திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்ய தனது அன்னையிடமிருந்து வேல் வாங்கிய சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் கும்பாபிஷேகம் ஜூலை 5ஆம் தேதி 2023 நடைபெற இருக்கிறது.

சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் ஜூலை 5ஆம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கிபி 4 -ஆம் நூற்றாண்டில் சிக்கல் என்ற கிராமத்தில் ஸ்ரீ நவநீதேஸ்வரர் சுவாமி திருக்கோயில் கட்டப்பட்டது.

திருஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி சுவாமி ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்புமிக்க ஸ்தலமாகும்.

இந்த கோவிலில் தான் (சிக்கலில்) வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்தார் .

சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்ற ஆண்டுகள் ➨ 1932, 1961, 1991, 2004 தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கல் சிங்காரவேலர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.

சிக்கல் சிங்காரவேலர் கோவில் அமைந்துள்ள மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டம்.

திருவாரூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் சிக்கல் என்ற ஒரு கிராமம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் தான் சிக்கல் சிங்காரவேலர் கோவில் உள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் ➨ ஜூலை 5ஆம் தேதி (புதன்கிழமை) 2023 காலை 9.45 மணிக்கு ராஜ கோபுரங்கள் மற்றும் அனைத்து விமானங்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10.10 மணிக்கு ஸ்ரீசக்தியாயதாக்ஷி உடனமர் ஸ்ரீநவநீதேசுவர சுவாமி மூலஸ்தானங்களுக்கும் மற்றும் ஸ்ரீ சிங்கார வேலவருக்கும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

பக்த கோடிகள் அனைவரும் வருக. இறைவனின் அருளைப் பெறுக.