டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத போறீங்களா.? தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு என்ன தெரியுமா?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகளில் OMR SHEET இல் புதிய நடைமுறைகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் தேர்வர்கள் புதிய OMR SHEET மாதிரியை பார்த்து அறிந்து கொண்ட பின்னர் தேர்வு எழுத அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் என்னதான் போட்டி போட்டு டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு தயார் செய்து கொண்டிருந்தாலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் அன்றைய தினத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வழங்கும் விடைத்தாளில் எந்த தவறும் செய்யாமல் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்தால் மட்டுமே போட்டித் தேர்வில் வெற்றி பெற முடியும்.
மாதிரி விடைத்தாள் (MODEL NEW OMR SHEET) வெளியீடு
ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாளின் மாதிரி pdf வடிவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
www.tnpsc.gov.in
பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புதிய ஓஎம்ஆர் ஷீட் விடைத்தாளில் வினாத்தாள் தொகுப்பு எண், வட்டங்களை கருப்பு நிற பால்பாயின்ட் பேனாவால் நிரப்புவது, கண்காணிப்பாளர் கையொப்பம் பகுதி மாற்றம் தொடர்பாகவும் மாதிரி விடைத்தாளில் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, டிஎன்பிஎஸ்சி தேர்விற்கு படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள் புதிய ஓஎம்ஆர் விடைத்தாள் மாதிரியை இணையதளத்தில் பார்த்து அறிந்து, தேர்வு எழுத வருமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.