Homeசித்த மருத்துவம்கல்லீரலை பலப்படுத்தும் அற்புத மூலிகைகள்

கல்லீரலை பலப்படுத்தும் அற்புத மூலிகைகள்

THATSTAMIL-GOOGLE-NEWS

கல்லீரலை பலப்படுத்தும் அற்புத மூலிகைகள்

ஈரல் தேற்றி -Hepato – Tonic

இது வலப்பாட்டு ஈரல் ( கல்லீரல் ) வன்மையடை வதற்குப் பயன்படும் பொருளாகும்.

Drug that tones the liver.

🪴முக்கிய மூலிகைகள்🪴

🔷கரிசாலை( கரிசலாங்கண்ணி )
🔷கீழா நெல்லி
🔷மஞ்சள்
🔷காட்டு ஏலம்
🔷நெருஞ்சில்
🔷வெந்தயம்
🔷இஞ்சி

🪴உபயோகிக்கும் முறைகள்🪴

🪴கரிசாலை🪴

கரிசலாங்கண்ணி வேரை எடுத்து தூய்மையாக்கி உலரவைத்துப் பொடித்து 500 மி.கி. அளவு காலை மாலை உண்டு வர கல்லீரல் நோய்கள் நீங்கி வன்மையடையும்.

கரிசாலையைச் சமூலமாக எடுத்துத் தூய்மை செய்து , துவைத்து கற்கமாக்கி அதனை உண்ண கல்லீரல் வன்மையடையும்.

🪴கீழாநெல்லி🪴

இதன் இலை , வேர் முதலியவற்றை அரைத்து பசு மோருடன் அல்லது பசுப் பாலுடன் கலந்து கொடுக்க மஞ்சட் காமாலை நீங்கும்.

🪴மஞ்சள்🪴

மஞ்சள் நீரைக் குடித்துவர காமாலை குணமாகி ஈரல் வன்மையடையும்.

மஞ்சளைச் சுட்டுக் கருக்கி அந்த சாம்பலை வேண்டியளவு தேன் கலந்து உண்ண காமாலை ஒவ்வாமை நீங்கும்.

🪴காட்டு ஏலம்🪴

காட்டு ஏலக்காய் -1 பங்கு
வெள்ளரி வித்து 2 பங்கு

இவற்றை ஒன்று சேர்த்துக் குடிநீர் செய்து 30 மி.லி. வீதம் கொடுத்துவர ஈரல் நோய் குணமாகும்.

கல்லீரலை பலப்படுத்தும் அற்புத மூலிகைகள்

🪴நெருஞ்சில்🪴

நெருஞ்சில் சமூலம் -10 பங்கு
இலவங்கப் பட்டை -5 பங்கு
ஏலம்- 6பங்கு
சர்க்கரை / சீனி – பங்கு

இவற்றில் முதல் குறிப்பிட்ட மூன்றையும் ஒன்று சேர்த்துப் பொடித்து , அவற்றுடன் நான்காவதாகக் குறிப்பிட்ட சர்க்கரை / சீனியைச் சேர்த்து வைத்துக் கொண்டு , அதனில் ஒரு கிராம் எடுத்து அத்துடன் 150 – 250 மி.கி. அயச் செந்தூரத்தைக் கலந்து கொடுத்துவர காமாலை நீங்கும்.

🪴வெந்தயம்🪴

5 கிராம் வெந்தயத்தை எடுத்து இரவிலே குளிர் நீரில் ஊறப்போட்டு , மறுநாட் நீரையும் வெந்தையத்தையும் உட்கொள்ளவும். இவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் உட் கொண்டு வர ஈரல் வலிமை பெறும்.

🪴இஞ்சி🪴

இஞ்சியில் ஒரு சிறு துண்டை வெட்டி எடுத்துக் கொதி தேநீரில் போட்டு அவியவிட்டு , பின் பருகி வர ஈரல் வன்மையடையும் . பத்து நாட்களுக்குத் தொடர்ந்து வேண்டும்

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments