Homeசைவ சமையல்பனீர் அல்லது பாலாடைக்கட்டி செய்முறை

பனீர் அல்லது பாலாடைக்கட்டி செய்முறை

THATSTAMIL-GOOGLE-NEWS

பனீர்(paneer) அல்லது பாலாடைக்கட்டி செய்முறை

✳ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

✳அது கொதிக்க ஆரம்பித்தவுடன் கட்டித் தயிர் அல்லது சிறிது தண்ணீர் கலந்த எலுமிச்சை சாறு விட்டு அனலைக் குறைக்கவும்.

✳பாலை ஓரிரு முறை இலேசாகக் கிளறிவிடவும்.

✳பால் முழுக்க திரிந்தவுடன் அதிலிருந்த மஞ்சள் நிறமான நீர் பிரியும் அப்போது அனலிருந்து இறக்கிவிடவும்.

✳கொஞ்ச நேரம் ஆறவைத்து , மெல்லிய துணிகொண்டு வடிகட்டவும் அல்லது தட்டையான வடிகட்டும் ஜல்லடை கொண்டு அதில் ஊற்றி வடிகட்டவும்.

✳துணியை தண்ணீர் வடியும் மட்டும் தொங்கவிடவும் பிழிய வேண்டாம்.

✳இதை ஒரு தட்டையான தட்டில் துணியுடன் போட்டு , மற்றொரு தட்டுகொண்டு அழுத்தவும் . பின் மேலேவொரு கனமான பாரம் வைக்கவும்.

✳அரைமணி நேரம் கழித்து பாரத்தை எடுத்துவிட்டு , துணியை எடுத்துவிட்டு , பின் தட்டையான பனீர்(paneer) ( பாலடைக்கட்டியை எடுத்து , விருப்பமான அளவுகளில் சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

பனீர் அல்லது பாலாடைக்கட்டி செய்முறை

✳வடிகட்டும் ஜல்லடையின் மேல் ஊற்றுவதாயிருந்தால் , தண்ணீரை சேமிக்க கீழே ஒரு பாத்திரம் வைக்கவும்.

✳தட்டையானதொரு தட்டு வடிகட்டும் ஜல்லடைக்குள் போடும் படி திரிந்த பாலின் மேல் வைத்து அழுத்தி தட்டின் மீது ஒரு பாரத்தைவைக்கவும்.

✳அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்

✳பாலில் இருந்து வடித்த தண்ணீர் WHEY தயிர்த் தெளிவி ) என்றழைக்கப்படும் . இது மிகுந்த ஊட்டச்சத்துள்ளது . அதை வீணாக்காமல் குழம்பில் ( கிரேவியில் ) உபயோகிக்கலாம். இதை தண்ணீருக்கு பதிலாக , சப்பாத்தி மாவில் கலந்து சப்பாத்தி செய்தால் அது மிருதுவாகவும் ருசியாகவும் இருக்கும்.

குறிப்பு :

பாலைத் திரிக்க போதுமான அளவு மட்டும் எலுமிச்சை சாறு சேர்க்கவும் சாறுடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உபயோகிக்கவும் எலுமிச்சை சாறு அதிகமானால் , பாலடைக்கட்டி பாலடைக்கட்டி கத்தி கொண்டு வெட்ட வராது . தூளாகிவிடும் . எலுமிச்சை ரசத்திற்கு பதில் வினிகர் ( Vincgar ) அல்லது தண்ணீரில் கரைத்த படிகாரம் கொண்டு கூட பாலைத் திரிக்கலாம் .

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments