ரஜினியின் ஜெயிலர் படம் எப்படி இருக்கு தெரியுமா? | Jailer Movie Review in Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 169வது படமான “ஜெயிலர்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த ஜெயிலர் திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் அவர்கள் இயக்கியுள்ளார்.

இந்த ஜெயிலர் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகி உள்ளது.

படம் பார்த்த ரஜினி ரசிகர் ஒருவர் ஜெயிலர் திரைப்படம் முதல் பாதி சிறப்பாக உள்ளதாகவும், குறிப்பாக படத்தில் ரஜினி மற்றும் யோகி பாபு வரும் காட்சிகள் செம காமெடியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜெய்லர் திரைப்படத்தின் முதல் பாதியில் செண்டிமெண்ட் காட்சிகளுடன் ஆக்சன் மற்றும் காமெடியும் சேர்ந்து அனைத்தும் சிறப்பாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஜெயிலர் படத்தில் அனிருத் அவர்களின் இசை வெறித்தனமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஜெயிலர் படத்தின் இன்டர்வெல் சீனில் வரும் ஆக்சன் பிளாக் செம மாஸாக இருக்கிறது. படத்தின் முதல் பாதி செமையாக இருப்பதாகவும் படத்தின் இரண்டாவது பாதியில் ஒரு சர்ப்ரைஸ் ஆன சிறப்பு தோற்றமும் இருப்பதாக ரசிகர்கள் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.