தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

கர்ப்பப்பை பலமடைய செய்யும் அற்புத மூலிகைகள்

கர்ப்பப்பை பலமடைய செய்யும் அற்புத மூலிகைகள்

🪴முக்கிய மூலிகைகள்🪴

🔷அசோகு
🔷சிறுகுறிஞ்சா
🔷வெள்ளி லோத்திரம்
🔷ஓதி
🔷கருவேலம்பட்டை
🔷பஞ்ச துவர்ப்பி

கர்ப்பப்பை

உபயோகிக்கும் முறைகள்

🪴அசோகு🪴

இதனிலிருந்து தயாரிக்கப்படும் அசோகா அரிஷ்டம் 1 – 2 மேசைக் கரண்டி அளவுப்படி தினம் இரு வேளை காலை மாலை குடித்துவர , கர்ப்பப்பை பலமுறும்.

இதன் பட்டைச் சாற்றைத் தேவையான அளவு தினம் இரு வேளை உட்கொண்டு வர , கர்ப்பப்பை வலிமை அடையும்.

🪴வெள்ளி லோத்திரம்🪴

இதன் பட்டையைத் தனித்து அல்லது ஏனைய சரக்குகளுடன் சேர்த்துக் குடிநீர் செய்து குடிக்க , பெரும்பாடு நீங்கிக் கர்ப்பப்பை வலிமை அடையும்.

🪴ஓதி🪴

இதன் பட்டையைச் சேர்த்து முறைப்படி குடிநீர் செய்து தேவையான அளவு குடித்துவர , பெரும்பாடு நீங்கிக் கர்ப்பப்பை வலிமை அடையும்.

🪴சிறு குறிஞ்சா🪴

இதன் இலையைப் பிட்டுடன் சேர்த்து அவித்துக் கொடுக்க , கர்ப்பப்பையின் பலக் குறைவு நீங்கும்.

அரிசி இடிக்கும்போது இதன் இலையைச் சேர்த்து ஐடித்து மாவாக்கி அதனை உணவுப் பண்டங்களாக செய்து உண்ணும் வழக்கமும் எமது(இலங்கை) நாட்டில் உண்டு.

🪴கருவேலம் பட்டை🪴

இதன் பட்டையைக் குடிநீரிட்டு 30 – 60 மி.லி. வரை கொடுத்து வர , பெரும்பாடு நீங்கிக் கர்ப்பப்பை பலம் அடையும்.

🪴பஞ்ச துவர்ப்பி🪴

அத்தி , இத்தி , ஆல் , அரசு , நாவல் ஆகிய பஞ்ச துவர்ப்பியில் துவர்ப்புத் தன்மை இருப்பதால் , கர்ப்பப்பை பலமாக வைத்திருக்க உதவுகின்றது.

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!