தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

இருமல்-இசிவு-காக்காய் வலிப்பு-குணமா சித்த மருத்துவம்

இருமல்-இசிவு-காக்காய் வலிப்பு-குணமா சித்த மருத்துவம்

இசிவகற்றி Antispasmodic

நரம்புகள் மூலம் விருப்பத்திற்கேற்ப இயங்க வேண்டிய தசைகள் ஒழுங்கு தவறி இயங்குவதே இசிவு எனப்படும்.

இவ்வாறு ஏற்படுகின்ற இசிவு களைக் கட்டுப்படுத்துகின்ற அல்லது அகற்றுகின்ற பொருட்களை இசிவகற்றிச் செய்கையுள்ள பொருட்கள் எனலாம்.

Drug used to relieve spasm occuring in the muscles . Spasm Convulsive , involuntary muscular contraction.

முக்கிய மூலிகைகள்

🔹அபின்
🔹ஓமம்
🔹ஆடாதோடை
🔹சதகுப்பை
🔹சிவகரந்தை
🔹கஞ்சா
🔹ஊமத்தை
🔹வெண்கொடிவேலி
🔹நஞ்சறுப்பான்
🔹அக்கராகாரம்
🔹மூங்கில்
🔹பெருங்காயம்
🔹புதினா
🔹எருக்கம் பூ

இருமல்

உபயோகிக்கும் முறைகள்

🌳அபின்🌳

அபின் -1பங்கு
மிளகுத் தூள்-2 பங்கு
சுக்குத் தூள்- 5 பங்கு
நற்சீரகத் தூள்-6 பங்கு
பாதாம் பிசின் – அரைப் பங்கு

இவற்றை ஒன்று சேர்த்து அரைத்து 65 – 130 மி.கி. அளவில் உட்கொள்ள கழிச்சல் , சூலை , நித்திரையின்மை , இசிவு ஆகியவை நீங்கும்.

🌳ஆடாதோடை🌳

ஆடாதோடை இலையின் சாறு 10-20 மி.லி. வரை எடுத்து , தேனுடன் கலந்து கொடுக்க சிறப்பாக இசிவு , குருதியழல் , இருமல் ஆகியன தீரும்.

இதன் இலையை உலர்த்தி சுருட்டுப் போல் சுற்றி புகைப்பிடிக்க இரைப்பிருமல் குறையும்.

🌳கஞ்சா🌳

இதனை மிகவும் குறைந்தளவில் கொடுக்க ( 25 மி.கி. வரை ) வயிற்று வலி , கழிச்சல் நீங்கும்.

ஊமத்தை இதன் இலையை உலர்த்திப் பொடித்து புகையாக உள்ளெடுக்க , இரைப்பிருமல் நீங்கும்.

🌳நஞ்சறுப்பான்🌳

இதன் இலையை உலர்த்திப் பொடித்து 25-30 மி.கி.வரை உள்ளெடுக்க இரைப்பிருமல் நீங்கும்.

🌳பெருங்காயம்🌳

இதனுடன் உளுந்து சேர்த்துப் பொடித்துத் தீயிலிட்டுப் புகைத்து , அப்புகையை உள்ளெடுக்க இரைப்புத் தணியும்.

இருமல்

🌳புதினா🌳

இதனுடன் சிறிது கற்பூரத்தையும் சேர்த்து அரைத்து நீரிலிட்டு அருந்த இசிவு நீங்கும் , உறக்கமும் உண்டாகும்.

🌳ஓமம்🌳

ஓமத் தீநீர்

ஓமம் 1400 கிராம்
நீர் 5600 மி . லி

இவற்றை வாலையில் போட்டு வடிக்க உண்டாவது ஓமத் தீநீர்.இதனில் 15 – 30 மி . கொடுக்க வயிற்றுவலி நீங்கும் .

🌳சதகுப்பை🌳

இதன் இலையைச் சிற்றாமணக்கெண்ணெய் விட்டுகாய்ச்சிக் கொடுக்கக் காக்கை வலிப்பு நீங்கும். இதன் பூவைக் கொண்டு தீநீர் வடித்து கொடுத்து வர , வயிற்று வலி நீங்கும்.

🌳சிவகரந்தை🌳

இதன் இலையை உலர்த்திப் பொடித்து 4-8 கிராம் வரை வெண்ணெய் சேர்த்து உள் கொடுக்க காசம் தீரும்.

🌳வெண்கொடிவேலி🌳

வெண்கொடிவேலி-ஒரு பங்கு
எருக்கன் வேர் -ஒரு பங்கு
முட்சங்கன் வேர்-ஒரு பங்கு
குங்குமப் பூ -ஒரு பங்கு

இவற்றை எடுத்துப் பொடித்து மூன்று விரல் பிரமாணம் மூன்று நாட்களுக்கு காலை , மாலை உட் கொண்டு , நான்காம் நாள் தலை முழுகி தயிரும் சோறும் சாப்பிட வலிப்புத் தீரும்.

பத்தியம் உப்பு விலக்கவும்.

🌳அக்கராகாரம்🌳

இதனைப் பொடித்து மூக்கில் போட ( நசியம் ) காக்கை வலிப்பு நீங்கும்.

🌳மூங்கில்🌳

மூங்கிலுப்பைச் சேர்த்துச் செய்யும் சூரணங் களால் இரைப்பு நோய் தணியும்.

🌳எருக்கம் பூ🌳

வெள்ளெருக்கம்பூ , மிளகு , கராம்பு இவற்றைச் சம எடையாக எடுத்து நன்கு அரைத்து 130 மி.கி. அளவு உருட்டி நிழலில் உலர்த்தி , தினம் 3 மாத்திரை வீதம் வெற்றிலையுடன் கொடுக்க இரைப்பு நோய் நீங்கும்.

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!