தினமும் யோகா செய்வதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்

தினமும் யோகா செய்வதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் Yoga Benefits in Tamil

தினமும் யோகா செய்வதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் | Yoga Benefits in Tamil

வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் நாம் காண இருப்பது தினமும் யோகா செய்வதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தான். முதலில் யோகா என்பதனைப் பற்றி சுருக்கமாக பார்த்துவிட்டு அதன் நன்மைகளைப் பற்றி பின்பு பார்ப்போம் வாருங்கள்.

யோகா

நமது இந்திய திருநாட்டில் தோன்றிய ஒரு அற்புதமான கலை யோகக் கலை.

இந்த யோகக் கலையில் தியான முறையும் உடற்பயிற்சியும் அடங்கும்.

யோகக் கலையை யோகாசனம் எனவும் கூறுவர்.

இந்த யோகக் கலையை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.

யோகாசனம் = யோகா+ஆசனம்

benefits of yoga in tamil

யோகா என்ற சொல் ஒரு சமஸ்கிருதச் சொல் ஆகும்.

யோகா என்றால் அலைபாயும் மனதை அலையாமல் நேர்வழிப்படுத்தும் ஒரு செயல்.

ஆசனம் என்ற சொல்லுக்கு ‘இருக்கை’ என்பது பொருளாகும். அதாவது, உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிப்பிடும் சொல்லே யோகாசனம் ஆகும்.

தமிழில் யோகாசனத்தை “ஓக இருக்கை” எனவும் குறிப்பிடுவர்.

தினமும் யோகா செய்வதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள்

மன அழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க உதவுகிறது.

உடலில் உள்ள சோர்வை நீக்கி எப்பொழுதும் உடலையும் மற்றும் மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

நம் உடலில் உள்ள வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள இந்த யோகாசன முறை உதவுகிறது. அதாவது நம் உடலின் தலை முதல் பாதம் வரை உள்ள உஷ்ணத்தை குறைத்து சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது.

அலைபாயும் மனம், மன குழப்பம், பதட்டம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.

தினமும் யோகாசனம் செய்து வந்தால் இதயம் சார்ந்த பிரச்சினைகளை குறைந்து இதயத்தில் சரியான அளவில் இரத்த ஓட்டம் மற்றும் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

Yoga Benefits in Tamilதூக்கமின்மை பிரச்சனையை சரி செய்கிறது. இரவில் சரியான நேரத்தில் தூங்க முடியாதவர்கள் அதாவது தூங்க முயற்சி செய்தும் தூங்க இயலாதவர்கள் தினசரி காலையில் யோகாசனம் செய்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

மயக்கம், தலைச்சுற்றல், தலைவலி, எதிர்மறை சிந்தனை உடையவர்கள், அதிகப்படியான கோபம் உடையவர்கள் தினசரி யோகாசனம் செய்து வந்தால் படிப்படியாக பிரச்சனைகள் குறைந்து மனம் தெளிவு அடையும்.

சுவாச பிரச்சனை உடையவர்கள் மற்றும் ஆஸ்துமா உடையவர்கள் தினமும் யோகா செய்வதன் மூலம் சீரான பிராணயாமம் உடலுக்கு கிடைக்கப் பெற்று சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இதையும் படிக்கலாமே

திருக்குறள் பற்றிய முழு தகவல்கள் | Thirukkural History in Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here