Homeதமிழ்தீரன் சின்னமலை பற்றிய தகவல்கள் | Dheeran Chinnamalai History in Tamil

தீரன் சின்னமலை பற்றிய தகவல்கள் | Dheeran Chinnamalai History in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

தீரன் சின்னமலை பற்றிய தகவல்கள் | Dheeran Chinnamalai History in Tamil

தீரன் சின்னமலை

  • தீரன் சின்னமலை (Dheeran Chinnamalai, ஏப்ரல் 17, 1756 – ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார்.
  • தமிழகத்தில், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்து கருப்ப சேர்வையுடன் இணைந்து போரிட்டவர்களுள் ஒருவர்.
  • கொங்கு நாட்டில் ஓடாநிலைக் கோட்டை கட்டி ஆண்டவர்.
  • தமிழக விடுதலைப்போரில் கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் ஆகியோரை ஆங்கிலேயர் அழித்தபின் கொங்கு நாட்டில் தீர்த்தகிரி என்ற வீரர் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்.
  • 1799 முதல் 1805 வரை ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற தீர்த்தகிரி ஈரோடு மாவட்டத்தில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் 1756-ம் ஆண்டு பிறந்தார்.
  • 1799ம் ஆண்டு திப்பு சுல்தான் மரணமடைந்த போது, கோவை பகுதிகளைக் கைப்பற்ற வந்த கர்னல் மேக்ஸ்வெல் தலைமையிலான ஆங்கிலப்படையை காவிரிக் கரையில் எதிர்த்து சின்னமலை வெற்றி பெற்றார்.
  • பின்னர் கொங்கு நாட்டில் “ஓடாநிலை” என்னும் ஊரில் ஒரு கோட்டையைக் கட்டி, படையைத் திரட்டி ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார்.
  • ஓடாநிலைப் போரிலும் ஆங்கிலேயர் சின்னமலையிடம் தோல்வியுற்றனர்.
  • சின்னமலையை போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த ஆங்கிலேயர் அவரை சூழ்ச்சியால் வெல்ல முயன்றனர்.
  • சின்னமலையின் சமையல்காரன் ஆங்கிலேயரின் சூழ்ச்சிக்கு உதவிட, சின்னமலை சாப்பிடும் போது அவரைக் காட்டிக் கொடுத்தான்.
  • பின்பு ஆங்கிலேயர் சின்னமலையை சங்ககிரியில் தூக்கிலிட்டனர்.
  • தமிழகத்தில் கடைசியாக ஆங்கிலேயரை எதிர்த்து நின்றவர் தீரன் சின்னமலை என்று புகழப்பட்ட தீர்த்தகிரியார்.

தூக்கிலிடப்படல்

  • போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்பசேர்வையையும் தூக்கிலிட்டனர்.

கௌரவிப்பு

  • முன்பு தீரன் சின்னமலை நினைவாக திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாக கொண்டு போக்குவரத்துக் கழகமும், கரூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமும் இருந்தது.
  • தீரன் சின்னமலைக்குத், தமிழக அரசு சென்னையில் உருவச்சிலை ஒன்றை அமைத்ததுள்ளது. தமிழக அரசின் சார்பில், ஓடாநிலைக் கோட்டையில் சின்னமலை நினைவு மணிமண்டபம் உள்ளது.
  • ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் தீரன் சின்னமலை மாளிகை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 17 அன்று அவர் பிறந்த நாளிலும், அவர் மறைந்த ஆடிப் பதினெட்டு நாளிலும் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொங்கு மக்கள் தங்கள் நன்றியைச் செலுத்துகின்றனர்.
  • இந்திய அரசின் தபால்தந்தி தகவல் தொடர்புத்துறை, 31 ஜூலை 2005 அன்று தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
  • 2012 ஆம் ஆண்டு தமிழக அரசால், இவர் தூக்கிலிடப்பட்ட ஊரான சங்ககிரியில், இவருக்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட திட்டமிடப்பட்டது.
  • அவ்வாறே கட்டி முடிக்கப்பட்ட மண்டபம் டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டது. அதே நாளில், கிண்டியிலுள்ள இவரது உருவச்சிலையும் புதுப்பிக்கப்பட்டு, இவரது வாழ்க்கை வரலாற்றுக் குறிப்பும் வெளியிடப்பட்டது.

 

இதையும் படிக்கலாமே

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய தகவல்கள் | Pattukkottai Kalyanasundaram History in Tamil

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments