Homeதமிழ்இராஜாஜி பற்றிய தகவல்கள் | C.Rajagopalachari History in Tamil | thatstamil

இராஜாஜி பற்றிய தகவல்கள் | C.Rajagopalachari History in Tamil | thatstamil

THATSTAMIL-GOOGLE-NEWS

இராஜாஜி பற்றிய தகவல்கள் | C.Rajagopalachari History in Tamil | thatstamil

இராஜாஜி

  • இராஜாஜி என்றும் சி.ஆர். என்றும் அழைக்கப்பட்ட சி.இராஜகோபாலாச்சாரி அப்போதைய சேலம் (தற்போதைய கிருஷ்ணகிரி) மாவட்டத்தில் உள்ள தொரப்பள்ளி என்ற ஊரில் டிசம்பர் 9, 1878-ல் பிறந்தார்.
  • இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட இவர் சேலத்து மாம்பழம் என செல்லமாக அழைக்கப்பட்டார்.
  • சட்டக் கல்வி பயின்ற இவர், 1900 முதல் சேலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். 1917 முதல் 1921 வரை சேலம் நகர சபை தலைவராக பணியாற்றினார்.
  • 1921ல் தீவிர அரசியலில் ஈடுபட்டு காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்திற்கும், கிலாபத் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
  • 1925ல் திருச்செங்கோட்டில் புதுப்பாளையம் என்ற இடத்தில் “காந்தி ஆசிரமம்” அமைத்து மதுவிலக்குப் பிரச்சாரம் செய்தார்.
  • 1930ம் ஆண்டு தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடை பெற்றது. 1937இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால், ஜூலை 17, அன்று சென்னை மாகாணத்தின் முதலமைச்சரானார்.
  • இராஜாஜி தமது ஆட்சியின் போது மதுவிலக்குச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச் சட்டம், ஆலயப் பிரவேசச் சட்டம், விற்பனை வரி அறிமுகம் (1937), ஆரம்பப் பள்ளியில் இந்தி கட்டாயப்பாடமாக அறிமுகப்படுத்துதல் (1938) போன்ற பல சீர்த்திருத்தச் சட்டங்களை இயற்றினார்.
  • 1942ல் பாகிஸ்தான் தனி நாடு கொள்கையை காங்கிரஸ் ஏற்காததால் காங்கிரஸில் இருந்து விலகினார்.
  • பின்னர் 1944ம் ஆண்டு மீண்டும் காங்கிரசில் இணைந்து, முஸ்லீம்களுக்கு தனி நாடு தருவதே நல்லது என்ற தமது சி.ஆர். திட்டத்தை (C.R.Formula) காந்தியடிகளிடம் அளித்தார்.
  • இவர் 1946 முதல் 1947 வரை மேற்கு வங்க ஆளுநராகப் பணியாற்றினார். இவர் சுதந்திர இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக ஜூன் 21, 1948 முதல் ஜனவரி 25, 1950 வரை பதவி வகித்தார்.
  • இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ஆகிய சிறப்புக்குரியவர் ராஜாஜி.
  • சுதந்திரத்திற்கு பிறகு 1952ம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத் தேர்வில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால், தமிழக மேலவையின் உறுப்பினர் என்ற தகுதியுடன் ஏப்ரல் 10, 1952ல் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார்.
  • 1953ம் ஆண்டு இவர் அறிமுகப் படுத்திய குலக்கல்வித் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தோன்றியதால் 1954ம் ஆண்டு மார்ச் 25ம் நாள் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.
  • பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய இராஜாஜி 1959ல் சுதந்திரக் கட்சியைத் தொடங்கினார்.
  • 1966ல் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டார்.
  • சக்கரவர்த்தி திருமகன் (இராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்), திக்கற்ற பார்வதி, கண்ணன் காட்டிய வழி (பகவத் கீதை) போன்ற பல நூல்களை எழுதிய இராஜாஜி டிசம்பர் 25, 1972ல் இயற்கை எய்தினார்.

பாரத ரத்னா

  • 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது

நினைவுச் சின்னங்கள்

  • தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும் அமைத்துள்ளது.
  • மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.

படைப்புகள்

  • தமிழில் முடியுமா
  • திண்ணை ரசாயனம்
  • சக்கரவர்த்தித் திருமகன்
  • வியாசர் விருந்து
  • கண்ணன் காட்டிய வழி
  • பஜகோவிந்தம்
  • கைவிளக்கு
  • உபநிஷதப் பலகணி
  • ரகுபதி ராகவ
  • முதல் மூவர் (மீ.ப.சோமுவுடன்)
  • திருமூலர் தவமொழி (மீ.ப.சோமுவுடன்)
  • மெய்ப்பொருள்
  • பக்திநெறி, வானதி பதிப்பகம், சென்னை.
  • ஆத்ம சிந்தனை
  • ஸோக்ரதர்
  • பிள்ளையார் காப்பாற்றினார்
  • ஆற்றின் மோகம்
  • வள்ளுவர் வாசகம், 1960, கல்கி வெளியீடு, சென்னை.
  • ராமகிருஷ்ண உபநிஷதம்
  • வேதாந்த தீபம்

பெற்ற விருதுகள்

  • சாகித்திய அகாதமி விருது 1958 – சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணம் – உரைநடையில்)

இதையும் படிக்கலாமே

வ.வே.சுப்பிரமணிய ஐயர் பற்றிய தகவல்கள் | V.V.S. Aiyar History in Tamil | thatstamil

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments