Homeதமிழ்தந்தை பெரியார் பற்றிய தகவல்கள் | Thanthai Periyar History in Tamil | thatstamil

தந்தை பெரியார் பற்றிய தகவல்கள் | Thanthai Periyar History in Tamil | thatstamil

THATSTAMIL-GOOGLE-NEWS

தந்தை பெரியார் பற்றிய தகவல்கள் | Thanthai Periyar History in Tamil | thatstamil

தந்தை பெரியார் என பரவலாக அறியப்படும் ஈ.வெ.ராமசாமி சமூக சீர்திருத்தவாதியாவார். ஈரோடு வெங்கடப்ப ராமசாமி நாயக்கர் என்பதன் சுருக்கமே ஈ.வெ.ரா ஆகும்.

தந்தை பெரியார்

 • இவர் ஈரோட்டில் வெங்கடப்ப நாயக்கர் – சின்னத்தாயி தம்பதியரின் மகனாக 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் பிறந்தார்.
 • பெரியாரின் தாய் மொழி கன்னடம் ஆகும். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று திராவிட மொழிகளை பேசும் ஆற்றல் பெற்றவர்.
 • 1898ம் ஆண்டு இவர் தமது 19வது வயதில், 13வயது கொண்ட நாகம்மை மணந்தார். 1915ல் அரசியலில் ஈடுபட்ட ஈ.வெ.ரா ஈரோட்டில் பிராமணரல்லாதோர் காங்கிரஸ் மாநாட்டை நடத்தினார்.
 • 1918ல் ஈரோடு நகரசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1919ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்தார்.
 • 1920ல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1921ல் ஈரோட்டில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியலில் பெரியார் தம் மனைவி நாகம்மை மற்றும் தமக்கை கண்ணம்மா ஆகியோருடன் ஈடுபட்டார்.
 • இந்த கள்ளுக்கடை மறியலின் போது, தன் சொந்த தோப்பிலேயே 1000 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.
 • 1922ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • அதன் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் திருப்பூர் அரசு பணிகளிலும், கல்வியிலும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
 • 1924ம் ஆண்டு மார்ச் 3ம் நாள் கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆலய நுழைவு போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார்.
 • இதனால் அவர் வைக்கம் வீரர் என பாராட்டப்பட்டார். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் போதே அவர் பிராமணர் அல்லாதோரின் நலன் காக்க மே 2, 1924ல் குடியரசு என்ற தமிழ் வார இதழ் தொடங்கினார்.
 • 1925ம் ஆண்டு வ.வே.சு. ஐயரின் சேரன் மாதேவி குருகுலத்தில் நிலவிய வருணாசிரம நடவடிக்கையை பெரியார் எதிர்த்தார்.
 • நவம்பர் 1925ல் காஞ்சிபுரத்தில் திரு.வி.க தலைமையில் நடைபெற்ற மாநில காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை காங்கிரஸ் ஏற்க மறுத்ததால், பெரியார் காங்கிரஸில் இருந்து விலகினார்.
 • 1925ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பின்னர் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
 • 1929ல் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு செங்கல்பட்டில் நடைபெற்றது.
 • அதில் சவுந்தர பாண்டியனார் குத்தூசி குருசாமி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் போன்றோர் பங்கேற்றனர்.
 • 1926ல் “திராவிடன்” பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 1928 நவம்பர் 7ல் “Revolt” என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
 • 1930 ஜனவரியில் குடும்பக் கட்டுப்பாடு” பற்றிய புத்தகத்தை வெளியிட்டு, இந்தியாவிலேயே முதன் முதலாக மக்கள் தொகை கட்டுப்படுத்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
 • 1930, மே 11-ல் பெரியாரின் மனைவி நாகம்மை காலமானார்.
 • 1933ம் ஆண்டு குடியரசு வார இதழ் ஆங்கிலேய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டதால், 20.11.1933 அன்று “புரட்சி” என்ற வார இதழைத் தொடங்கினார்.
 • 1934ம் ஆண்டு முதல் நீதிக்கட்சி ஆதரிக்க துவங்கிய ஈ.வெ.ரா. ஜனவரி 12, 1934ல் பகுத்தறிவு என்ற தமிழ் வார இதழை வெளியிட்டார்.
 • இதில் முதன் முதலாக எழுத்துச் சீர்த்திருத்தம் செய்தார். தமிழ் எழுத்துக்களில் 14 எழுத்துக்களை குறைந்தார்.
 • ஜூன் 1, 1935ல் நீதிக்கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட விடுதலை வார இதழை பெரியார் ஜனவரி 1,1937 அன்று தினசரி செய்தித்தாளாக வெளியிட்டார்.
 • 1937ல் இராஜாஜி அரசால் பள்ளிகளில் இந்தி கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து சிறை சென்றார்.
 • நவம்பர் 13, 1938ல் சென்னையில் மறைமலையடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடை பெற்ற மகளிர் மாநாட்டில், ஈ.வேராவுக்கு “பெரியார்” எனும் பட்டம் வழங்கப்பட்டது.
 • இவர் டிசம்பர் 29,1938ல் நீதிக் கட்சியின் தலைவரானார். இவர் 1939ல் திராவிட இன ஒற்றுமை மாநாடு மூலம் திராவிட நாடு கோரிக்கை எழுப்பினார்.
 • 1944ம் ஆண்டு ஆகஸ்டு 27 அன்று சேலத்தில் நடத்த நீதிக்கட்சி மாநாட்டில், அண்ணாதுரையின் தீர்மானத்தின் படி, நீதிக் கட்சியின் பெயர் “திராவிடர் கழகம்” என மாற்றம் செய்யப்பட்டது.
 • 1949ல் 70 வயதான பெரியார் 28 வயதுடைய மணியம்மையை திருமணம் செய்து கொண்டார்.
 • 1957ல் சாதியை ஒழிக்க தேசப்பட எரிப்பு மற்றும் கோயில்களில் சாதி ஆதிக்கம் ஒழியும் இயக்கத்தை நடத்தினார்.
 • இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி 1970ம் அண்டு ஜூன் 27ம் நாள் ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம் “புத்துலக தொலை நோக்காளர்”, “தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்”, “சமூக சீர்த்திருத்த இயக்கத்தின் தந்தை”, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்த மற்ற சம்பிரதாயங்கள் மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் எதிரி என்று பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளது.
 • 1970ல் உண்மை என்ற மாதம் இருமுறை இதழானது திருச்சியில் பெரியாரால் துவக்கப்பட்டது.
 • இவர் 1970ல் அனைவரையும் அர்ச்சகராக்கும் போராட்டத்தை நடத்தினார்.

பெண்ணுரிமை

 • “ஆணுக்குப் பெண் இளைப்பில்லை” என்று சிந்தித்தவர் பெரியார்.
 • பெண்கள் தத்தம் கணவனுக்கு மட்டுமே உழைக்கும் அடிமையாக இராமல், மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றும் புகழ் பெற்ற பெண்மணிகளாக விளங்க வேண்டும்” என்று வலியுறித்தினார்.

சொத்துரிமை

 • பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டமையே அவர்களின் அடிமை வாழ்வுக்கு காரணம் என்று உணர்ந்தார்.
 • அதற்காகக் அவர்கள் போராடவும் கிளர்ச்சி செய்யவும் வேண்டுமெனக் கூறினார்.

அரசுப்பணி

 • அரசாங்கத்தின் அனைத்துத்துறைகளிலும் பெண்கள் பணியாற்றும்போது நம் சமுதாயத்தில் புரட்சி ஏற்படும் என்றார்.

குழந்தை மணம்

 • குழந்தை திருமணம் பற்றி “சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு” எனக்கூறி அதனை நீக்கப் பாடுபட்டார்.

மணக்கொடை மறுப்பும் கைம்மை ஒழிப்பும்

 • சமுதாயத்தில் முறையான அன்பும் தியாக உணர்ச்சியும் ஏற்பட்டால் தான், இம்மாதிரியான தீமைகள் ஒழிக்க இயலும்.
 • தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள், பட்டதாரிகள் ஆகியோர் செக்குமாடுகளாக இல்லாமல், பந்தயக்குதிரைகளாக மாற வேண்டும்.
 • தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் என்றார். கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை என்றார்.

ஒழுக்கம்

 • ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகும் என்றார். பெரியார், பெண்களே சமூகத்தின் கண்கள் என்று கருதியவர்.

பகுத்தறிவு

 • ‘பெரியார்’ என்றவுடன் நம்முடைய நினைவுக்கு வருவது அவரின் பகுத்தறிவுக் கொள்கை.
 • எச்செயலையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகி ஏன்? எதற்கு? எப்படி? என்ற வினாக்களை எழுப்பி. அறிவின்வழியே சிந்தித்து முடிவெடுப்பதே பகுத்தறிவாகும்.
 • முன்னோர்கள் செய்தார்கள் என்பதற்காகவே ஒரு செயலை அப்படியே பின்பற்றி இன்றும் கடைப்பிடித்தல் கூடாது.
 • அக்காலத்திற்கு ஏற்ற வகையில் அப்படிச் செய்திருப்பார்கள்; இன்று காலம் மாறிவிட்டது. இக்கால வளர்ச்சிக்கு ஏற்ப அறிவு நிலையில், நடைமுறைக்கேற்ற வகையில் செயல்பட வேண்டும்.
 • அக்கண்ணோட்டத்துடனே பெரியார் சிந்தித்தார். சமூகம், மொழி, கல்வி, பண்பாடு, பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் அவரின் சிந்தனை புதிய எழுச்சியை ஏற்படுத்தியது.
 • 1938 நவம்பர் 13இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்குப் ‘பெரியார்’ என்னும் பட்டம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 • 06.1970 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ நிறுவனம் தந்தை பெரியாரைத் தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்’ எனப் பாராட்டிப் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

சமூகம்

 • தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் சாதி மதப் பிரிவுகள் மேலோங்கி இருந்தன. பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்னும் வேறுபாடுகள் இருந்தன.
 • சாதி என்னும் பெயரால் ஒருவரை ஒருவர் இழிவு செய்யும் கொடுமை இருந்தது,
 • இந்த இழிநிலை கண்டு தந்தை பெரியார் கொதித்தெழுந்தார். “சாதி உணர்வு ஆதிக்க உணர்வை வளர்க்கிறது. மற்றவர்களின் உரிமைகளைப் பறிக்கிறது.
 • மனிதர்களை இழிவுபடுத்துகிறது. அந்தச் சாதி என்ற கட்டமைப்பை உடைத்தெறிய வேண்டும்” என்றார் அவர். சாதியினால் மனித வாழ்விற்கு எவ்விதச் சிறு பயனும் விளையப் போவதில்லை.
 • அதனால், வீண் சண்டைகளும் குழப்பங்களுந்தான் மேலோங்குகிறது. அத்தகு சாதி, மனிதனுக்குத் தேவையில்லை என்று வலியுறுத்தினார்.

மதம்

 • ‘மதங்கள் என்பன மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்று மதத்தின் நிலை என்ன? நன்கு சிந்தித்துப் பாருங்கள்: மனிதர்களுக்காக மதங்களா?
 • மதங்களுக்காக மனிதர்களா? மதம் என்பது மனிதர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா?’ எனப் பெரியார் பகுத்தறிவு வினாக்களை எழுப்பினார்; கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தார்.

கல்வி

 • சமூக வளர்ச்சிக்குக் கல்வியை மிகச் சிறந்த கருவியாகப் பெரியார் கருதினார்.
 • ‘கற்பிக்கப்படும் கல்வியானது மக்களிடம் பகுத்தறிவையும், சுயமரியாதை உணர்ச்சியையும், நல்லொழுக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்;
 • மேன்மை வாழ்வு வாழ்வதற்கேற்ற தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்பட வேண்டும்’ என்றார்.
 • ‘அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும் பள்ளிகளில் கற்றுத் தரக்கூடாது,
 • சுயசிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் கல்வியினைக் கற்றுத்தர வேண்டும்’ என்று பெரியார் கூறினார்.
 • சமூகத்தின் அனைத்து நிலையினருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
 • குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே கல்வி உரிமையானது எனவும் சில பிரிவினர்க்குக் கல்வி கற்க உரிமை இல்லை எனவும் கூறப்பட்ட கருத்துகளைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.
 • அனைவருக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும். குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வியறிவு புகட்ட முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
 • பெண்களுக்கு அளிக்கப்படும் கல்வியினால் சமுதாயம் விரைவாக முன்னேறும் என்று பெரியார் நம்பினார்.
 • மனப்பாடத்திற்கு முதன்மை அளிக்கும் தேர்வு முறையையும், மதிப்பெண்களுக்கு முதன்மை அளிக்கும் முறையையும் பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

பெண்கல்வி

 • பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூக மாற்றங்கள் ஏற்படாது என்றார். ஆண்கள் பெண்களைப் படிக்கச் வைக்க வேண்டும்.
 • அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்க வேண்டும். நாட்டிலுள்ள கேடுகளில் எல்லாம் பெருங்கேடு பெண்களைப் பகுத்தறிவு அற்ற ஜீவன்களாய் வைத்திருக்கும் கொடுமை; இந்த நிலை ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.

பெரியார் எதிர்த்தவை

 • இந்தித் திணிப்பு
 • குலக்கல்வித் திட்டம்
 • தேவதாசி முறை
 • கள்ளுண்ணல்
 • குழந்தைத் திருமணம்
 • மணக்கொடை

மொழி, இலக்கியம்

 • ஒரு மொழியின் தேவை என்பது, அதன் பயன்பாட்டு முறையைக் கொண்டே அமைகிறது;
 • இந்தியாவிலேயே பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கேற்ற நூல்கள் தமிழில் படைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
 • ‘மொழியோ நூலோ இலக்கியமோ எதுவானாலும் மனிதனுக்கு மானம்,பகுத்தறிவு, வளர்ச்சி, நற்பண்பு ஆகிய தன்மைகளை உண்டாக்க வேண்டும்’ என்று கருதி மொழி, இலக்கியம் ஆகியவற்றின் வளர்ச்சி குறித்தும் பெரியார் கூறினார்.
 • மதம், கடவுள் ஆகியவற்றின் தொடர்பற்ற இலக்கியம், யாவருக்கும் பொதுவான இயற்கை அறிவைத் தரும் இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத அறிவியல் பற்றிய இலக்கியம் ஆகியவற்றின் மூலம்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியங்களும் மேன்மை அடையமுடியும். அத்துடன் அதனைக் கையாளும் மக்களும் அறிவுடையவராவர் என்று பெரியார் கூறினார்.
 • திருக்குறளில் அறிவியல் கருத்துகளும் தத்துவக்கருத்துகளும், அனைவருக்கும் பொதுவான வகையில் இடம் பெற்றிருப்பதால் அதை மதிப்புமிக்க நூலாகப் பெரியார் கருதினார்.
 • இந்நூலில் அரசியல், சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கியுள்ளன. இதை ஊன்றிப் படிப்பவர்கள் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள் என்றார்.

எழுத்துச் சீர்திருத்தம்

 • மொழியின் பெருமையும் எழுத்துகளின் மேன்மையும் அவை எளிதில் கற்றுக் கொள்ளக்கூடியனவாக இருப்பதைப் பொறுத்தே அமைகின்றன.
 • எனவே, காலவளர்ச்சிக்கேற்பத் தமிழ் எழுத்துகளைச் சீரமைக்கத் தயங்கக் கூடாது என்று பெரியார் கருதினார்.
 • “மொழி என்பது உலகின் போட்டி, போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும்; அக்கருவிகள் காலத்திற்கேற்ப மாற்றப்பட வேண்டும்; அவ்வப்பொழுது கண்டுபிடித்துக் கைக்கொள்ள வேண்டும்” என்றார். அம்மாற்றத்திற்கான முயற்சியையும் பெரியார் மேற்கொண்டார்.
 • உயிர் எழுத்துகளில் ‘ஐ’ என்பதனை ‘அய்’ எனவும். ‘ஔ’ என்பதனை ‘அவ்’ எனவும் சீரமைத்தார் (ஐயா அய்யா, ஒளவை அவ்வை).
 • அதுபோலவே, மெய்யெழுத்துக்களில் சில எழுத்துகளைக் குறைப்பதன் வாயிலாகத் தமிழ் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்றார்;
 • அவ்வாறு குறைப்பதால் தமிழ்மொழி கற்பதற்கும் தட்டச்சு செய்வதற்கும் எளிதாகும் எனக் கருதினார். இச்சீரமைப்புக்கான மாற்று எழுத்துருக்களையும் (வரி வடிவம்) உருவாக்கினார்.
 • கால வளர்ச்சிக்கு இத்தகு மொழிச் சீரமைப்புகள் தேவை என்று கருதினார். பெரியாரின் இக்கருத்தின் சில கூறுகளை 1978ஆம் ஆண்டு தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.

பெண்கள் நலம்

 • அக்காலத்தில் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஒடுக்கப்பட்டிருந்தனர். எனவே, நாட்டு விடுதலையைவிட, பெண் விடுதலைதான் முதன்மையானது என்று கூறினார் பெரியார்.
 • கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் அளிக்கப்பட வேண்டும்.
 • வேலைவாய்ப்பில் ஐம்பது விழுக்காடு இட ஒதுக்கீடு பெண்களுக்குத் தரப்பட வேண்டும்.
 • பொருளாதாரத்தில் பெண்கள் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய நிலையில் இருக்கக்கூடாது. நன்கு கல்வி கற்று, சுய உழைப்பில் பொருளீட்ட வேண்டும். தெளிந்த அறிவுடனும் தன்னம்பிக்கையுடனும் திகழ வேண்டும் என்றார்.
 • இளம்வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கக்கூடாது; கைம்பெண்களுக்கு மறுமணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார்.
 • குடும்பத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்படவேண்டும். பெண்களின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
 • குடும்பச் சொத்தில் ஆண்களுக்குச் சமமான உரிமையைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும்.
 • குடும்பப் பணிகளில் ஆண்களுக்கென்று தனிப்பணிகள் எதுவுமில்லை. ஆண்களும் குடும்பப் பணிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கருத்துகளை எடுத்துரைத்தார்.

பெரியார் விதைத்த விதைகள்

 • கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இடஒதுக்கீடு
 • பெண்களுக்கான இடஒதுக்கீடு
 • பெண்களுக்கான சொத்துரிமை
 • குடும்ப நலத்திட்டம்
 • கலப்புத் திருமணம், சீர்திருத்தத் திருமணச் சட்டம் ஏற்பு

சிக்கனம்

 • சிக்கனம் என்னும் அருங்குணத்தைப் பெரியார் பெரிதும் வலியுறுத்தினார்; அதற்கேற்பத் தானும் வாழ்ந்து காட்டினார்;
 • பொருளாதாரத் தன்னிறைவு அடையாத நிலையில் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றார்.
 • விழாக்களாலும் சடங்குகளாலும் மூடப்பழக்கம் வளர்வதோடு, வீண்செலவும் ஏற்படுவதால் தேவையற்ற சடங்குகளையும் விழாக்களையும் தவிர்க்கவேண்டும் என்றார்.
 • திருமணம் போன்ற விழாக்களைப் பகட்டின்றி மிக எளிமையாகவும் சீர்திருத்த முறையிலும் நடத்த வேண்டும் என்றார்.

சிந்தனைச் சிறப்புகள்

 • பெரியாரின் சிந்தனைகள் தொலைநோக்கு உடையவை: அறிவியல் அடிப்படையில் அமைந்தவை: மனிதநேயம் வளர்க்கப் பிறந்தவை. நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துகளை அவர் எப்பொழுதும் கூறியதில்லை.
 • மேலும், தமது சீர்திருத்தக் கருத்துகளுக்கேற்ப வாழ்ந்து காட்டினார்; தம் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்தார்;
 • சமுதாயம் மூடப்பழக்கங்களிலிருந்து மீண்டெழ அரும்பாடுபட்டார்: அதற்காகப் பலமுறை சிறை சென்றார்; பலரின் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தார்.
 • ஆயினும், இறுதி மூச்சுவரை சமூகச் சீர்திருத்தப் போராளியாகவே வாழ்ந்து மறைந்தார். பெரியாரின் சிந்தனைகள் அறிவுலகின் திறவுகோல்:
 • பகுத்தறிவுப் பாதைக்கு வழிகாட்டி: மனித நேயத்தின் அழைப்பு மணி: ஆதிக்கசக்திகளுக்கு எச்சரிக்கை ஒலி; சமூகச் சீர்கேடுகளைக் களைவதற்கு மாமருந்து என்று அறிஞர்கள் மதிப்பிடுவர்.

விருதுகள்

 • யூனஸ்கோ விருது (1970) – இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம்
 • புத்துலக தொலைநோக்காளர்
 • தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்
 • சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை – அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி” என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது

காலக்கோடு

 • 1879 செப்டம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
 • 1885 – திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
 • 1891 – பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்.
 • 1892 – வாணிபத்தில் ஈடுபட்டார்
 • 1898 – நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
 • 1902 – கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
 • 1904 – ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
 • 1907 – பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
 • 1909 – பல எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்து வைத்தார்.
 • 1911 – தந்தையார் மறைவு
 • 1919 – காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919 – 1925)
 • 1924 – வைக்கம் போராட்டம்
 • 1925 – சுயமரியாதை இயக்கம்
 • 1938 – இந்தி எதிர்ப்பு
 • 1938 – நீதிக்கட்சித் தலைவராக (1938-1944)
 • 1944 – திராவிடர் கழகம் (1944-முதல்)
 • 1949 – அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு ; திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கம்
 • 1957 தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு

சிறந்த தொடர்கள்

 • தி.மு.க – கண்ணீர்த்துளி கட்சி
 • சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு
 • தொண்டு செய்து பழுத்த பழம் – பாவேந்தர்

பெரியார் இயக்கமும் இதழ்களும்

 • தமிழ் தேசியவாதம்
 • தோற்றுவித்த இயக்கம் – சுயமரியாதை இயக்கம்
 • தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1925
 • நடத்திய இதழ்கள் – குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்)

இதழ்கள்

 • குடிஅரசு (வார இதழ்) 1925 மே 2ஆம் நாள் தொடங்கப்பட்டது.
 • ரிவோல்ட் (Revolt) (ஆங்கில வார இதழ்) 1928 நவம்பர் 07 ஆம் தொடங்கப்பட்டது. முதல் இதழை கோவை இரத்தினசபாபதியார் தலைமையில் பட்டிவீரன்பட்டி ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன் 6-11-1928ஆம் நாள் வெளியிட்டார். இதழுக்கு ஈ.வெ.இராவும் எசு. இராமநாதனும் ஆசிரியராக இருந்தனர்; நாகம்மையார் வெளியீட்டாளர்.
 • ஜஸ்டிஸ் (Justice)
 • புரட்சி (வார இதழ்) 1933 நவம்பர் 20 ஆம் நாள்தொடங்கப்பட்டது. 17.6.1934ஆம் நாள் இறுதி இதழ் வெளிவந்தது.
 • பகுத்தறிவு (நாளிதழ்) – 1934 ஏப்ரல் 15 ஆம் நாள் தொடங்கப்பட்டு 1934 மே 27ஆம் நாளோடு நிறுத்தப்பட்டது
 • பகுத்தறிவு (வார இதழ்) 1934, ஆகத்து 26 ஆம் நாள் முதல் 1935 சனவரி 1ஆம் நாள் வரை 20 இதழ்கள் வெளிவந்தன.
 • பகுத்தறிவு (மாத இதழ்) 1935, மே 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது 1939 ஜனவரி வரை வெளிவந்தது.
 • விடுதலை (வாரம் இருமுறை) 1935, சூன் 01ஆம் நாள் தொடங்கப்பட்டது.
 • விடுதலை (நாளிதழ்) 1937, சூன் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது
 • உண்மை (மாத இதழ்)
 • தி மார்டர்ன் ரேசனலிஸ்ட் (The Modern Rationalist) (ஆங்கில மாத இதழ்) 1971 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது

மறைவு

 • தந்தை பெரியார் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், திசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும்.
 • அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார்.
 • அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற இராமசாமி, வேலூர் சி. எம். சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 • ஆனால் இராமசாமி, சிகிச்சை பலனின்றி திசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

நினைவகங்கள்

 • தமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் – அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது.
 • இங்கு இராமசாமியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
 • கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
 • இங்கு இராமசாமி அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
 • சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது.

இதையும் படிக்கலாமே

திருப்பூர் குமரன் பற்றிய தகவல்கள் | Tiruppur Kumaran History in Tamil | thatstamil

 

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments