தமிழ் செய்திகள் | THATSTAMIL (தட்ஸ்தமிழ்) ➨ தமிழ் தகவல்களின் களஞ்சியம் (ஜோதிடம், ராசி பலன், இ-சேவை, தொல்பொருள் செய்திகள், திட்டங்கள், தமிழக மாவட்டங்கள், தமிழர்களின் வரலாறு, தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள், மருத்துவம், சமையல்)

கல்யாண முருங்கை அடை

கல்யாண முருங்கை அடை

🔹அரிசி- 2கப்
🔹கடலை பருப்பு -1/2கப்
🔹துவரம் பருப்பு- 1/2கப்
🔹வரமிளகாய்-4 முதல் 6வரை
🔹சோம்பு- 1/2டீஸ்பூன்
🔹உப்பு- தேவையான அளவு
🔹சீரகம்-1/2டீஸ்பூன்
🔹மிளகு- 1/2டீஸ்பூன்
🔹பூண்டு- 10பல்
🔹கல்யாண முருங்கை இலை- 12எண்ணிக்கை
🔹தனியா- 2டீஸ்பூன்

கல்யாண முருங்கை

அரிசியையும் , பருப்பையும் தனித்தனியாக ஊறவைக்கவும். ஊறவைத்த அரிசியுடன் பருப்பு நீங்கலாக மற்ற அனைத்து பொருட்களையும் போட்டு கர கரப்பாக ( ரவை பதத்திற்கு) அரைத்துக் கொள்ளவும்.

பின்பு பருப்பைஅரைத்துக் கலக்கவும் . (பருப்பை வழ வழப்பாக அரைக்கக்கூடாது ) கரகரப்பாக அரைத்தால்தான் அடை முறுவலாக வரும்.

தேவையான அளவு உப்பு பெருங்காயப்பொடி சேர்க்கவும் . இந்த அடைமாவுடன் பொடியாக நறுக்கிய 4 வெங்காயம் , கறிவேப்பிலை , மல்லி தழை சேர்த்துக் கலக்கவும்.

தோசைக்கல்லில் அடையாக வார்த்து சுற்றிலும் எண்ணெய் 2 டீஸ்பூன் ஊற்றி வெந்ததும் திருப்பிப்போட்டு சிறிது எண்ணெய் ஊற்றி 2பக்கமும் நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

சளியை அகற்றும் , பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும். பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியைப் போக்கி , உடல் எடையைக் குறைக்கும்.

thatstamil google news

                         

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

top articles

Related Articles

error: Content is protected !!