நீப்பத்துறை சென்னம்மாள் கோவில் வரலாறு | Neepathurai Chennamma Kovil History in Tamil
அனைவருக்கும் வணக்கம். இன்று நாம் காண இருக்கும் பதிவு நீப்பத்துறை சென்னம்மாள் (சென்னியம்மன்) கோவில் வரலாறு பற்றியதுதான்
நீப்பத்துறை சென்னம்மாள் கோவில்
ஓட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் தென்பெண்ணை ஆற்றின் நடுவில் ஆலயம் அமைந்திருக்கும். ஆலயத்தின் நடுவில் அம்மன் கல்வடிவில் அமைந்துள்ளார். கல் வடிவில் இருக்கும் அம்மனுக்கு உருவமே கிடையாது அதுதான் ஆலயத்தின் சிறப்பு. மேலும் இந்த ஆலயத்திற்கு ஆடி மாதம் பக்தர்கள் வருகை தந்து இந்த ஆலயத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்து மனமுருகி வேண்டுகிறார்கள்.
நீப்பத்துறை சென்னம்மா வரலாறு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள மலைகளுக்கு நடுவே வரும் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள திருப்பாறையில் பார்வதி தேவி குழந்தையாக பிறந்து ஸ்ரீ சென்னம்மாள் என்ற பெயரில் வளர்ந்து ஜீவசமாதி அடைந்தார் மற்றும் ஜீவ சமாதியான வெள்ளையப்ப சித்தர், நவாப் ஆகியோரின் ஜீவ சமாதிகளும் உள்ளது.
வெள்ளையப்ப சித்தர் (சுருக்கமான அறிமுகம்)
நீப்பத்துறை கிராமத்திற்கு வெள்ளையப்ப சித்தர் என்ற சித்தர் வந்திருந்தார். ஒருநாள் பாம்பு கடித்து இறந்த சிறுவனை சுடுகாட்டிற்கு எடுத்துக்கொண்டு சென்றிருந்தார்கள். அப்பொழுது சிறுவனின் இறப்பின் காரணம் என்னவென்று சித்தர் கேட்க அதற்கு பொதுமக்கள் சிறுவன் இறப்பை காரணம் காட்டி கூற உடனே சித்தர் சவத்தை கீழே வையுங்கள் நீங்கள் ஒரு புறமாக நில்லுங்கள் என்று கூறிவிட்டு மறுபுற சித்தர் அமர்ந்து தியானம் செய்தார். கடித்த பாம்பு சிறுவனின் உடலுக்கு அருகில் வந்து விஷத்தை மீண்டும் எடுத்துச் செல்ல அந்த சிறுவன் உறங்கியவன் போல உயிர்பிழைத்து எழுந்தான். ஊர் மக்கள் சித்தரின் பாதங்களில் விழுந்து வணங்கினார்கள். ஊரின் வடக்கே ஒரு பெரிய கற்குன்றில் தன்னுடைய ஞானத்தால் அரை அடி ஆழத்திற்கு பாறையில் துளை போட வைத்து அதில் நல்லெண்ணெய் மூன்று முறை ஊற்றி, அதை பாம்பு கடித்தவருக்கு அளித்தார். இதை உண்ட அனைவரும் பிழைத்தனர் என்று இன்றும் ஆயிரக்கணக்கானோர் நம்பி பலனடைகிறார்கள்.
நவாப் (சுருக்கமான அறிமுகம்)
நவாப் என்னும் மன்னர் அந்த ஊர்களை ஆண்டு வந்தார். அந்த நேரத்தில் மன்னர் நவாப் பெண்களின் பிரியராகவே இருந்தார். திருமணமான பெண்களை திரும்பி கூட பார்க்க மாட்டார் ஆனால் கிராமங்களில் அழகான கன்னிப் பெண்கள் காணப்பட்டால் சேவகரின் மூலம் தன் ஆசையை தீர்த்து கொள்வார்.
நீப்பத்துறை சென்னம்மாள்
மன்னர் நவாப்பிடமிருந்து கன்னிப்பெண்களை காப்பாற்ற குழந்தையாக பார்வதி தேவி அவதரித்தார். பார்வதி பூலோகத்தில் ஜவ்வாது மலை என்ற பகுதியில் குழந்தையாக பிறந்தார். அந்த ஜவ்வாது மலை பகுதியில் சமுத்திரம் என்னும் சிற்றூரில் ஆடு மாடுகளை மேய்த்து வரும் ஒரு நபர் தங்கம் போன்ற மேனியில் இருக்கும் குழந்தையை பார்த்ததும் தன்னுடன் வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்றிலிருந்து புத்திர பாக்கியம் அற்ற கணவன் மனைவி இருவரும் குழந்தையை அன்புடன் வளர்க்கிறார்கள். குழந்தையின் ஐந்தாம் வயதில் காதணி விழா ஏற்பாடு செய்தார்கள். அந்த சமயம் ஒரு பிராமணர் அந்த வழியாக சென்றார், பெற்றோர்கள் அவரை அழைத்து குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? என்று கேட்க அதற்கு அவர் சென்னம்மாள் என்ற பெயரை வையுங்கள் என்றார். இந்த பெயர் இந்த வையகம் உள்ளவரை நிலைக்கும் ஆனால் இந்த குழந்தை சுமார் 10 – 12 வயதுக்குள் இறந்து விடும் என்று பிராமணர் சொல்ல பெற்றோர்கள் மிகவும் வருந்தினர்.
நீப்பத்துறை சென்னம்மாள் வரலாறு




சாபம் பெற்ற ஊர்: ஆக சென்னம்மாள், வெள்ளையப்ப சித்தர், நவாப் ஆகிய மூவரும் ஒன்றாக வாழ்ந்தனர். அதைக் கண்டு மக்கள் ஏளனமாக பேச கோபம் கொண்ட வெள்ளையப்ப சித்தர் அந்த ஊருக்கு சாபம் கொடுத்தார். அதாவது ஆதி இல்லா அம்மாபேட்டை! நீதியில்லா நீப்பத்துறை! கோல் சொல்லும் கொட்டாவூர்! என்றும் இந்த ஊர் மக்கள் யாருமே முன்னுக்கு வர முடியாது என்றும் சாபம் அளித்தார். மக்கள் துன்புற்றனர்.
நீப்பத்துறை சென்னம்மாள் வரலாறு

இந்த மூன்று ஆலயங்களில் முறைப்படி வணங்குபவர்களுக்கு மூன்று தெய்வங்களின் அருள் கிடைக்கும். இன்றும் தொடர்ந்து வழிபாடு செய்து வரும் பக்தர்களுக்கு கலையாத கல்வியும் , குறையாத வயதும் , ஒரு கபடுவாறாத நட்பும் , குன்றாத இளமையும் , கழுவி இல்லாத உடலும், தவறாத சந்தானமும் , தடைகள் வராத குடையும் , தொலையாத நிதியமும், ஒரு துன்பமில்லாத வாழ்வும் கிடைக்கிறது. நீங்களும் நீப்பத்துறையில் உள்ள மூன்று ஆலயங்களுக்கும் சென்று பயனடையுங்கள். நன்றி.
இந்த கட்டுரையை வழங்கிய மிருதுளா அவர்களுக்கு தட்ஸ்தமிழ் சார்பாக நன்றி.
இதையும் படிக்கலாமே,
| தினமும் யோகா செய்வதால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் | Yoga Benefits in Tamil |






