Homeகீரைகளின் பயன்கள்அகத்தி கீரை பயன்கள்

அகத்தி கீரை பயன்கள்

THATSTAMIL-GOOGLE-NEWS

அகத்தி கீரை பயன்கள்

வேறு பெயர் : – அகத்தியம் , அச்சம் , நுனி , கரீரம் , முனிவிருட்சம் , வக்ரபுஷ்பம் ,

வானத்தில் அகத்திய முனிவரின் நட்சத்திரம் தோன்றுகின்ற காலகட்டத்தில் அகத்திமரம் பூக்கத் தொடங்குவதால் இதற்கு அகத்தியம் என்றும் முனிவிருட்சம் என்றும் வடமொழியாளர் பெயரிட்டழைக்கின்றனர்.

இதன் பூவானது வளைந்து வக்கரித்து அரிவாள் போல் காணப்படுவதனால் இதற்கு வக்ரபுஷ்பம் என்னும் பெயரும் வழங்கப்படுகிறது.

நோய் நீக்கும் மூலிகைகளில் அகத்தியும் ஒன்று இது மரம் போன்று ( 20 அடிமுதல் 30 அடிவரை ) உயர்ந்து வளர்ந்த போதிலும் செடியினத்தைச் சேர்ந்ததேயாகும் . இச்செடி மிக விரைவில் வளரக்கூடிய பயிர்வகையைச் சார்ந்ததாயினும் நீண்ட காலம் வாழக்கூடிய தன்று ;

அகத்தி கீரை பயன்கள்

🔹கொழுப்பைக் குறைக்கும்
🔹மலம் இளக்கும்
🔹நாக்குப் பூச்சியைக் கொல்லும் சூட்டைத்தணிக்கும்
🔹தேக ஊறலை நீக்கும்
🔹பேதி உண்டாக்கும்
🔹வாய் நாற்றத்தை நீக்கும்
🔹வாய்ப் புண்ணை நீக்கும்
🔹சொறி , சிரங்கு , அரிப்பு முதலிய தோல் நோய்களைக் குணமாக்கும்
🔹நரம்புகளை வலுவடையச் செய்யும் கண்பார்வை மிகும்
🔹ஆண்மை மிகும்
🔹இளமையுண்டாகும்
🔹பெண்களுக்கு சூதகவலியை நீக்கும்.

🍀அகத்தி இலை , பூ , பட்டை , வேர் , யாவும் மருத்துவப் பயனுடையவை. ஆனால் வழக்கத்தில் இலைமட்டும்தான் உணவும் , மருந்துமாகப் பயன்பட்டுவருகின்றது.

🍀அகத்திக்கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாகச் சித்தர்களும் , மருத்துவ வல்லுதர்களும் கூறியிருக்கின்றனர்.

🍀அகத்தியின் இளம்பூவும் மொட்டுக்களும் உணவாகச் சமைத்து உண்ணப்படுவதும் உண்டு. இதன் காயையும் கறிசமைத்து உண்ணலாம்.அகத்தி இலை சிறிது கைப்புச்சுவையுடையது.

🍀இது உடலில் உண்டாகும் விஷநீர்களை முறித்து வெளியேற்றும்.
மலச்சிக்கலைப் போக்கும்.பித்தத்தால் உண்டாகும் வெப்ப நோய்களையும் உடற்சூட்டையும் தணித்து விடும்.

🍀மருந்துகளின் வேகத்தைத் தணிக்கும் , இடுமருந்துகள் ( மருத்தீடு ) வயிற்றை விட்டுக் கழியவும் இது உதவுகிறது.
நாம் உண்ணும் உணவு நன்கு சீரணமடைய அகத்திக்கீரை உதவுகிறது.

🍀பச்சையான அகத்தியிலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து மூக்கினுள் இரண்டொரு சொட்டு விட்டு வந்தால் மூக்கின் சளிச்சவ்வுகளில் ஏற்படும் அழற்சி , சலதோஷம் போன்ற நோய்கள் குணமாகும்.

🍀அகத்தியிலைகளை வாயில் வைத்துச் சுவைக்கும் போது , வாயில் கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்களை ஒழித்துக்கட்டுகிறது.

🍀உடலில் அடிபட்ட காயங்களினால் ஏற்படும் கன்றிப்போன வீக்கங்களுக்கு அகத்தியிலைகளை அரைத் துச் சுடவைத்துப் பற்றாகப் போட்டால் சிறந்த குணம் கிடைக்கும்.

🍀பாசு கொடுக்கும் தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையை உண்டுவந்தால் நன்கு பால்சுரக்கும்.

🍀தலைவலி , மலேரியா போன்ற நோய்களையும் குணமடைய செய்யும் .

🍀அசத்திக்கிரையிலிருந்து பெறப்படும் தைலம் பார்வையைத் தெளிவாக்கவும் கண்குளிர்ச்சியடையவும் பயன்படுகிறது .

🍀அகத்திப் பூவின் சாற்றை கண்பார்வைக் குறைவை நீக்கு வதற்குப் பயன்படுத்துகிறார்கள் , அகத்திப் பட்டைக் குடிநீர் வைசூரி எனப்படும் பெரியம்மை நோயின் ஆரம்ப கட்டத்தில் பயன்கொடுக்கும்.

🍀அகத்தி வேர்ப்பட்டையினை விதிப்படி குடிநீர் செய்து உட்கொண்டால் உடல் எரிவு , கை எரிவு , ஆண்குறியின் உள்ளெரிவு , மேகம் , தாகம் அனைத்தும் நீங்கும் .

🍀உணவில் வாரம் ஒருநாள் இக்கீரையை சேர்த்துச் சாப்பிடு வது நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் , வெயிலில் சுற்றி அலை பவர்கள் , கோப்பி , தேநீர் அதிகம் அருந்தி பித்தம் உடலில் அதிகப்பட்டவர்கள் மட்டும் அகத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவுடன் கொண்டால் மிகப் பயன்தரும்.

🍀ஏனையோர் மாதம் இருமுறை அகத்திக் கீரையை உண்டுவரலாம் .

🍀சிறந்த மருத்துவப் பயனுடைய இக்கீரையை அடிக்கடி உண்பதனால் நன்மைக்குப் பதில் தீமையே அதிகமாகும் . அகத்தி கீரை பத்தியத்தை முறிக்கவல்லது . ஆதலால் மருந்து உட்கொள் ளும்காலத்திலும் , பத்தியம் இருக்கும் காலத்திலும் இக்கீரையை உண்ணக் கூடாது .

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments