பொடுகு நீங்கி முடி வளர
மருந்து (தைலம்)
🔷வேப்பம் பட்டை -100 கிராம்
🔷பூவரசம் பட்டை – 100 கிராம்
🔷ஆடு தீண்டா பாளை – 100 கிராம்
🔷எட்டி பருப்பு – 100கிராம்
🔷வேப்பை எண்ணெய் – 400மி.லி
🔷தேங்காய் எண்ணெய் – 400 மி லி
தைலம் செய்முறை
🥣வேப்பம் பட்டையையும் , பூவரசம் பட்டையையும் தனித் தனியாக இடித்து குறிப்பிட்டுள்ள எடை எடுத்துக் கொள்ளவும்.
🥣எட்டிக் கொட்டையை உடைத்து குறிப்பிட்டுள்ள எடை எடுத்து ஒரு மண் சட்டியில் போட்டு முன்னூறு மி.லிட்டர் எலுமிச்சம் பழச்சாற்றை ஊற்றி இரு பத்து நான்கு மணி நேரம் ஊரவைத்து மை போல் அரைத்துக் கொள்ளவும். ஆடு தீண்டாப் பாளையையும் அரைத்துக் கொள்ளவும்.
🥣ஒரு வேப்ப எண்ணெயை ஊற்றி சிறிது சூடேற்றி வேப்பம் பட்டைத் தூளையும் பூவரசம் பட்டை தூளையும் போட்டு ஒரு நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள மூலிகைகளை போட்டு மூடவும்.
🥣சிறிது தீயில் எரிக்கவும் தைலம் பதம் வந்ததும் இறக்கவும்.
🥣தைலம் ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டி கண்ணாடிப் புட்டியில் பத்திரப்படுத்தவும்.
பயன்படுத்தும் முறை
தேவையான அளவு தைலத்தை தலையில் தேய்த்து மூன்று நிமிடங்கள் கழித்து வெந்நீரில் சிகைக்காய் தேய்த்து தலை முழுகவும்.
மூன்று நாட்களுக்கு ஒரு முறையாக எட்டு முறைகள் தலை முழுக பொடுகு நீங்கும் ; பேன் மறையும்.
குறிப்பு :
தைல முழுக்கன்று குளிர்ந்த பானங்கள் அருந்துவது நல்லதல்ல. அதோடு வேறு எண்ணெய் எதையும் தலையில் தடவி சீவிக் கொள்ளக் கூடாது.