Homeசித்த மருத்துவம்ஆடா தொடை இலை பயன்கள்

ஆடா தொடை இலை பயன்கள்

THATSTAMIL-GOOGLE-NEWS

ஆடா தொடை இலை

வேறு பெயர் :
ஆட்டுசம் , வைத்தியமாதா , வாசாதி , ஆடாதோடை , சிங்கம் , நெடும்பா

🪴மருத்துவ பயன்கள் 🪴

🔷மூச்சுத்திணறலை நீக்கும்
🔷ஆஸ்துமாவைக் குணமாக்கும்.
🔷கண்வலி போக்கும்.
🔷வாய்வுக் கோளாறுகளை நீக்கும்.
🔷பூச்சியை கொல்லும்
🔷சிறுநீர் பெருக்கும்
🔷கசரோகம் போக்கும்
🔷கபத்தை வெளியேற்றும்

🌿ஆடா தொடை எங்கும் சுலபமாகக் கிடைக்கக்கூடிய ஒரு பச்சிலையாகும் . இது செடியினத்தைச் சேர்ந்தது . தன்னிச்சையாக வளரும். மாவிலைகள் போன்று இதன் இளைகள் இருக்கும் . இதன் பூக்கள் வெண்மையானவை . ஆடாதொடையின் இலை , பூ , பட்டை , வேர் அனைத்துமே மருத்துவப் பயனுடையவை .

ஆடா தொடை இலை

🌿காசநோயினாலும் , கபத்தினாலும் அவதியுறுவோருக்கு ஆடா தொடை இலை பெரிதும் உதவுகிறது. இதன் இலையைச் சுத்தம் செய்து , பொடியாக நறுக்கி , கைப்பிடியளவு எடுத்து நீர்விட்டுச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை , மாலை தேன் சேர்த்துக் குடித்து வந்தால் கசரோகம் படிப்படியாகக் குணமடையும்.

🌿நுரையீரலில் தேங்கிநிற்கும் கபத்தை சிறிது சிறிதாக வெளியேற்றும் . மூச்சுத் திணறல் , இரத்தவாந்தி , இருமல் போன்ற நோய்களால் அவதியுறுவோருக்கு , ஆடாதொடை இலையைக் கசக்கிப்பீழிந்து சாறு எடுத்து தேனில் கலந்து கொடுத்து வந்தால் மூச்சுத்திணறல் உடனே நிற்கும் இருமல் குணமாகும்.

🌿சீத பேதியினால் பிடிச்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆடாதொடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து கொடுக்கக் குணமாகும்.

🌿ஆஸ்துமா என்னும் சுவாசகாச நோயுள்ளவர்களுக்கு அதி குளிர் ஏற்பட்டாலும் , மழை , பனிக்காலங்களிலும் இளைப்பு ஏற்படும்.நுரையீரலில் கபம் கட்டிக் கொள்வதால் மூச்சுவிட முடியாது கஷ்டமுறுவர். விலாப்புறமாக வலி ஏற்படும். இந் நோயுள்ளவர்கள் ஆடாதொடை இலைகளைச் சேகரித்து உலர்த்தி , தூளாகச் செய்து வைத்துக் கொள்வது நல்லது. இளைப்பு ஏற் படும்போது இந்த இலைத்தூளைச் சுங்கானில் வைத்துப் புகைப் பிடிக்கலாம். இப்புகை உள்ளே போனதும் கபத்தை உடைத்து வெளியேற்றிவிடும் . நுரையீரல் அடைப்பு நீங்கும் . இது மிகச் சிறந்த அனுபவ வைத்தியமாகும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments