Homeதமிழ்வ.வே.சுப்பிரமணிய ஐயர் பற்றிய தகவல்கள் | V.V.S. Aiyar History in Tamil | thatstamil

வ.வே.சுப்பிரமணிய ஐயர் பற்றிய தகவல்கள் | V.V.S. Aiyar History in Tamil | thatstamil

THATSTAMIL-GOOGLE-NEWS

வ.வே.சுப்பிரமணிய ஐயர் பற்றிய தகவல்கள் | V.V.S. Aiyar History in Tamil | thatstamil

.வே.சுப்பிரமணிய ஐயர்

 • வ.வே.சுப்பிரமணிய ஐயர் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் வரகனேரி வேங்கட சுப்பிரமணி ஐயர், திருச்சி மாவட்டத்திலுள்ள வரகனேரி என்ற ஊரில் 1881ம் ஆண்டு பிறந்தார்.
 • இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கியவாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.
 • தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ்ச் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
 • வ.வே.சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார்.
 • அக்கால மரபையொட்டி அவ்வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார்.
 • பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.
 • கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார்.
 • அவரை கைது செய்ய ஆங்கிலேய அரசு முயன்றதால் பிரெஞ்சுப் பகுதியான புதுச்சேரியில் தலைமறைவாக இருந்தார்.
 • பின்பு ஆங்கில அரசு பொதுமன்னிப்பு அவர் திரு.வி.க.வைத் தொடர்ந்து வழங்கியதால் தமிழ்நாட்டுக்கு வந்த “தேசபக்தன்” என்ற நாளிதழ் நடத்தினார்.
 • 1921ல் தேசபக்தனில் வ.வே.சு எழுதிய ஆட்சேபகமான தலையங்கத்தால் 9 மாத சிறைத் தண்டனை பெற்றார்.
 • சிறையில் இருந்தபோது “Story of Kambar” என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் 1919 முதல் 1932 வரை “பாலபாரதி” என்ற மாத இதழை நடத்தினார்.
 • தீவிரவாத விடுதலைப் போராட்ட வீரரான வ.வே.சு.ஐயர் நவீன தமிழ் சிறுகதைகளின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.
 • வ.வே.சு. ஐயர் வீரசவாக்கரின் 1857 முதலாவது இந்திய சுதந்திர போராட்டம் என்ற நூலை மொழி பெயர்த்து, அரசாங்க தடையை மீறி உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பினார்.
 • இவர் 1910-ல் ரஷ்யாவுக்குச் சென்று வெடிகுண்டு தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டு புதுவைக்கு வந்தார்.
 • புதுவையில் தஞ்சம் புகுந்த ஐயர் கர்மாலயம் என்ற அமைப்பை ஏற்படுத்தி பயங்கரவாதப் புரட்சியாளர்களுக்குக் குத்துச் சண்டை, மல்யுத்தம், கத்திச் சண்டை, துப்பாக்கிச் சுடல் ஆகியவற்றில் பயிற்சி அளித்தார்.
 • இவர் வீரவாஞ்சிநானின் குரு ஆவார். இவர்தான் வாஞ்சிநாதனுக்கு பிரௌனிங் கைத்துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சியளித்தார்.
 • இவர் சேரன்மாதேவியில் பரத்துவாஜ் ஆசிரமத்தை நிறுவினார். இவர் ஜூன் 3, 1925-ல் தமது 44-வது வயதில் பாபநாசம் அருவியில் விழுந்து இறந்தார்.

தமிழிலக்கிய பங்களிப்பு

 • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
 • குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
 • இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
 • 1921-22 காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி (KAMBARAMAYANA -A STUDY) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இவ்வாய்வு நூல் 1950 இல் நூலாக வெளிவந்தது.
 • கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். இந்நூல் பின்னர் 1990 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.
 • கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
 • கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.
 • பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார்.
 • இலண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் லண்டன் கடிதம் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.
 • மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, “கம்பராமாயணம் – ஓர் ஆராய்ச்சி” போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
 • பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவுசெய்தார்.

நினைவு இல்லம்

 • தமிழ்நாடு அரசு வ.வே.சுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் திருச்சியில் அவர் வாழ்ந்த இல்லம் வ.வே.சு. ஐயர் நினைவகம் எனும் பெயரில் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
 • இங்கு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சுப்பிரமணிய ஐயர் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
 • மேலும் இவரது நினவாகத் சேரன்மகாதேவியில் வ.வே.சு. ஐயர் மாணவர் விடுதி உள்ளது.

இதையும் படிக்கலாமே

வ.உ.சிதம்பரனார் பற்றிய தகவல்கள் | V.O. Chidambaram Pillai History in Tamil | thatstamil

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments