தமிழில் தீபாவளி கவிதைகள், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Deepavali 2025 Wishes in Tamil
வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் நாம் காண இருப்பது தமிழில் தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் தீபாவளி கவிதைகள் பற்றியதுதான். தட்ஸ்தமிழ் (THATSTAMIL) சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த தீபாவளி வாழ்த்துக்கள் கவிதையை வழங்கிய நண்பர் RK ராகுல் அவர்களுக்கு தட்ஸ்தமிழ் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தீபாவளி கவிதைகள் | Deepavali Kavithai in Tamil
தீபாவளி
ஒவ்வொரு தீபாவளியும் ஒரு மறக்க முடியாத நினைவை ஏற்படுத்தி இருக்கும்! இல்லையேல் ஏற்படுத்த இருக்கும்!
இனிய நிகழ்வுகள் இல்லத்தில் தொடர,
மலரும் நினைவுகள் உள்ளத்தில் தொடர,
ஏங்கி இருந்த நாளில்
தொடங்கும் தீபாவளி!..
கையிலே வெடி வெடித்து காயங்களும் நேரும்!
சில காலங்களிலே ஆறும்!
எச்சரிக்கையாக இருந்தால் இன்பம் மட்டுமே எப்போதும்!
ஒரு மாதத்திற்கு முன்பே,
மக்கள் கூட்டம்
கடை எங்கும், அலைமோதும்!
ஏராளமான மக்கள் என்பதால் தாரளமான வியாபாரம்!
நம்பி இருந்த கடைக்கு நம்பிக்கை அளிப்பதால், அத்தனையும் உங்களை அழைக்கும்!
நீங்கள் கேட்காமலே விலையை குறைக்கும்!
கூடி இருந்த மக்களால் வாடி இருந்த கடைக்கு கொண்டாட்டம்!
தேடி வந்த மக்களுக்கு பிடித்த ஆடை, அணிகலன்கள் கிடைத்தால் கொண்டாட்டம்!
அண்ணன்களின் பயணம் தங்கை வீட்டிற்கு வரிசையாக!
வரிசைக்காக!!
அண்ணனை எதிர்பார்த்து காத்திருந்த தங்கைக்கோ
நெஞ்சமெல்லாம் ஆனந்தம்,
பஞ்சமெல்லாம் பறந்து போகும் என்று!!
தங்கை பிள்ளைகளுக்கு மாமன் வருகை!
மன்னனின் வருகை ! போன்றே இருக்கும்!
வாங்கி வந்த பண்டங்களை பார்க்கும்!
மாமனின் அன்பு அதனை ஈர்க்கும்!
அண்ணனை பார்த்த ஆனந்தத்தில் தங்கை திளைக்க!
சமைத்து பரிமாறுவாள் சிறக்க!!
கொஞ்ச நேரத்தில் பிரியா விடை கொடுத்து,
செல்லும் வழியையே பார்த்து வழி அனுப்பி வைப்பாள்!
அண்ணன் சென்று அரை மணி நேரம் ஆன பின்னும்!
திரும்பி பார்த்தால் வழியும் கண்ணீர் கண்களில்!
உயிரில் கலந்த உறவே நீ என்றும் வாழ்வாய் என் மனதிலே என்று!!
பிறகு வந்து பையை திறந்தால் அத்துணையும் போதும் தீபாவளிக்கு!
அந்த கணமே அளப்பெரியது!
அனைவருக்கும் என் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தீபாவளி கவிதைகள் | Diwali Wishes Quotes in Tamil
ஒளிகள் கூடி ஒரு கதை சொல்லும்,
பட்டாசு வெடி ஒலிகளை எழுப்பி
தீப ஒளி திருநாளை வரவேற்கும்!
ஐம்புலன்களும் அடம் பிடிக்கும்,
ஆனந்தம் அதில் இடம் பிடிக்கும்!
காத்திருந்த நாளும் வரும்!
காதில் பல ஓசைகள் எழும்!
சுவிகார பலகாரம் தயாராகும்!
சுவை மொட்டுகளில் மெட்டுகள் எழும்!
நவரசம் கூடிய அதிரசம் தயாராகும்!
அதன் சுவையில் பழரசம் பணியும்!
வெடியுடன் ஆனந்த போருக்கு தயாராகும் பிள்ளைகள்!..
வெளியூரில் இருந்து ஊருக்கு வரும் பிள்ளைகள்!.. என
ஊரே கொண்டாட! வந்ததே ஒரு நாள்!
தீபாவளி திருநாள்!
இனம் புரியாத ஆனந்தம் இடம் பெறும்!
அதில் புதிய ஆடைகள் இடம் பெறும்!
வண்ண வண்ணமாய் புத்தாடை அணிந்து குதூகலமாய்
ஒரு சங்கமம்!
வானவில்லும் அந்த அழகு தனில் வியக்கும்!
அதன் பெருமை இழந்து திளைக்கும்!
தொடர்ந்து எரியும் தீயில், முறுக்குக்கு முத்தமிட எண்ணைய் சட்டி காயும்!
வந்து விழுந்ததும் அறுசுவையில் வேகும்!
பதமான இளம் சூட்டில் பிரியா விடை கிடைக்கும்!
அதில் அடுத்ததாக வடை தன் கால் பதிக்கும்!
பொன் நிறமாக மாறும் வரை கொதிக்கும்!
வகை வகையான பலகாரங்கள், வரவேற்பில்!
வாயில் எச்சில் ஊற
எடுத்து சாப்பிட முடியுமா என மனம் ஏங்கிய நிலையில்
சாமிக்கு படைத்தால் தான் என்று,
வீட்டில் குரல்
ஓங்கி ஒலிக்கும்!
மின் மினி பூச்சி போல் மின்னும் குழந்தைகள்!..
வண்ணத்துப் பூச்சி போல வட்டமிடும் மங்கைகள்!..
ஒவ்வொரு வீடும் கோவில் போலாகும்!
அதில் கொண்டாட்டம் பலவாகும்!
ஒளி வெள்ளம் பூமியில் அரங்கேற!
சூரியனும் எட்டி பார்க்கும் வரத் தான் வேண்டுமா நானும் என்று!
வந்து விடு,
உன் தீபம் ஏற்றி!
வாழ்ந்து வருகிறோம் உன்னையே போற்றி என்று!
நாமும் வழிபட!
நாளும் சுகம் பெற!
அசுரன் அழிந்த நாளை ஆண்டு தோறும் கொண்டாட!
அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்திட!
வந்ததே தீபாவளி!
இனி வாழ்வெல்லாம் இன்ப ஒளி!
விடியற்காலையில் எழுந்து,
சூரியனும் வர,
சூடும் வர,
தலையில் எண்ணைய் வைத்து குளிர்ந்து!
உடல் சூட்டை போக்க புத்துணர்ச்சி குளியல்! இட்டு!
வாங்கிய புதிய ஆடைகளுக்கு மஞ்சள் இட்டு!
பல ரக பலகாரங்கள் செய்து, பணிவுடன் வைத்தாள் மாது!
பல ரக பழங்கள்!
பல வண்ண பூக்கள்!
ஊரே அதிற வாங்கிய வெடிகள்!
எல்லாம் வைத்து,
நம்மை படைத்த இறைவனுக்கு படையல் இட்டு!
புத்தாடையை அணிந்து
பண்டிகையை தொடங்கும் போதே புது குதூகலம் பிறக்கும்!
ஊரும், உறவும் ஒன்று கூடி,
உள்ளம் நிறைய
உல்லாசமாக கொண்டாடி!
தீராத இன்பத்தில்
திளைக்கும் நாள் தீபாவளி!
தீமைகள் எல்லாம் தீபத்தில் கரைய!
நன்மைகள் எல்லாம் ஆகாயத்தில் பெருக,
சர வெடியில் தொடங்கி!
சங்கு சக்கரம் சுழல!
சாட்டையில் சேட்டைகள் பல செய்ய!
புஷ் வானத்தில்
புதிய வானம் மலர!
ராக்கெட் விண்ணில் பாய,
வான வேடிக்கை நிகழ காத்திருக்கும் இரவு!
கறி,மீன், மட்டன், முட்டை என்று வரிசையாக வாழை இலையில் அமர்த்தி,
வாய்க்கு ருசியாக வயிற்றில் செலுத்தி!
உறவுகளுடனும், நண்பர்களுடனும் உண்டு மகிழ்ந்து!
உணவை சிறப்பிக்கும் இனிய தீபாவளி!
அனைத்து உறவுகளும் ஓரிடத்தில் சங்கமிக்கும்
அற்புத திருநாள்!
தீப ஒளி திருநாள்!
தெருவெல்லாம் திருவிழா கோலம்!
தேசம் எங்கும் பல வர்ண ஜாலம்!
இந்துக்களை இணைக்கும்
அற்புத பாலம்!
வீடும் நாடும்
ஒன்று தான் என்று காட்டும்
வண்ண ஒளி களம்!
இதை இன்னும் கூட்டும்!
இசை ஒலி மேளம்!
தீபத்தின் ஒளியே!
தீச்சுடர் வழியே! தித்திக்கும் தீபாவளி!
தீபாவளி வாழ்த்து அட்டை | Deepavali 2025 Wishes in Tamil
உள்ளம் நிறைய
இனிப்புகள் இல்லத்தில் செய்து!
அதிரசத்தில் அன்பையும் கலந்து,
முறுக்கில் பொன் நிறம் கண்டு,
சுழியம் சுட சுட சுட்டு,
தேனினும் இனிய ரசகுல்லா ரகசியம் அறியும் முன்னே!
சந்திரகலா சிரிக்க கண் அதில் ஈர்க்க,
அனைவருக்கும் இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மத்தாப்பு மண்ணில் சிதற!🎉
ராக்கெட் விண்ணில் உயர! 🚀
பட்டாசு வெடித்து பார் எல்லாம் அதிர!🎉
பாச உறவுகள் அனைவருக்கும்
நேச நண்பர்கள் அனைவருக்கும்,
நெகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
Family Diwali Wishes in Tamil 2025
பிரிந்திருந்த உறவுகள் பல கூடி!
நினைவுகளில் புதைந்திருந்த
பாசம் அதை தேடி!
தொலைவு எவ்வளவானாலும்
காண அங்கு ஓடி!
அனைவரையும் ஒன்றாக பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடாகுமோ பல கோடி!!
உயிரில் கலந்த உறவுகளுக்கு!!
உள்ளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தல தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Happy Thala Diwali Wishes in Tamil Quotes
புது மகள், மருமகள்!
புகுந்த வீட்டில் தீப ஒளி ஏற்ற!
புதியதோர் பொன்னான
ஒளியை தலைவன் மீது பார்க்க!!
தாரத்துடன் இணைந்து
தார்மீக தீபாவளி கொண்டாடும்,
புதிய தலைவர்கள் அனைவருக்கும்
தல தீபாவளி நல்வாழ்த்துக்கள்!🎉
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Iniya Deepavali Nalvazhthukkal in Tamil
தூரமான பயணத்தில்,
ஈரமான நினைவுகள் மலர,
தென்றல் தவழ,
தேகம் சிலிர்க்க,
ஊருக்கு சென்று உள்ளமெல்லாம் பூரிக்க!
பயணிகள் அனைவருக்கும்!!
தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!🎉
அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Advance Happy Deepavali Wishes in Tamil 2025
செவ்வானம் சிவக்க!
சிறிது நேரத்தில் சூரியன் பிறக்க!!
ஊரெல்லாம் உற்சாகத்தில் திளைக்க!
வானமும் வாழ்த்தும், பூமியும் சேர்த்தும்!
கடல் அலையும்
கரை வந்து வந்து சொல்லும்!
தீப ஒளி திருநாளில்!
உலகிற்கு தீபாராதனை பெரும் நாளில்!!
இயற்கையின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
தீபாவளி வாழ்த்துக்கள் தமிழில் | Happy Deepavali Wishes in Tamil
கடல் கடந்து வந்து இருந்தாலும்,
காட்சிகள் பல மாறி இருந்தாலும்!
கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருந்தாலும்
கண்ணுக்குள்ளேயே வைத்து காத்திருக்கும்!…
அவர்களின் நினைவுகள் அங்கே பூத்திருக்கும்!…
வெளிநாட்டில் வாழும், வெள்ளை மன கூட்டத்திற்கு!!
வெற்று தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
தனி ஒருவனாய், தலை மகனாய், தன் மானமாய்,
வாழ்ந்து வரும் தனி ஒருவன்!
தாயும் இல்லை, தந்தையும் இல்லை, தாரமும் இல்லை!
சொந்த, பந்தம் என யாரும் இல்லை!
யாரும் எல்லையே நெஞ்சில் பாரமும் இல்லை!
இவனுக்கு அந்த வானும், இந்த மண்ணுமே எல்லை!!
லட்சிய வெறி கொண்ட இந்த ஒருவனுக்கு,
லட்சிய தீப ஒளி நல்வாழ்த்துக்கள்!!
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் | Diwali Wishes in Tamil Images
புதிய ஆடை உடுத்தி!
பூலோகத்தில் சுற்றி வர,
பூவும் பார்த்து மயங்கும்!
மலர வேண்டுமா என தயங்கும்!
மழலை சிரிப்பில்,
மின்மினி போல் மின்னும்!
பூலோக மலர்களை பார்த்து!
பட்டாம்பூச்சி போல் சுற்றி வரும்
பட்டுப்பூச்சி கூட்டத்திற்கு!!
பட்டான தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🎉⚡
இதையும் படிக்கலாமே,
எண்கண் முருகன் கோயில் தல வரலாறு | Engan Murugan Temple History in Tamil |