குப்பைமேனி
குப்பைமேனிச் செடியினை எங்கும் காணலாம். சுயமாக வளரும். இச்செடியினை மாந்திரிக மூலிகையாகச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் இலை வட்டமாக இருக்கும். இது பலவியாதிகளைக் குணப்படுத்தும் சக்தி மிக்கது.
குப்பைமேனி மூலிகை மலம் கழிக்கும் ஆசன வாயிலில் தோன்றும் பவுத்திரம் என்னும் நோயைக் குணப்படுத்துகிறது .
குப்பைமேனி இலைகளை இடித்துச் சாறுபிழிந்து , சிறிது சுண்ணாம்புடன் கலந்து மேலுக்குத்தடவ விஷகடிகள் சுகமாகும்.
குப்பைமேனிச் சாற்றுடன் முக்கரணைச்சாறு , முடக்கொத்தான்சாறு இவைகளில் ஒரு அவுன்சு எடுத்து சிற்றா மணக்கு எண்ணெயில் ஒரு அவுன்சு சேர்த்துக் காய்ச்சி , வடித்தெடுத்து காலை , மாலை ஒரு தேக்கரண்டியளவு கொடுக்க மாந்தவலிப்பு குணமாகும்.
குப்பைமேனி வேரைத் துப்புரவுசெய்து உலர்த்தி நீரி லிட்டு காய்ச்சி சுண்டவைக்க வேண்டும். இக்குடிநீரைக் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் , கொக்கிப் புழுக்கள் யாவும் இறந்துவிடும்.
குப்பைமேனி இலையுடன் , மஞ்சளையும் சிறிதளவு உப்பையும் வைத்து அரைத்து சிரங்கின் மேல் பூசிய பின்னர் வெந்நீரில் குளித்துவரச் சிரங்கு நீங்கும்.