சந்திர கிரகணம் தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ? | Chandra Grahanam 2025 in Tamil
வணக்கம் நண்பர்களே, இன்றைய பதிவில் நாம் காண இருப்பது சந்திர கிரகணம் என்றால் என்ன? சந்திர கிரகணம் எப்பொழுது நிகழ இருக்கிறது? சந்திர கிரகணம் 2025 தேதி மற்றும் நேரம்? சந்திர கிரகணத்தின் போது எப்போது சாப்பிட வேண்டும்? சந்திர கிரகணத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.
சந்திர கிரகணம் என்றால் என்ன?
பௌர்ணமி நாளில் அதாவது முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது, அதாவது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது சந்திர கிரகணமானது ஏற்படுகிறது.
முழு நிலவின் மீது பூமியின் நிழல் படும்போது சந்திரனை மறைத்து, சந்திரனை இருட்டடையச் செய்யும். இந்த நிகழ்வை முழு சந்திர கிரகணம் என்கிறோம். இந்த நிகழ்வானது பௌர்ணமி நாட்களில் மட்டுமே ஏற்படும்.
இந்த நிகழ்வில் பூமியின் நிழலானது சந்திரனின் மீது விழுவதால், சந்திரன் கருமை நிறத்திலும், சில நேரங்களில் சிவப்பு நிறத்திலும் தோன்றும். இந்த சிவப்பு நிறத்தில் தோன்றும் சந்திரனை “இரத்த சந்திரன்” என்றும் அழைப்பர்.
சந்திர கிரகணமானது வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே நிகழும்.
ஜோதிட கருத்தின்படி, ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாகும். இந்த நிழல் கிரகமான ராகு, சூரியனையோ அல்லது சந்திரனையோ விழுங்க நினைக்கும் தருணம்தான் கிரகணம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் அனைத்தும் மூடப்படும்.
சந்திர கிரகணம் 2025 தேதி மற்றும் நேரம்
பூர்ண சந்திர கிரகணம் நிகழ்வு ஆவணி மாதம் 22 ஆம் தேதி செப்டம்பர் 07, 2025 அன்று பௌர்ணமி திதியில் ஞாயிற்றுக்கிழமை தினத்தில் சந்திர கிரகணம் நிகழ இருக்கிறது.
சந்திர கிரகணம் ஆரம்பிக்கும் நேரம்
சந்திர கிரகணம் செப்டம்பர் 07, 2025 அன்று ஞாயிற்றுக்கிழமையில் இரவு 09:51 PM மணிக்கு தொடங்கி மறுநாள் அதாவது திங்கள் கிழமை விடியற்காலையில் 02:25 AM மணிக்கு சந்திர கிரகணம் முடிவடைகிறது.
சந்திர கிரகணம் தெரியும் நாடுகள்:
இந்தியா, ஆசியா, அண்டார்டிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகளில் தெரியும்.
இந்தியாவில் சந்திர கிரகணம் நிகழ்வு:
இந்தியாவில் முழு சந்திர கிரகணம் செப்டம்பர் 07, 2025 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11:42 PM மணிக்கு பூரண சந்திர கிரகணம் தொடங்குகிறது.
சந்திர கிரகணத்தின் போது எப்போது சாப்பிட வேண்டும்?
செப்டம்பர் 07, 2025 அன்று ஞாயிற்றுக்கிழமையில் மாலை 06:00 PM மணிக்கே இரவு உணவை சாப்பிட்டு விடுவது நல்லது.
சந்திர கிரகணத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்த நபர்கள் மற்றும் திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம், பூரட்டாதி இந்த நட்சத்திரக்காரர்கள் சந்திர கிரகணம் தினத்தில் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் சந்திர கிரகணம் தினத்தில் இறைப் பிரார்த்தனையில் இருப்பது நல்லது.
இந்த சந்திர கிரகணத்தை முழு கண்ணால் பார்க்கலாம். ஆனால் நீண்ட நேரம் சந்திர கிரகணத்தை பார்க்காமல் இறை வழிபாடு, இறை சிந்தனையில் இருப்பது நல்லது.
சந்திர கிரகணத்தின் தாக்கம் இந்தியாவில் படுவதால் செப்டம்பர் 8 திங்கள்கிழமை அன்று காலை 06.30 AM மணிக்கு மேல் வீட்டை சுத்தப்படுத்துவது நல்லது. அதற்குப் பிறகு வீட்டில் தீபம் ஏற்றி தெய்வ வழிபாடு செய்யுங்கள்.
சந்திர கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:
சந்திர கிரகணம் தினத்தில் உணவுகளில் தர்ப்பை புல் போட்டு வைப்பது நல்லது.
இன்றைய தினத்தில் தெய்வத்தை வழிபடுவது, அமைதியாக தியானம் செய்வது, உறங்குவது நல்லது.
சந்திர கிரகணத்தின் போது செய்ய கூடாதவை:
சந்திர கிரகணம் தினத்தில் கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவது, கூர்மையான ஆயுதங்களை கையாள்வது, அசைவம் சாப்பிடுவது, சண்டை போடுவது போன்றவைகள் செய்ய கூடாது.
சந்திர கிரகணம் முடிந்ததும் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று வருவது நன்மை அளிக்கும்.
இதையும் படிக்கலாமே,
திருநறையூர் மாந்தி கோவில் கும்பகோணம் | Sri Ramanathaswamy Kovil Thirunaraiyur |