HomeTAMIL NADUவீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு | Veerapandiya Kattabomman History in Tamil

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு | Veerapandiya Kattabomman History in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

வீரபாண்டிய கட்டபொம்மன் | Veerapandiya Kattabomman

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு பற்றிய தொகுப்பு

வீர வசனம் என்றாலே நம்மில் பலருக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன் கூறிய “யாரைக் கேட்கிறாய் வரி ..? எவரை கேட்கிறாய் வட்டி..?” என்கிற வசனம் தான் அந்த அளவிற்கு 200 ஆண்டுகளை தாண்டியும் அவரது வீரம் தமிழ் மண்ணில் மறையாமல் உள்ளது. அந்த அளவிற்கு வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்தவர் தான் நமது வீரபாண்டிய கட்டபொம்மன்.

ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில் தங்களது ஆதிக்கத்தினை செலுத்தியபோது அவர்களை துணிந்து நின்று எதிர்த்தவர் நமது வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள். இந்த பதிவில் இந்த மாவீரனை பற்றி தான் பார்க்கப் போகிறோம். வாருங்கள் நண்பர்களே,

வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய குறிப்புகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் படம்

  • வீரபாண்டிய கட்டபொம்மன் 18 ஆம் நூற்றாண்டில் பாஞ்சாலங்குறிச்சியை ஆட்சி செய்த ஒரு பாளையக்காரர் ஆவார்.
இயற்பெயர் வீரபாண்டியன்
இவரது அடைமொழி கட்டபொம்மன்
பிறப்பு ஜனவரி 3, 1760
பிறந்த ஊர் பாஞ்சாலங்குறிச்சி
பெற்றோர் ஜெகவீர கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள்
அரசகுலம் நாயக்க மன்னர்
மனைவி வீரசக்கம்மாள்
இறப்பு அக்டோபர் 16, 1799
வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை கயத்தாறில் உள்ளது
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட ஆண்டு அக்டோபர் 16, 1799
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடம் கயத்தாறு (தூத்துக்குடி மாவட்டம்)
வீரபாண்டிய கட்டபொம்மன் ஆட்சி செய்த இடம் பாஞ்சாலங்குறிச்சி (அப்போதைய திருநெல்வேலி மாவட்டம். தற்போது தூத்துக்குடி மாவட்டம்)

வீரபாண்டிய கட்டபொம்மனின் இளமைப் பருவம்

வீரபாண்டிய கட்டபொம்மனை சேர்த்து அவருடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர். அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் உண்டு. இவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் செல்வாக்காகவே வளர்ந்தார். இவர் தந்தை மேல் உள்ள பாசம் மற்றும் ஈர்ப்பினால் தனது இளம் வயதில் தனது தந்தையான ஜெகவீர கட்டபொம்மனுக்கு உதவியாக இருந்து வந்தார்.

பிறகு கட்டபொம்மன் வாலிப வயதினை அடைந்த பின்பு வீரசக்கம்மாள் என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு புத்திர பாக்கியம் அமையவில்லை. இவரது சந்ததி இவருடன் முடிந்துவிட்டது.

வீரபாண்டிய கட்டபொம்மன் அரசராக அரியணை ஏறுதல்

  • 47 ஆவது பாளையக்காரராக அரியணை ஏறினார் வீரபாண்டிய கட்டபொம்மன்.

தனது 30 ஆம் வயதில் தனது தந்தையின் பாளையக்காரர் என்ற அரியாசனத்தில் அமர்ந்தார் வீரபாண்டிய கட்டபொம்மன். அவருக்கு இரு சகோதரர்கள் இருந்தும் அவர் அரியணை ஏற காரணம் அவர் மக்களிடத்தில் பெற்றிருந்த நன்மதிப்பும் அவரது வீரமும் தான் காரணம்.

பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆங்கிலேயர்கள் பல ராஜ்ஜியங்களில் வரி வசூல் செய்து கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களுக்கு தொடர்ந்து பல ராஜ்ய மன்னர்கள் கப்பம் கட்டி வந்தனர். இதனால் கட்டபொம்மனும் அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தது. தன் ராஜ்ஜியத்தில் ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டும் அளவிற்கு பணம் இல்லை என்பதனால், மக்களிடம் சென்று வரி வசூல் செய்தனர். அப்போது அந்த பகுதியில் வாழும் மக்கள் கட்டபொம்மனை வசைபாட துவங்கினர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் – ஜாக்சன் துரை

மக்கள் தன்னை வசை பாடுவதைக் கண்டு மனம் வருந்திய நிலையில் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனிடம் திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஜாக்சன் துரை வரிப்பணத்தினை வசூலிக்க வந்தான்.

அப்போது கோபத்தின் மிகுதியில் இருந்த வீரபாண்டிய கட்டபொம்மன் ஜாக்சன் துரையை நோக்கி,

வீரபாண்டிய கட்டபொம்மன் கவிதை

 

வீரபாண்டிய கட்டபொம்மன் வீர வசனம்

நீர் தான் ஜாக்சன் துரை என்பவரா என்று ஆரம்பித்து…

“வரி, வட்டி, திறை, கிஸ்தி…
யாரை கேட்கிறாய் வரி …
எதற்கு கேட்கிறாய் வரி…
வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..
உனக்கேன் கட்ட வேண்டும் வரி.

எங்களோடு வயலுக்கு வந்தாயா?
நாற்று நட்டாயா? ஏற்றம் இறைத்தாயா?
அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா?
மானங்கெட்டவனே …!

என்று வீரபாண்டிய கட்டபொம்மன் துணிச்சலாக தனது வீரத்தினை ஜாக்சன் துரையிடம் வெளிப்படுத்தி வரியினை கட்ட முடியாது என்று துணிச்சலாக கூறி அவனை வெளியே அனுப்பினார்.

போர்க்களத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தானை வீழ்த்திய பின்பு அவர்களது பார்வை வீரபாண்டிய கட்டபொம்மன் மீது திரும்பியது. வீரபாண்டிய கட்டபொம்மனை வீழ்த்தினால் தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் என்று நினைத்த ஆங்கிலேயர்கள் அவர் மீது போர் தொடுக்க தயாரானார்கள். இதை முன்பே கணித்த கட்டபொம்மன் தனது ஆதரவாளர்களுடன் ஆங்கிலேயரை எதிர்த்தார். போரில் கடுமையாக சண்டையிட்டார் இருந்த போதிலும் ஆங்கிலேயர்களால் அவரது ராஜ்ஜியம் கவரப்பட்டது.

போரில் தனது ராஜ்ஜியத்தை இழந்த கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னரிடம் அடைக்கலம் கேட்டார். ஆனால் ஆங்கிலேயர்களுக்காக பயந்த மன்னர் விஜய ரகுநாத தொண்டைமான் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்துவிட்டார். அதோடு அவரையும் ஆங்கிலேயர்கள் சிறை பிடித்து சென்றனர்.

தூக்கிலிடப்பட்ட கட்டபொம்மன்

பிடிபட்ட கட்டபொம்மன் தூக்கு மேடை ஏறும் போதும் அவரது பேச்சில் வீரமும், தைரியமும் இருந்தது.

ஆங்கிலேயர்கள் தன்னை சிறைப்பிடித்த பின்னரும் நடந்த விசாரணையின் போதும் தனது வீரத்தினை வெளிக்காட்டினார் வீரபாண்டிய கட்டபொம்மன். விசாரணையின் போது கட்டபொம்மன் “நான் உங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்து தான் உங்கள் மீது போர் புரிந்தேன்” என்று வீர உரை புரிந்தார்.

மனம் நொந்த கட்டபொம்மன் அங்கு இருந்த மக்களிடம் ‘நான் இப்படி சாவதை விட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை பாதுகாப்பதற்காக போரிட்டு செத்திருக்கலாம்’ என்று கூறினார்.

ஆங்கிலேய தளபதி பானர்மேன் உத்தரவின் படி, அக்டோபர் 19ஆம் தேதி 1799 ஆம் ஆண்டு கயத்தாறு என்னும் இடத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிடப்பட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மனை சிறப்பித்தல்

கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தை போற்றும் விதமாகவும், நினைவு கூறும் விதமாகவும் தமிழ்நாட்டில் உள்ள வெலிங்டனில் ஒரு சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

வீரபாண்டிய கட்டபொம்மன் படம்

வீரபாண்டிய கட்டபொம்மனை சிறப்பிக்கும் வகையில், 1959 ஆம் ஆண்டில் நடிகர் சிவாஜி கணேசன் வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்த திரைப்படம் வெளியிடப்பட்டது.

சிவாஜியின் நடிப்பை பாராட்டும் விதமாக, எகிப்து பட விழாவில் அவருக்கு ‘சர்வதேச விருது’ கிடைத்தது.

English Overview for Veerapandiya Kattabomman History

வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கை வரலாறு

 

Veerapandiya Kattabomman birthday January 3, 1760
Veerapandiya Kattabomman Palace Panchalankurichi
Veerapandiya Kattabomman Death Kayathar on 16 October 1799

 

Veerapandiya Kattabomman was an 18th century Palayakarrar and king of Panchalankurichi in Tamilnadu.

Panchalankurichi is Located by Thoothukudi District.

Veerapandiya Kattabomman refused to accept the sovereignty of the British East India Company and waged a war against them.

Veerapandiya Kattabomman was captured by the British with the help of the ruler of the kingdom of Pudukottai, Vijaya Raghunatha Tondaiman, and at the age of 39 Kattabomman was hanged at Kayathar on 16 October 1799

To commemorate the bicentenary of Veerapandiya Kattabomman’s hanging, the Government of India released a postal stamp in his honour on 16 October 1999.

The Indian Navy communications centre at Vijayanarayanam is named INS Kattabomman.

INS Kattabomman is the designation of the VLF – transmission facility of the Indian Navy situated at Vijayanarayanam near Tirunelveli District.

இதையும் படிக்கலாமே,

பாரதியார் பற்றிய முழு தகவல்கள் | Bharathiyar History in Tamil
பாரதிதாசன் பற்றிய முழு தகவல்கள் | Bharathidasan History in Tamil
தந்தை பெரியார் பற்றிய தகவல்கள் | Thanthai Periyar History in Tamil | thatstamil
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments