Pongal Wishes in Tamil 2025 | பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை
வணக்கம் நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்தை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். பொங்கல் திருநாளான அன்று உங்கள் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் உங்கள் உறவினர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து ஆனந்தம் கொள்ளுங்கள். தமிழனின் முக்கியமான பண்டிகை பொங்கல் பண்டிகை. இப்பண்டிகையை கோலாகலமாகவும் மிக மகிழ்ச்சியுடனும் கொண்டாடி வருகிறோம். இந்த முறை தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14ஆம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. விவசாயத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் சூரியனை வழிபட்டு பின் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மாடு உழவுப் பொருட்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பதிவில் பொங்கல் தின வாழ்த்து (Pongal Dhina Valthu) கவிதைகளை காண்போம்.
அனைவருக்கும் நமது தட்ஸ்தமிழ் சார்பாக இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Pongal Kavithai in Tamil | பொங்கல் திருநாள் கவிதைகள்
Pongal valthu in Tamil
அன்பும் ஆனந்தமும் பெருகிட இல்லமும் உள்ளமும் பொங்க அறமும் வளமும் தழைத்திட இனிய தமிழர் திருநாளான பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.. |
உழவனுக்கு திருநாளாம் உலகம் போற்றும் ஒரு நன்னாளாம். கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம். அனைவருக்கும் தைப்பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.. |
விவசாயின் வீட்டில் புன்னகை பொங்க இனம் புரிய இன்பம் உள்ளத்தில் பொங்க நண்பர்களுடன் மகிழ்ச்சி பொங்க இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. |
வறுமை நீங்கி செல்வம் பெருக வறட்சி நீங்கி செல்வம் செழிக்க உடல் பிணி நீங்கி ஆரோக்கியம் கிடைக்க இருள் நீங்கி வாழ்வில் ஒளி வீச உங்கள் இல்லத்தில் பொங்கல் பொங்கிட அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.. |
Pongal Kavithai in Tamil | பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை
கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கையின் சுவை என்றென்றும் தித்திக்கட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. |
தை திருநாளான நன்னாளில் நாம் உண்ண உணவளிக்கும் இயற்கை அன்னைக்கும் விவசாய மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.. |
உங்கள் இல்லத்தில் அன்பு பொங்கிட ஆசைகள் பொங்கிட இன்பம் பொங்கிட இனிமை பொங்கிட நண்பர்களுடன் மகிழ்ச்சி பொங்கிட அனைவருக்கும் பொங்கலோ பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. |
நோயற்ற சுகத்தை பெற்று மாசற்ற செல்வதை பெற்று அன்புடைய சுற்றத்தை பெற்று இதயத்தில் இன்பத்தை பெற்று மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.. |
Pongal Greetings in Tamil | பொங்கல் வாழ்த்துக்கள் கவிதை
தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வகையில் தடைகள் விலக தலைகள் நிமிர, நிலைகள் உயர நினைவுகள் நிஜமாக கதிரவன் நல்ல வழிகள் மற்றும் விடியலை கொடுக்கும் நாளாக இருக்கும் இந்த தை திருநாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள்.. |
குடும்பம் என்னும் பானையில் பாசம் என்னும் பாலூற்றி அன்பு என்னும் அரிசி இட்டு நேசம் என்னும் நெய் ஊற்றி இன்பம் என்னும் இனிப்பிட்டு உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி என்னும் பொங்கல் பொங்கிட இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.. |
தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் பொங்கலோடு இணைந்து அனைத்து மக்களும் இன்பத்தில் பொங்க இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.. |
சேற்றில் நீங்கள் கால் வைப்பதால் தான் சோற்றில் நாங்கள் கை வைக்கிறோம் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. |
தமிழன் என்பதில் பெருமை கொள்ளும், என் தொப்புள்கொடி உறவுகளுக்கு, என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. |
Pongal Wishes in Tamil Text | தை பொங்கல் வாழ்த்துக்கள் 2025
பொங்கி வழியும் பொங்கலைப் போல உங்கள் வாழ்க்கையில் வெற்றியும், மகிழ்ச்சியும் பொங்கி வழிந்திட இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. |
நாம் பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கலாம். ஆனால், நமக்கு வேண்டிய உணவை சம்பாதிக்க ஒரு விவசாயியால் மட்டுமே முடியும் விவசாயம் காப்போம் விவசாயியை காப்போம் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. |
கை கட்டி வேலை செய்யும் படிப்பாளியை விட, கை கட்டாமல் வேலை செய்யும் படைப்பாளியே சிறந்தவன். இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. |
உழவர்களின் திருநாளாம் ஊரெங்கும் பெருநாளாம். ஆனந்தம் பொங்கிட உங்கள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.. |
உழைக்கும் விவசாயிகளின் உள்ளமும் இல்லமும் பொங்கிட இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. |
பொங்கல் திருநாளில் உங்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலம் உருவாக்க நல்வாழ்த்துக்கள் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. |
Pongal Wishes in Tamil | இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
எதிர்மறை எண்ணங்களை விட்டுவிடு நேர்மறை எண்ணங்களை விதைத்து விடு வெற்றி அறுவடை ஆகும்.. அனைவருக்கும் இனிய போகி பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. |
பொங்கல்போல் புன்னகை பொங்கட்டும் மக்கள் மனசெல்லாம் மகிழ்ச்சி மலரட்டும் உள்ளம் எல்லாம் உற்சாகம் பரவட்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. |
மார்கழி தை இணைக்கும் இந்நாள் நல் உறவுகளை ஒன்றிணைக்கும் நன்நாளாக கொண்டாட இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.. |
Pongal Quotes in Tamil | இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
உடல் களைப்பு உடலுக்கு மட்டும் மனதிற்கு என்றும் தேவை இனிப்பு அதை இணைப்பது தான் பொங்கலின் சிறப்பு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. |
பொங்கல் என்பது சங்கத் தமிழனின் தேசியத் திருவிழா வீசிய விதையின் வேரில் முளைத்த வியர்வைப் பூக்களின் இயற்கைத் திருவிழா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. |
மங்களம் பொங்கட்டும் மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும் எண்ணியது ஈடேற தமிழர் திருநாள் தை பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. |
இதையும் படிக்கலாமே,
New Year Wishes 2025 Tamil | ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் |