Homeதமிழ்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய தகவல்கள் | Pattukkottai Kalyanasundaram History in Tamil

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய தகவல்கள் | Pattukkottai Kalyanasundaram History in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய தகவல்கள் | Pattukkottai Kalyanasundaram History in Tamil

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

  • பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார் (13.04.1930 – 08.10.1959) தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் – விசாலாட்சி 13.04.1930 அன்று பிறந்தார்.
  • தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது.
  • இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
  • பாரதிதாசனால் “எனது வலது கை” எனப் புகழப்பட்டவர்
  • உடுமலை நாராயணகவி இவரை “அவர் கோட்டை, நான் பேட்டை” எனப் புகழ்ந்தார்.
  • இவர் எழுதிய மொத்தப்பாடல்கள் = 56

சிறப்பு பெயர்

  • மக்கள் கவிஞர்

சிறந்த தொடர்கள்

செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்

திறமைத்தான் நமது தெய்வம்

எழுத்தாற்றல் பங்கு

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலேயே கவி புனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர்.
  • இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை.
  • பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டக்கூடிய வல்லவர் ஆவார்.
  • மேலும் இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டும் தன்மை உடையவர்.
  • இவர் திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும் அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார்.
  • இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது.
  • 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

பொதுவுடமையின் ஆர்வம் காட்டிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

  • இளம் பருவத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடமைக் கட்சி (கம்யூனிஸ்ட் கட்சி) களிளும் ஈடுபாடு கொண்டிருந்தவர்.
  • அவர் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலியாது ஈடுபட்டார்.
  • நாடகக் கலையில் ஆர்வமும் விவசாய இயக்கத்தின் பால் அசைக்க முடியாத பற்றும் கொண்டிருந்தார்.
  • தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள், சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார்.
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தன்னுடைய 29ஆம் ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர் என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டார்.
  • இவருக்கு இருந்த நடிப் ஆசையின் காரணமாக “சக்தி நாடக சபா”வில் இணைந்தார்.
  • இந்த சக்தி நாடக சபாவில் தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜிகணேசன், எம். என். நம்பியார், எஸ்.வி. சுப்பையா, ஓ.ஏ.கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர்.
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஓ.ஏ.கே தேவரின் நெருங்கிய நண்பர் ஆவார்.
  • சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய் திரைப்படமாகியும் அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர்.
  • ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தன் நடிப்பை விட்டுவிட்டு பாடல் எழுதும் கலையை கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று “புரட்சிக்கவி” பாரதிதாசனிடம் உதவியாளராக சேர்ந்து விட்டு இறுதியில் கவிஞராக உருவானவர்.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவித்த கௌரவம்

  • தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் “பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது”.
  • மேலும் அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் மறைவு

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடிந்து ஐந்து வருடங்களில் தனது 29 ஆவது அகவையில் 1959 அக்டோபர் 8ஆம் நாள் காலமானார்.
  • இவர் இறக்கும் போது இவருக்கு ஐந்து மாத குழந்தை பிறந்தது.
  • இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி இவரது அஞ்சலியில் “கண்களை மூடுகிறேன் கல்யாணம் தெரிகிறார்” – ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை – கலை உலகம் இருள்கிறது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.

 

இதையும் படிக்கலாமே

திரு.வி.கல்யாண சுந்தரனார் பற்றிய முழு தகவல்கள் | Thiru.V.Kalyanasundaram History in Tamil

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

Most Popular

Recent Comments