Homeதமிழ்திருக்குறள் பற்றிய முழு தகவல்கள் | Thirukkural History in Tamil

திருக்குறள் பற்றிய முழு தகவல்கள் | Thirukkural History in Tamil

திருவள்ளுவர் மற்றும் திருக்குறள் பற்றிய முழு தகவல்கள் | Thiruvalluvar and Thirukkural History in Tamil

Thirukkural History in Tamil

Thirukkural Introduction in Tamil | திருக்குறள்

திருக்குறள்

திருக்குறள் ➨ திரு + குறள்

பொருள்:

  • திரு ➨ செல்வம்
  • குறள் ➨ குறுகிய அடியை உடையது

“திரு” என்ற சிறப்பு சொல் திருக்குறளில் அடைமொழி பெற்று நூலைக் குறிக்கிறது.

“குறள்” என்பது இரண்டடி வெண்பாவைக் குறிக்கும்.

  • மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்கு கூறிய அறிவுரைதான் திருக்குறள் ஆகும்.
  • உலகோர் விரும்பிப் படிக்கும் தமிழ் நூலாக திருக்குறள் விளங்குகிறது.
திருக்குறள் இலக்கணம்

திருக்குறள் வெண்பாக்களினால் ஆனது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் 1 3/4 அடியில் ஆன ஒரே நூல் திருக்குறள் ஆகும்.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக செய்யுளால் (வெண்பாவால்) பெயர் பெற்ற ஒரே நூல் திருக்குறள் ஆகும்.

குறள் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் அதை ஆகுபெயர் என்கிறோம்.

திருக்குறள் என்பது அடையெடுத்த ஆகுபெயர் ஆகும்.

திருக்குறள் வரலாறு | Thirukkural History in Tamil

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை.

திருக்குறள் ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையானது.

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

திருவள்ளுவர் கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாக, தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

திருக்குறள் அதிகாரங்கள் மற்றும் திருக்குறள் இயல்கள் | Thirukkural Adhikaram and Thirukkural Iyalkal
  • திருக்குறளின் மூன்று பிரிவுகள் ➨ அறம், பொருள்,இன்பம்
  • திருக்குறள் 9 இயல்களையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டது.

திருவள்ளுவர் இயற்றிய மூன்று அதிகாரங்களான அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இம்மூன்று அதிகாரங்களிலும் உள்ள கருத்துக்களை நாம் படித்தால் மட்டுமே ஒரு மனிதன் சிறந்த மனிதனாக அனைத்து வாழ்வியல் நெறிமுறைகளையும் கற்றவனாக இவ்வுலகில் சிறப்பிக்கப்படுவான்.

திருக்குறள் படிப்பதால் பயன்
  • மனம் தெளிவடையும்.
  • மனித வாழ்க்கை செம்மையுரும்.
  • நற்பண்புகள் வளரும்.
  • எல்லா உயிர்களிடத்தும் அன்பு தழைக்கும்.

அறத்துப்பால் ➨ 38 அதிகாரம்

மனம் என்னும் கருவியை பண்படுத்தவும், பயன்படுத்தவும் தேவையான நுட்பமான அறிவினை இந்த அறத்துப்பால் பகுதியில் நாம் படித்து தெரிந்து கொள்ளலாம்.

முதல் முதலாக எழுதப்பட்ட அறத்துப்பால் பகுதியில் நான்கு இயல்கள் உள்ளன. இவற்றில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடைபிடிக்க கூடிய வாழ்வியல் நெறிமுறைகளையும் மற்றும் அறத்தையும் பற்றி கூறுகிறது.மனதின் தூய்மையை பற்றி பேசுகிறது.

  • பாயிரயியல் ➨ 4 அதிகாரம்
  • இல்லறவியல் ➨ 20 அதிகாரம்
  • துறவியல் ➨ 13 அதிகாரம்
  • ஊழியல் ➨ 1 அதிகாரம்

பொருட்பால் ➨ 70 அதிகாரம்

பொருட்பாலில் மூன்று இயல்கள் உள்ளன. பொருட்பாலில் பொது வாழ்க்கையை விளக்கி அறிவின் வழி இயங்கி பொதுக் கடமையை செய்து மனம் பண்பட்டு பயன்படும் வகையையும் பற்றி கூறியுள்ளார்.

  • அரசியல் ➨ 25 அதிகாரம்
  • அங்கவியல் ➨ 32 அதிகாரம்
  • குடியியல் ➨ 13 அதிகாரம்

காமத்துப்பால் ➨ 25 அதிகாரம்

காமத்துப்பாலில் இரண்டு இயல்கள் உள்ளன. இதில் காதல் வாழ்க்கையை விளக்கி காதல் கொண்டவரிடம் கலந்தும் கரைந்தும் மனம் பண்படும் வகையையும் பற்றி கூறியுள்ளார்.

  • களவியல் ➨ 7 அதிகாரம்
  • கற்பியல் ➨ 18 அதிகாரம்
 திருக்குறளின் வேறு பெயர்கள் | Thirukkural Other Names in Tamil
  • முதுமொழி
  • முப்பால்
  • தெய்வ நூல்
  • பொய்யாமொழி
  • வாயுறை வாழ்த்து
  • ஈரடி வெண்பா
  • தமிழ்மறை
  • தமிழர் திருமுறை
  • நீதி இலக்கியத்தின் நந்தா விளக்கு
  • தமிழ்மாதின் இனிய உயர்நிலை
  • அறிவியல் இலக்கியம்
  • குறிக்கோள் இலக்கியம்
  • பொதுமறை
  • உலகப்பொதுமறை
  • காலம் கடந்த பொதுமை நூல்
  • பொருளுரை
  • அற இலக்கியம்
  • திருவள்ளுவம்
  • உத்திரவேதம்
  • இயற்கை வாழ்வில்லம்
  • திருவள்ளுவப்பயன்
  • வாழ்த்து
திருக்குறளுக்கு உரை செய்த பதின்மர் | Thirukkural Urai
  1. தருமர்
  2. தாமத்தர்
  3. மணக்குடவர்
  4. திருமலையர்
  5. நச்சர்
  6. பரிதி
  7. பரிமேலழகர்
  8. மல்லர்
  9. பரிப்பெருமாள்
  10. காளிங்கர்
  • திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் காலத்தால் முந்தியவர் ➨ தருமர்
  • திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் காலத்தால் பிந்தியவர் ➨ பரிமேலழகர்
  • திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் ➨ மணக்குடவர்
  • திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்களில் மணக்குடவர்,பரிமேலழகர், பரிதி,பரிப்பெருமாள், காளிங்கர் ஆகிய ஐவரின் உரை மட்டுமே கிடைத்துள்ளது.
  • திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் ➨ பரிமேலழகர்
  • திருக்குறளுக்கு உரை எழுதியவர்களில் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததாகும்.
தற்காலத்தில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்
  1. ராமானுஜ கவிராயர்
  2. திரு.வி.க
  3. நாமக்கல் ராமலிங்கனார்
  4. சரவணபெருமாள் ஐயர்
  5. தண்டபாணி தேசிகர்
  6. அரசஞ் சண்முகனார்
  7. புலவர் குழந்தை
  8. பாரதிதாசன்
  9. மு.வரதராசனார்
  10. நாவலர் நெடுஞ்செழியன்
  • 1840 இல் பரிமேலழகர் உரையுடன் முதல் முதலாக திருக்குறளை பதிப்பித்தவர் ➨ ராமானுஜ கவிராயர்
  • திருக்குறள் உரைக்கொத்து ➨ திருப்பனந்தாள் வெளியீடு, ஐவரின் பழைய உரையுடன் ஆங்கில மொழிபெயர்ப்பும் சேர்ந்தது.
  • திருக்குறள் உரைவளம் ➨ தருமபுர ஆதீன வெளியீடு,ஐவரின் பழைய உரை
  • திருவள்ளுவமாலை 53 புலவர்கள் பாடியது.
  • திருக்குறள் ஆராய்ச்சி பதிப்பு ➨ கி.வா. ஜெகநாதன்
  • திருக்குறள் உரைக்களஞ்சியம் ➨ மதுரை பல்கலைக்கழகம் வெளியீடு
  • சொல்வலை வேட்டுவர் ➨ இ.சுந்தரமூர்த்தி
  • திருக்குறள் நடையியல் ➨ இ.சுந்தரமூர்த்தி
  • திருக்குறள் உரைவளம் ➨ தண்டபாணி தேசிகர்
  • திருக்குறள் உரைக்களஞ்சியம் ➨ தண்டபாணி தேசிகர்
  • வள்ளுவர் கண்ட நாடும் காலமும் ➨ தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
  • வள்ளுவம் ➨ வ.சுப. மாணிக்கம்
  • வணக்கம் வள்ளுவ ➨ ஈரோடு தமிழன்பன்
  • வாழும் வள்ளுவம் ➨ வ.செ.குழந்தைசாமி
  • திருக்குறள் நுண்பொருள் மாலை ➨ காரிரத்தினக் கவிராயர்
  • திருக்குறள் மணிவிளக்க உரை (பெரு விளக்க நூல்) ➨ க. அப்பாதுரையார்
  • திருக்குறள் அற இலக்கியம் ➨ கா. திருநாவுக்கரசு
  • தற்காலத்தில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் ➨ மு.வரதராசனார், மு.கருணாநிதி, சாலமன் பாப்பையா. இதில் சிறப்பாக கருதப்படுவது டாக்டர் மு. வரதராசனார் அவர்களின் உரையாகும்.
திருக்குறள் மொழிபெயர்ப்பு

திருக்குறள் ஆங்கிலம், இலத்தீன்,கிரேக்கம் போன்ற 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

  1. இலத்தீன் ➨ வீரமாமுனிவர்
  2. ஜெர்மன் ➨ கிரால்
  3. ஆங்கிலம் ➨ ஜி.யு.போப்
  4. பிரெஞ்சு ➨ ஏரியல்
  5. வடமொழி ➨ அப்பாசாமி தீட்சதர்
  6. ரஷ்யன் ➨ யூரிகில் சோச்
  7. இந்தி ➨ பி.டி.ஜெயின்
  8. தெலுங்கு ➨ வைத்தியநாத பிள்ளை
  9. மலையாளம் ➨ கோவிந்தம் பிள்ளை
  • திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இந்தியர் ➨ கே.எம். பாலசுப்ரமணியம்
  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இந்தியர்கள் ➨ கே.எம். பாலசுப்ரமணியம்,ராஜாஜி
திருக்குறள் சிறப்புகள் | Thirukkural in Sirappugal

“அ” கரத்தில் தொடங்கி “ன” கரத்தில் முடியும் நூல் திருக்குறளாகும்.

(அகர முதல் என தொடங்கும் முதல் குறள் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளது. இதில் ஆதி பகவன் என்பது கடவுளை குறிக்கிறது)

  • மனித நாகரீகம் பிற நாடுகளில் தோன்றும் முன்னரே மனித வாழ்வின் மேன்மைகளையும், வாழ்வியல் நெறிகளையும் வகுத்துக் காட்டிய நூல் திருக்குறளாகும்.

“தமிழ் மாதின் இனிய உயர்நிலை” என்று உலகோரால் பாராட்டப்பெறும் நூல் திருக்குறள் ஆகும்.

  • திருக்குறள் உலகப் பொதுமறை என போற்றப்படுகிறது.
  • தமிழர் திருமுறை எனப் போற்றப்படும் நூல் திருக்குறள் ஆகும்.
  • இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
  • “உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரம்ளின் மாளிகையில் உள்ள சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது”.
  • விக்டோரியா மகாராணியர் காலையில் கண்விழித்ததும் முதலில் படித்த நூல் திருக்குறள் ஆகும்.
  • திருக்குறளை 40 ஆண்டுகள் படித்துச் சுவைத்த ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
திருக்குறளின் சிறப்பை கூறிய அறிஞர்கள்

“திருக்குறள் ஒரு வகுப்பாருக்கோ ஒரு மதத்தாருக்கோ, ஒரு நிறத்தாருக்கோ ஒரு மொழியாருக்கோ ஒரு நாட்டாருக்கோ உரியதன்று, அது மன்பதைக்கு – உலகுக்கு பொது” ➨ திரு.வி.க

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு ➨ பாரதியார்

இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே ➨ பாவேந்தர் பாரதிதாசன்

வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறநன் ருணர்ந்தோர்கள் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக் கொரு நீதி ➨ மனோன்மணியம் சுந்தரனார்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பொதுநெறி காட்டிய புலவர் ➨ திருவள்ளுவர்

“திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றியிராவிட்டால், தமிழ் மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்கு தெரிந்திருக்காது”. ➨ கி.ஆ.பெ.விசுவநாதம்

உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே ➨ மாங்குடி மருதனார்

தமிழ் மொழி அழகான சித்திர வேலைப்பாடு அமைந்த வெள்ளித் தட்டு. திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள். தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது ➨ டாக்டர்.கிரால்

நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில் ➨ கவிமணி

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளின் சிறப்பு
  • திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் குறள் வெண்பாவால் 1 3/4 அடியில் ஆன ஒரே நூல் திருக்குறள் ஆகும்.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக செய்யுளால் (வெண்பாவால்) பெயர் பெற்ற ஒரே நூல் திருக்குறள் ஆகும்.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலேயே அதிக பாடல்களையும், அடிகளையும் கொண்ட நூல் திருக்குறள் ஆகும்.
  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் அதிக அறங்களை சொல்லும் நூலாக திருக்குறள் விளங்குகிறது.
திருக்குறள் பற்றிய குறிப்புகள் | Facts About Thirukkural in Tamil
  • திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டவர் ➨ மலையத்துவாசன் மகன் ஞானப்பிரகாசம்.
  • திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு ➨ 1812

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” “பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்” என்னும் பழமொழிகள் திருக்குறளின் பெருமையை விளக்குகிறது.

திருக்குறளின் சிறப்பை எடுத்துக் கூறும் நூல் ‘திருவள்ளுவமாலை’ ஆகும். இதில் 55 பாடல்கள் 53 புலவர்களால் பாடப்பட்டுள்ளது.

சிவசிவ வெண்பா,தினகர வெண்பா, வடமலை வெண்பா, சோமமேசர் முதுமொழி வெண்பா, குமரேச வெண்பா போன்றனவும் திருக்குறளின் சிறப்பையே கூறுகின்றன.

  • திருக்குறளின் முன்னோடி எனப்படுவது ➨ புறநானூறு
  • திருக்குறளின் விளக்கம் எனப்படுவது ➨ நாலடியார் (சமண முனிவர்கள்)
  • திருக்குறளின் பெருமையை கூறுவது ➨ திருவள்ளுவமாலை
  • திருக்குறளின் சாரம் எனப்படுவது ➨ நீதிநெறி விளக்கம் (குமரகுருபரர்)
  • திருக்குறளின் ஒழிபு எனப்படுவது ➨ திருவருட்பயன் (உமாபதி சிவம்)
  • பொருட்பாலின் முடிமணியாக விளங்குவது ➨ ஒழிபியல்
  • திருவள்ளுவருக்கு தங்க நாணயம் வெளியிட்டவர் ➨ எல்லீஸ் துரை
  • திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்.
  • திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ➨ ஒன்பது
  • “ஏழு” என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
  • திருக்குறளில் “கோடி” என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
  • “எழுபது கோடி” என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
  • திருக்குறளின் முதல் பெயர் ➨ முப்பால்
  • திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை ➨ 380
  • திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை ➨ 700
  • திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் எண்ணிக்கை ➨ 250
  • திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் எண்ணிக்கை ➨ 1330
  • திருக்குறளில் “தமிழ்” என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.
  • திருக்குறளில் உள்ள சொற்கள் எண்ணிக்கை ➨ 14,000
  • திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள் எண்ணிக்கை ➨ 42,194
  • திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் ➨ அனிச்சம் மற்றும் குவளை மலர்கள்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் ➨ நெருஞ்சிப்பழம்
  • திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை ➨ குன்றிமணி
  • திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரெழுத்து ஒரு மொழி ➨ னி
  • திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து ➨ ஔ
  • திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் ➨ குறிப்பறிதல்
  • திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் ➨ பனை, மூங்கில்
  • திருக்குறளில் ஒரு சொல் அதிக அளவில், அதே குறளில் வருவது பற்று ➨ ஆறு முறை வருகிறது.
  • திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள் ➨ ளீ, ங
  • திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் ➨ தமிழ், கடவுள்
திருவள்ளுவர் பற்றிய பாரதியார், பாரதிதாசன் கவிதை

“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” ➨ பாரதியார்

“தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந் தொறும்உணர் வாகும் வண்ணம்
கொள்ளு மறம்பொருள் இன்ப மனைத்தும் கொடுத்த திரு
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே” ➨ பாவேந்தர் பாரதிதாசன்

திருக்குறள் தொடர்பான செய்திகள் மற்றும் மேற்கோள்கள்

திருக்குறளின் சிறப்பை உணர்த்தும் பாடல் வரிகள்

“அணுவை துளைத்தேழ் கடலைப் புகட்டிக்குறுகத் தறித்த குறள்” ➨ ஒளவையார்

ஒளவையாரால் இயற்றப்பட்டதாக கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப் பாடலில் திருக்குறளைப் பற்றி குறிப்பிடுகிறார். பாடல் வரிகள் பின்வருமாறு,

தேவர் குறளும் திரு நான்மறை முடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒருவாசகம் என்றுணர்.  ➨ ஒளவையார்

“கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி குறுகத் தரித்த குறள் ➨ இடைக்காடர்

தினையளவு போதாச் சிறுபுல் நீர்நீண்ட
பனையளவு காட்டும் படித்தால் ➨ கபிலர்

உள்ளுதோ றுள்ளுதோ றுள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்புமாங்குடி மருதனார்

வள்ளுவரும் தம்குறள் பாவடியால் வையத்தார்
உள்ளுவதெல்லாம் அளந்தார் ஓர்ந்து ➨ பரணர்

“என்றும் புலரா தியாணர்நாட் செல்லுகினும்
நின்றலர்ந்து தேன்பிலிற்றும் நீர்மையதாய்க் – குன்றாத
செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம்
மன்புலவன் வள்ளுவன்வாய்ச் சொல்” ➨ இறையனார்

புத்தகம் நூறு புரட்டிக் களைப்புற்றுச்
சித்தம் கலங்கித் திகைப்பதேன் – வித்தகன்
தெய்வப் புலவர் திருவள்ளுவர்சொன்ன
பொய்யில் மொழிஇருக்கும் போது

செந்தமிழ்ச் செல்வத் திருக்குறளை நெஞ்சமே
சிந்தனை செய்வாய் தினம்

நீதித்திருக்குறளை நெஞ்சாரத் தம் வாழ்வில்
ஒதித்தொழுது எழுக ஓர்ந்து ➨ கவிமணி

“வெல்லாத தில்லை திருவள்ளுவன்வாய் விளைந்த வற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே அழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே” ➨ பாவேந்தர் பாரதிதாசன்

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் யல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே – முப்பாலின்
தெய்வத் திருவள்ளுவர்செய் திருக்குறளால்
வையத்து வாழ்வார் மனத்து ➨ தேனீக்குடி கீரனார்

133 திருக்குறள் அதிகாரங்கள் | Thirukkural Adhikaram 133 in Tamil

133 திருக்குறள் அதிகாரங்கள்

  • திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் கீழே தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.
  • அறத்துப்பால் அதிகாரங்கள் 1 முதல் 38 வரை உள்ளன. அறத்துப்பாலில் மொத்தமாக 38 அதிகாரங்கள் உள்ளது.
  • பொருட்பால் அதிகாரங்கள் 39 முதல் 108 வரை உள்ளன. பொருட்பாலில் மொத்தமாக 70 அதிகாரங்கள் உள்ளது.
  • இன்பத்துப்பால் அதிகாரங்கள் 109 முதல் 133 வரை உள்ளன.இன்பத்துப் பாலில் மொத்தமாக 25 அதிகாரங்கள் உள்ளது.

அறத்துப்பால் ➨ 38 அதிகாரங்கள்

பாயிரவியல் ➨ 4 அதிகாரங்கள்

1. கடவுள் வாழ்த்து
2. வான் சிறப்பு
3. நீத்தார் பெருமை
4. அறன் வலியுறுத்தல்

இல்லறவியல் ➨ 20 அதிகாரங்கள்

5. இல்வாழ்க்கை
6. வாழ்க்கைத் துணைநலம்
7. மக்கட்பேறு
8. அன்புடைமை
9. விருந்தோம்பல்
10. இனியவை கூறல்
11. செய்ந்நன்றி அறிதல்
12. நடுவுநிலைமை
13. அடக்கம் உடைமை
14. ஒழுக்கம் உடைமை
15. பிறன் இல் விழையாமை
16. பொறை உடைமை
17. அழுக்காறாமை
18. வெஃகாமை
19. புறங்கூறாமை
20. பயனில சொல்லாமை
21. தீவினை அச்சம்
22. ஒப்புரவு அறிதல்
23. ஈகை
24. புகழ்

துறவியல் ➨ 13 அதிகாரங்கள்

25. அருள் உடைமை
26. புலால் மறுத்தல்
27. தவம்
28. கூடா ஒழுக்கம்
29. கள்ளாமை
30. வாய்மை
31. வெகுளாமை
32. இன்னா செய்யாமை
33. கொல்லாமை
34. நிலையாமை
35. துறவு
36. மெய் உணர்தல்
37. அவா அறுத்தல்

ஊழியல் ➨ 1 அதிகாரங்கள்

38. ஊழ்

பொருட்பால் ➨ 70 அதிகாரங்கள்

அரசியல் ➨ 25 அதிகாரங்கள்

39. இறைமாட்சி
40. கல்வி
41. கல்லாமை
42. கேள்வி
43. அறிவுடைமை
44. குற்றம் கடிதல்
45. பெரியாரைத் துணைக்கோடல்
46. சிற்றினம் சேராமை
47. தெரிந்து செயல்வகை
48. வலி அறிதல்
49. காலம் அறிதல்
50. இடன் அறிதல்
51. தெரிந்து தெளிதல்
52. தெரிந்து வினையாடல்
53. சுற்றம் தழால்
54. பொச்சாவாமை
55. செங்கோன்மை
56. கொடுங்கோன்மை
57. வெருவந்த செய்யாமை
58. கண்ணோட்டம்
59. ஒற்றாடல்
60. ஊக்கம் உடைமை
61. மடி இன்மை
62. ஆள்வினை உடைமை
63. இடுக்கண் அழியாமை

அங்கவியல் ➨ 32 அதிகாரங்கள்

64. அமைச்சு
65. சொல்வன்மை
66. வினைத்தூய்மை
67. வினைத்திட்பம்
68. வினை செயல்வகை
69. தூது
70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்
71. குறிப்பு அறிதல்
72. அவை அறிதல்
73. அவை அஞ்சாமை
74. நாடு
75. அரண்
76. பொருள் செயல்வகை
77. படைமாட்சி
78. படைச்செருக்கு
79. நட்பு
80. நட்பு ஆராய்தல்
81. பழைமை
82. தீ நட்பு
83. கூடா நட்பு
84. பேதைமை
85. புல்லறிவாண்மை
86. இகல்
87. பகை மாட்சி
88. பகைத்திறம் தெரிதல்
89. உட்பகை
90. பெரியாரைப் பிழையாமை
91. பெண்வழிச் சேறல்
92. வரைவில் மகளிர்
93. கள் உண்ணாமை
94. சூது
95. மருந்து

குடியியல் (அ) ஒப்பியல் ➨ 13 அதிகாரங்கள்

96. குடிமை
97. மானம்
98. பெருமை
99. சான்றாண்மை
100. பண்புடைமை
101. நன்றியில் செல்வம்
102. நாண் உடைமை
103. குடி செயல்வகை
104. உழவு
105. நல்குரவு
106. இரவு
107. இரவச்சம்
108. கயமை

காமத்துப்பால் ➨ 25 அதிகாரங்கள்

களவியல் ➨ 7 அதிகாரங்கள்

109. தகையணங்குறுத்தல்
110. குறிப்பறிதல்
111. புணர்ச்சி மகிழ்தல்
112. நலம் புனைந்து உரைத்தல்
113. காதற் சிறப்பு உரைத்தல்
114. நாணுத் துறவு உரைத்தல்
115. அலர் அறிவுறுத்தல்

கற்பியல் ➨ 18 அதிகாரங்கள்

116. பிரிவாற்றாமை
117. படர் மெலிந்து இரங்கல்
118. கண் விதுப்பு அழிதல்
119. பசப்பு உறு பருவரல்
120. தனிப்படர் மிகுதி
121. நினைந்தவர் புலம்பல்
122. கனவு நிலை உரைத்தல்
123. பொழுது கண்டு இரங்கல்
124. உறுப்பு நலன் அழிதல்
125. நெஞ்சொடு கிளத்தல்
126. நிறை அழிதல்
127. அவர் வயின் விதும்பல்
128. குறிப்பு அறிவுறுத்தல்
129. புணர்ச்சி விதும்பல்
130. நெஞ்சொடு புலத்தல்
131. புலவி
132. புலவி நுணுக்கம்
133. ஊடல் உவகை

Thiruvalluvar History in Tamil

திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறு | Thiruvalluvar Biography in Tamil

thiruvalluvar-திருவள்ளுவர்-படம்

Thiruvalluvar | திருவள்ளுவர்

பெயர் ➨ வள்ளுவர்

அடைமொழி சிறப்பு பெயர் ➨ திருவள்ளுவர்

திருவள்ளுவர் பிறந்த ஊர் ➨ (சென்னை மாவட்டம், மயிலாப்பூர் பகுதி)

திருவள்ளுவரின் பெற்றோர் ➨ ஆதி – பகவன் (இதற்கு சரியான ஆதாரம் இல்லை)

திருவள்ளுவரின் மனைவி ➨ வாசுகி

திருவள்ளுவர் ஆண்டு ➨ கி.மு. 31

திருவள்ளுவர் தினம் ➨ தைத்திங்கள் இரண்டாம் நாள்

திருவள்ளுவர் இயற்றிய நூல்கள் ➨ திருக்குறள்

திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் ➨ 133 அதிகாரங்கள்

திருக்குறளில் உள்ள குறட்பாக்கள் ➨ 1330

திருக்குறள் மொத்த இயல்கள் ➨ ஒன்பது

திருக்குறள் அடைமொழி ➨ முப்பால்

முப்பால் என்பது அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்

திருவள்ளுவர் சிலை ➨ கன்னியாகுமரியில் உள்ளது.

திருவள்ளுவர் சிலை அடி உயரம் ➨ 133 அடி

திருவள்ளுவர் மணிமண்டபம் உள்ள இடம் ➨ சென்னை வள்ளுவர் கோட்டம்

திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனப் பொதுநெறி காட்டிய புலவர் ➨ திருவள்ளுவர்

  • வாழ்வியல் கருத்துக்களை சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்.
  • திருவள்ளுவர் சாதி,மதம்,இனம்,மொழி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்து மக்களாலும் போற்றப்படக்கூடிய ஒரு தமிழர் ஆவார்.
  • அனைத்து நாட்டினரும், இனத்தினரும் தமக்கே உரியதெனக் கொண்டாடும் வகையில் பொதுமைக் கருத்துக்களை திருக்குறளில் படைத்தவர்.
  • இரண்டு அடியில் உலகில் உள்ள அனைத்து தத்துவங்களையும் குறிப்பிடுவதால் திருக்குறள் “ஈரடி நூல்” என்று அழைக்கப்படுகிறது.
திருவள்ளுவருக்கு தமிழ்நாடு அரசு செய்த சிறப்பு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் மணிமண்டபத்தின் சிறப்பு என்னவென்றால், திருவள்ளுவர் இயற்றிய அனைத்து குறள்களும் அதாவது 1330 குறள்களும் பதிக்கப்பட்டு அதற்கு முழு விளக்கங்களும் எழுதப்பட்டு உள்ளது.

திருவள்ளுவருக்கு அவர் எழுதிய 133 அதிகாரங்களின் நினைவாக அவருடைய திருவுருவ சிலையானது 133 அடி உயரத்தில் இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் சிறப்பு பெயர்கள் | Thiruvalluvar Other Names in Tamil
  • தேவர்
  • முதற்பாவலர்
  • தெய்வப்புலவர்
  • நான்முகனார்
  • மாதானுபங்கி
  • வள்ளுவ நாயனார்
  • பெருநாவலர்
  • பொய்யில் புலவர்
  • செந்நாப் போதார்
திருவள்ளுவர் காலம் | Thiruvalluvar Year 
  • திருவள்ளுவர் காலம் கி.மு. 31 என்று கூறுவர். இதை தொடக்கமாகக் கொண்டே ‘திருவள்ளுவர் ஆண்டு’ கணக்கிடப்படுகிறது.

திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை

  • கிறிஸ்து ஆண்டு (கி.பி) + 31 = திருவள்ளுவர் ஆண்டு

எடுத்துக்காட்டு:

2023 + 31 = 2054

(கி.பி. 2023-ஐ) திருவள்ளுவர் ஆண்டில் குறிப்பிடும் போது 2054 என்று கூறுவோம்.

 திருவள்ளுவர் தினம் | Thiruvalluvar Day

தைத்திங்கள் 2 ஆம் நாளை திருவள்ளுவர் தினமாக தமிழக அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது.

  • திருவள்ளுவர் தினம் ➨ தைத்திங்கள் 2 ஆம் நாள்

 

திருவள்ளுவரின் முக்கிய மேற்கோள்கள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.

நீரின்றி அமையாது உலகு

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

எண்ணித் துணிக கருமம்.

உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.

மிகினும், குறையினும் நோய்.

பண்புடையார் பட்டுண்டு உலகம்

சிரிக்கத் தெரியாதவர்களுக்கு பகல் பொழுதும் இருட்டே ஆகும்.

தன்நெஞ்சறிவது பொய்யற்க

அறிவு அற்றம் காக்கும் கருவி.

பொறுத்தார்க்கு பொன்றும் துணையும் புகழ்.

ஈதல் இசைபட வாழ்தல்

பணியுமாம் என்றும் பெருமை.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன்

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

கண்ணுக்கு அணிகலன் கண்ணோட்டம்.

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

நல்லவர் நட்பு வளர்பிறை வளரும்

கேடில் விழுச்செல்வம் கல்வி

காண முயலெய்த அம்பில்

அன்பின் வழி வந்த கேண்மை

உறுபசியும் ஊவாப் பிணியும் செறு பகையும்

அடக்கம் அமரருள் உய்க்கும்.

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்

தோன்றின் புகழோடு தோன்றுக.

பொருளில்லாருக்கு இவ்வுலகம் இல்லை

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இடுக்கண் வருங்கால் நகுக.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

உள்ளத்தணையது உயர்வு

முயற்சி திருவினையாக்கும்.

Thirukkural and Thiruvalluvar English Overview

Thiruvalluvar

 

Who is Thiruvalluvar?

Thiruvalluvar commonly known as Valluvar, was a celebrated Tamil poet and philosopher. He is best known as the author of the Thirukkural, A collection of couplets on Ethics, Political and Economical matters, and Love…etc

Thiruvalluvar in Tamil ➨ திருவள்ளுவர்

Thiruvalluvar Birth Place ➨ Mylapore (Chennai,Tamil Nadu)

Thiruvalluvar Wife Name ➨ Vasuki

Thiruvalluvar Year ➨ 31 BCE

Thiruvalluvar Day ➨ Thaithingal Irandam Naal January Month

Thiruvalluvar Statue ➨ Kanyakumari

Thiruvalluvar Statue Height ➨ 133-foot tall statue of Valluvar at Kanyakumari

Thiruvalluvar Other Names

  • Valluvar
  • Naayanaar
  • Naanmuganaar
  • Dhevar
  • Poyyirpulavar
  • Mudharpaavalar
  • Deivappulavar
  • Perunaavalar
  • Maadhaanupangi
  • Thirukkural

Here we have Thirukkural in Tamil. Thirukkural Adhikaram are totally 133. Here we have kural for all the Adhikaram in Tamil.

  • Who Wrote Thirukkural ➨ Thiruvalluvar
  • Thirukkural Adhikaram ➨ 133 Adhikaram
  • Thirukkural Total ➨ 1330 Thirukkural
  • Thirukkural Iyalkal ➨ 9 Iyalkal
  • Thirukkural Parimelazhagar Urai is the best Urai in Thirukkural.
  • In how many languages Thirukkural has been Translated ➨ 107 + Languages.

இதையும் படிக்கலாமே

English to Tamil Translation

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments