Homeஅசைவ சமையல்மட்டன் ரசம் (Mutton Rasam )

மட்டன் ரசம் (Mutton Rasam )

THATSTAMIL-GOOGLE-NEWS

மட்டன் ரசம் (Mutton Rasam )

தேவையானப் பொருட்கள் :
🔹மட்டன் எலும்புடன் – 500 கிராம் ( சிறு சிறு துண்டுகளாக )
🔹மட்டன் கொழுப்பு – 100 கிராம்
🔹பச்சை மிளகாய் – 4 ( விழுதாக அம்மிகல்லில் நசுக்கியது )
🔹கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்
🔹மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
🔹வரமிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
🔹உப்பு – தேவையான அளவு
🔹கறிவேப்பில்ல – 2 கொத்து

மசாலா அரைக்க :

🔹தக்காளி – 1 ( விழுதாக அரைத்தது ) மரசெக்கு கடலெண்ணய் – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி . சின்ன வெங்காயம் – 8
🔹பூண்டு பற்கள் – 8
🔹சீரகம் – 1 டீஸ்பூன்
🔹குருமிளகு – 1 டீஸ்பூன்

மட்டன் ரசம்

செய்முறை

🥣முதலில் ஒரு பிரஷர் குக்கரில் மட்டன் துண்டுகள் மற்றும் மட்டன் கொழுப்பை எடுத்து கொள்ளவும். அதில் உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவிலான தண்ணீர் சேர்த்து நன்றாக பிரஷர் குக்கரின் மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.

🥣பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நன்றாக மையமாக நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.

🥣பிறகு ஒரு அகலமான வாணலியில் மரசெக்கு கடலெண்ணய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

🥣பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பில்ல சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , வரமிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

🥣கடைசியாக அதில் குக்கரில் உள்ள கலவையை முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments