல் நலத்துடன் வாழ பற்களைக் காக்க வேண்டும்.

‘ ஆலும் , வேலும் பல்லுக்குறுதி , ‘ என்பது தமிழ்ப் பழமொழி. ஆலம் விழுதாலும் , கரு வேலங் குச்சியாலும் பற்களைத் துலக்கி வருவது மிகவும் நல்லது.

பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்து போனால் பற் கூச்சம் ஏற்பட்டு பற்கள் விரைவில் தேய்ந்து கெட்டுப் போகும்.

சாம்பல் , கற்பொடி மற்றும் போலியாக செய்யப் பட்ட பற்பொடிகளையும் கொண்டு பற்களைத்துலக்கி வந்தால் பற்களின் மேலுள்ள எனாமல் நீங்கி விடும்.

முறையாகச் செய்யப்பட்ட பற்பொடிகளை பயன்படுத்த வேண்டும். காலையும் இரவும் படுக்கைக்குப் போகு முன்னும் பல் துலக்குவது மிகவும் நல்லது.

உணவுக்குப் பின் வாய் கொப்பளிப்பது என்பது சிலருக்கு மிகவும் சிரமமாக இருப்பதை நான் கண்டிருக்கிறேன். உண்ட உணவுப் பாத்திரத்திலேயே கையைச் கழுவி , வாயைத் துடைத்துக் கொள்கிறார்கள். இந்தச் சோம்பேறித் தனத்தால் விளையும் விளைவை அறிந்தும் அறியாதவர்களாவார்கள்.

ரஷ்யர்களில் ஒரு பிரிவினர் பற்களைச் சுத்தமாகத் துலக்கிய பின் மெல்லிய துணியால் பற் களைத் துடைப்பதை நான் கண்டிருக்கிறேன்.

நான் பழகிய பிரெஞ்சு டாக்டர் ஒருவர் பல் துலக்கிய பின் சிறிது எண்ணெய் அல்லது நெய்யைப் பற்களின்மேல் தடவிக்கொள்வார் . இப்படிச் செய்வதின் காரணத்தை நான் அவரிடம் கேட்ட போது அவ்வாறு செய்தால் நாம் உண்ணும் போது உணவின் சிறு துண்டுகள் பற்களின் இடுக்குகளில் எளிதில் ஒட்டிக் கொள்ளாது என்றும் , பற்களின் எனாமல் கெடாது என்றும் , வாய் நாற்றம் ஏற்படாது என்றும் கூறினார்.

நம்மவரில் பலர் தங்களின் குழந்தைகளின் பற்களைப் பற்றி சிறிதும் கவனிப்பதே இல்லை.

குழந்தைகள்கூட பல் வலியால் துடிப்பதை நாம் காண்கிறோம். குழந்தைகளின் பற்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது அவர்களின் வளர்ச்சிக்கு பெருந் துணையாகும். அவர்கள் ஒழுங்காகப் பற்களை சுத்தம் செய்கிறார்களா என்பதைப் பெரியவர்கள் கவனிக்க வேண்டும்.

குழந்தை களுக்குப் பல்வலி ஏற்பட்டு அவர்களுக்காக மருத்துவமனையில் நாம் செலவழிக்கும் நேரத்தை யும் , பணத்தையும் ஒப்பு நோக்கில் , நாளும் குழந்தைகளுக்காக ஒரு நிமிடம் செலவழிப்பது பெரிய நலமுள்ள இலாபமாகும்.

உடல் நலங் குறைந்தவர்கள் மூன்று வேளையும் பல் துலக்குவது மிகவும் நல்லது. உமட்டல் நீங்கி , பசி ஏற்படும் . உற்சாகமாக இருக்கவும் உதவும்.

துவர்ப்பாக்கு – 50கிராம்
ஆலம் விழுது – 50 கிராம்
கருவேலம்பட்டை – 5கிராம்
கிராம்பு – 5 கிராம்

செய்முறை:

நான்கு பொருட்களையும் ஒன்றாகப் போட்டு இடித்துக் கொள்ளவும். நான்கு தேக்கரண்டி அளவு தூளை முன்னூறு மி .லிட்டர் கொதி நீரில் போட்டு இளஞ்சூட்டில் வாய் கொப்பளிக்கவேண்டும்.

காலை – பகல் – இரவு படுக்கைக்கு போகும் முன் இந்த தூளையே பல் துலக்க பயன் படுத்தவும். பல் வலி நீங்கும்.

நாயுருவி வேர் – 100 கிராம்
கல்நார் – 50 கிராம்

செய்முறை :

கல்நாரை இடித்து அரைத்துக் கொள்ளவும். அதில் எலுமிச்சம் பழச்சாறை சிறுகச் சிறுக விட்டு மைபோல் அரைத்து வெயிலில் காயவைத்துக் கொள்ளவும்.

பச்சை நாயுறுவி வேரின் பட்டையையும் எலுமிச்சம்பழச் சாற்றால் அரைத்து உலர்த்தவும்.

கல்நாரையும் நாயுறுவி வேரையும் ஒன்று சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

இந்தப் பொடியைக் கொண்டு தொடர்ந்து பல் துலக்கி வர பல் வலி நீங்கும்.

மூலிகை பல் பொடி

துவர்பாக்கு – 100 கிராம்
வேப்பம் பட்டை – 100கிராம்
சுத்தம் செய்த உப்பு – 50கிராம்

செய்முறை

துவர்ப்பாக்கு , வேப்பம்பட்டை இரண்டையும் இடித்து அரைத்துக் கொள்ளவும். அரைத்ததில் உப்பைச் சேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றால் குழம்பு போல் அரைத்து வெயிலில் காய வைத்து இடித்துக் கொள்ளவும்.

ஒரு நாளைக்கு மூன்று வேளை பல் துலக்கி வர பல்வலி நீங்கும் .

கடுக்காய் தோல் -50 கிராம்
காட்டாமணக்கு வேரின் பட்டை – 50கிராம்
களிபாக்கு – 50கிராம்
காசுக்கட்டி – 50 கிராம்
கருவேலம்பட்டை – 50 கிராம்

செய்முறை

எல்லாவற்றையும் தனித் தனியாகவோ அல்லது ஒன்றாகவோ இடித்து சலித்துக் கொள்ளவும்.

நூறு மி.லிட்டர் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றிப் பிசைந்து வெயிலில் காய வைக்கவும். மீண்டும் இடித்துக் கொள்ளவும்.

நாளும் பல் துலக்கி வர பல்வலி குணமாகும்.மீண்டும் பல்வலி ஏற்படாது.

வெட்டுப்பாக்கு – 100 கிராம்
கருவேலம்பட்டை- 100கிராம்
நாயுருவி வேர் – 100 கிராம்
நிலவேம்பு – 100கிராம்
பூவரசம் பட்டை – 100 கிராம்
கருந்துளசி இலை – 100 கிராம்
வேப்பம் பட்டை – 100 கிராம்
டேபிள் சால்ட் – 100 கிராம்

பற்பொடி செய்யும் முறை

ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடித்து குறிப்பிட்டுள்ள எடை எடுத்து மண் பானையில் போட்டுக் கலந்து கொள்ளவும் , மூன்று நாட்கள் கழித்துப் பயன்படுத்தவும் .

குறிப்பு

காலையும் , இரவு படுக்கைக்குப் போகும் முன்னும் தேவையான அளவு பற்பொடியை எடுத்துப் பயன்படுத்தலாம்.

மூலிகை பல் பொடி

நிலவேம்பு -100 கிராம்
கருவேலங்காய் -100கிராம்
காட்டாமணக்குப் பட்டை- 100 கிராம்
ஆலம் விழுது- 100கிராம்
துவர்ப்பாக்கு-100கிராம்
டேபிள் சால்ட் – 100 கிராம்

செய்முறை

ஒவ்வொன்றையும் தனித்தனியாக இடித்து மண் பானையில் போட்டு காற்றுப் புகாமல் மூடி வைத்திருந்து மூன்று நாட்கள் கழித்துப் பயன் படுத்தவும்.

சீமை கல்நார் -100கிராம்

வெட்டு பாக்கு -50 கிராம்

ஆலம் விழுது -50 கிராம்

வேப்பம் பட்டை -50கிராம்

கருவேலங்காய் -50கிராம்

சோற்றுப்பு -50 கிராம்

பற்பொடி செய்முறை

சீமைக் கல்நாரை ஒரு மண் சட்டியில் போட்டு நூறு கிராம் உப்பை போட்டு ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி இருபத்து நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.

பின்பு உப்பு நீரை விலக்கி கல் நாரை மட்டும் வெயிலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவும்.

வெட்டுப் பாக்கை நன்றாக இடித்து இளம் வறுவலாக வறுத்து எடுத்து மீண்டும் இடித்துக் கொள்ளவும்.

ஆலம் விழுதை நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவும்.

வேப்பம்பட்டை , கருவேலங்காய் இவைகளையும் நிழலில் உலர்த்தி இடித்துக் கொள்ளவும். சோற்றுப்பையும் இடித்து எல்லாவற்றையும் கலந்து மீண்டும் இடித்து கொள்ளவும்.

காலையும் மாலையும் இரவு படுக்கைக்கு போகும் முன் பல் துலக்கலாம்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments