Homeகீரைகளின் பயன்கள்அரைக்கீரை பயன்கள்

அரைக்கீரை பயன்கள்

THATSTAMIL-GOOGLE-NEWS

அரைக்கீரை

வேறுபெயர் : – அறுகீரை , அறக்கீரை , அரக்கீரை , கிள்ளுக்கீரை.

🔹பித்தசுரம் போக்கும்.
🔹குளிர்க்காய்ச்சலைக் குணமாக்கும்.
🔹உடல் வலிகளை நீக்கும்.
🔹நீர்க்கோர்வை ( சலதோஷம் ) , சன்னி , வாதசுரம் சளி , இருமல் ஆதியனவற்றைக் குணமாக்கும்.
🔹உடலுக்கு வலுவூட்டும்.
🔹சூதக சன்னிக் கோளாறுகளை நீக்கும். ஜீவசக்தியைப் பெருக்கும்.
🔹நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்
🔹மண்டைப் பீநிசத்தை நீக்கும்.

அரைக்கீரை

🍀இக்கீரை சாதாரணமாகப் பயிரிடக்கூடிய ஒரு செடியாகும். இதன் இலையின் மேற்பாகம் பச்சையாகவும் , அடிப்பாகம் சிவப்பும் நீலநிறமும் கலந்து தங்க நிறமாகவும் காணப்படும்.கிளை விட்டு வளரக்கூடியது. இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறியவை நாள்தோறும் தவறாமல் உண்ணுதற்கு ஏற்றது. எந்த நோயாளருக்கும் முதல் அரைக் கீரைதான் சத்துணவு ஒருவித கெடுதலை யும் செய்யாது. பிரசவித்த பெண்களுக்கு மிகவும் ஏற்றது . கீரையும் இதன் விதையும் இரண்டுமே உணவாகப் பயன்படும். இக்கீரையில் தங்கச் சத்தும் இரும்புச் சத்தும் உள்ளன என்பர்.

🍀இக்கீரையைக் குழம்பு , கடையல் , பொரியல் செய்து உண்ணலாம் .

🍀இக்கீரையைக் கறியாக்கி உண்ணக் காய்ச்சல் , நடுக்கம் , சன்னி , கயரோகம் , வாதநோய் ஆகிய நோய்கள் நீங்கும்.

🍀அரைக் கீரையுடன் துவரம்பருப்பைச் சேர்த்துச் செத்தல் மிளகாய் இரண்டு கிள்ளிப் போட்டுத் தாளித்து அவியலாகச் செய்து சாப்பிடச் சளி இருமல் , கப இருமல் யாவும் நீங்கும்.

🍀அத்துடன் வெங்காயமும் பெருங்காயமும் சேர்த்துப் பொரியலாகச் செய்து சாப்பிட சலதோஷம் , சன்னி , பாதசுரம் , குளிர்காய்ச்சல் ஆகியன தீரும் . பித்தகபசுரம் , வாய் ருசியற்ற போதும் பசியற்ற நிலையிலும் அரைக் கீரையைப் பழம்புளியுடன் கடைந்து சாப்பிட்டு வர அவை பகலவனைக் கண்ட பனிபோல் நீங்கும்.

🍀வாதம் வாய்வு , உடல் வலிகட்குச் சுக்கு , பூண்டு , மிளகு , பெருங் காயம் சேர்த்துக் குழம்பு , கடையல் , பொரியலாகச் சேர்த்துச் சாப்பிட அவை குணமாகும்.

🍀பிடரி நரம்பு வலித்தல் , மண்டைப் பீநிச நரம்பு வலி , சன்னித் தலைவலி , கன்ன நரம்புப்புடைப்பு ஆகியவைகளுக்கு இக்கீரை பெருங்குணமளிக்க வல்லது.

🍀மாத விடாய்க் காலத்தில் மாதர்களுக்கு ஏற்படும் சூதகசன்னிக் கோளாறுகளை அரைக்கீரை உணவின் மூலம் குணமாக்கிக்கொள்ளலாம்.

🍀தவறான வழிகளில் உடற் சக்தியை இழந்தவர்களுக்கு இக் கீரை அருமருந்தாகப் பயன்படுகிறது . ஜீவசக்தியைப் பெருக்க உதவுகிறது.

🍀அரைக்கீரை விதையை கிராமப்புறங்களில் மாவாக்கி உண்பது உண்டு . நாட்பட்ட பிணிகளை அரைக்கீரை விதை போக்கக்கூடியது.

🍀அரைக்கீரை விதையிலிருந்து தயாரிக்கப் படும் தைலம் , கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கின்றது .

🍀தலைமயிர் நன்றாகக் கறுத்துச் செழிப்பாக வளர்வதற்கு உதவுகிறது.

🍀சிறுவர் , சிறுமியர் சுறுசுறுப்பாக இயங்கவும் மூளை வலிமை பெறவும் , உடற்பலமும் உறுதியுமடையவும் , சிறந்த நினைவாற்றலைப் பெற்றுக் கொள்ளவும் . வாரத்தில் இருமுறையேனும் அரைக் கீரையை உணவோடு சேர்த்து உண்ணுதல் அவசியமாகும்.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments