சுப்பிரமணிய சிவா பற்றிய தகவல்கள் | Subramaniya Siva History in Tamil
சுப்பிரமணிய சிவா
- சுப்பிரமணிய சிவா திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் 1884ம் ஆண்டு அக்டோபர் 4ம் நாள் பிறந்தார்.
- இவர் தந்தையார் ராஜம் ஐயர், தாயார் நாகம்மாள் (நாகலட்சுமி).
- பெற்றோர் இட்ட பெயர் சுப்பராமன்.
- 1903 இல் ஸ்ரீ சதானந்த ஸ்வாமிகள் இவரது பெயருடன் சிவம் என்ற பெயரையும் சேர்த்ததால் சுப்ரமணிய சிவா என்று அழைக்கப்பட்டார்.
- இவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்ற இரு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற ஒரு சகோதரரும் இருந்தனர்.
- 1893 திண்ணைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்பு தனது 9 வது வயதில் காட்டுச்செட்டி மண்டபத்தில் ஆரம்ப கல்வி கற்றார்.
- பின் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்தார். இவர் 12 வயது வரை மதுரையில் இருந்தார்.
- வறுமை காரணமாக திருவனந்தபுரம் சென்று அங்கு இலவசமாக உணவு படைக்கும் ஊட்டுப்புறையில் உணவருந்திக்கொண்டே மேற்படிப்பு படித்தார்.
- இவர் கோவை புனித மைக்கேல்ஸ் கல்லூரியில் ஒரு ஆண்டு படித்தார். மெட்ரிகுலேஷன் தேர்வில் தோற்றார். 1899-இல் மீனாட்சியம்மை என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
- 1902-இல் திருவனந்தபுரத்திலுள்ள கொட்டாரக் கரையில் நாயர் வகுப்பைச் சேர்ந்த சதானந்த சுவாமிகள் என்ற ராஜயோகியைச் சந்தித்து, அவரிடம் சிலகாலம் ராஜயோகம் பயின்றார். 1906 சிவாவின் தந்தை மறைவெய்தினார்.
- 1904-1905-ல் நடந்த ரஷ்ய-ஜப்பானியப் போரில் பெரிய நாடான உருஷ்யாவை ஜப்பான் தோற்கடித்தது. இது உலகெங்கும் காலனியாட்சியாளர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளுக்கு ஓர் உத்வேகத்தைக் கொடுத்தது.
- 1905 இல் கர்சான் பிரபு வங்கத்தை மதத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரித்தான். நாட்டில் இந்த பிரிவினைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுதேச உணர்வு மேலோங்கியது. எங்கும் வந்தே மாதரம் எனும் முழக்கங்கள் எழுந்தன.
- பிராமண குடும்பத்தில் பிறந்த சிவா கோவையில் தனது படிப்பை முடித்த பின்பு, சிவகாசி காவல் நிலையத்தில் எழுத்தாளராக சேர்ந்தார்.
- இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த பின் வ.உ.சிதம்பரனாரும், பாரதியாரும் அவரது நெருங்கிய நண்பர்களாக இருந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 1908ம் ஆண்டு வ.உ.சி உடன் இணைந்து தடையை மீறி ஊர்வலம் நடத்தியதால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார் சுப்பிரமணிய சிவா.
- பின்னர் தண்டனை 6 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது சிறையில் இன்னல்களை அனுபவித்த சுப்பிரமணிய சிவாவிற்கு தொழுநோய் தொற்றியது.
- “சுதந்திரானந்தா” என்ற புனைப் பெயரை சூட்டிக் கொண்ட சுப்பிரமணிய சிவா தருமபுரி மாவட்டத்திலுள்ள பாப்பாராப்பட்டியில் பாரதியார் ஆசிரமத்தை நிறுவினார்.
- அங்கு தேசபக்தர்களுக்கு நாட்டு விடுதலைப் போருக்கான பயிற்சி அளித்தார். பத்திராசல ஆசிரமத்தில் தங்கியிருந்த சிவா 1925-ம் ஆண்டு ஜூலை 23-ம் நாள் இறந்தார்.
இதழ்
- ஞானபானு
- பிரபஞ்சமித்திரன்
- இந்திய தேசாந்திரி
எழுதிய நூல்கள்
- மோட்ச சாதனை ரகசியம்
- ஸ்ரீ ஸ்வாமி விவேகானந்தர் ஆத்மஞான ரகசியம்
- அருள் மொழிகள்
- வேதாந்த ரகஸ்யம்
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்
- ஞானாம்ருதமென்னும் பிரஹ்மானந்த சம்பாஷணை
- சச்சிதானந்த சிவம்
- பகவத்கீதா சங்கிலகம்
- சங்கர விஜயம்
- ராமானுஜ விஜயம்
- நளின சுந்தரி (அ) நாகரிகத்தின் தடபுடல் (கதை)
நாடகம்
- சிவாஜி
- ராஜா தேசிங்கு
இதையும் படிக்கலாமே
திருக்குறள் பற்றிய முழு தகவல்கள் | Thirukkural History in Tamil |