HomeGENERAL SCIENCETNPSC Group 4,Vao,Chemistry Online Mock Test in Tamil

TNPSC Group 4,Vao,Chemistry Online Mock Test in Tamil

THATSTAMIL-GOOGLE-NEWS

               TNPSC Group 4,Vao,Chemistry Online Mock Test in Tamil 

1) எத்தனால் அதிகமாக பயன்படுத்துவதால் பாதிக்கப்படும் பகுதி ?

A)சிறுநீரகம்
B)நுரையீரல்
C)இதயம்
D)கல்லீரல்

Answer: D

2) ஆன்டிபைரடிக் மருந்து பயன்படுவது ?

A)உடல் வெப்பநிலையை குறைக்க
B)உடல் வெப்பத்தை அதிகப்படுத்த
C) நோய் தொற்றுவதை தடுக்க
D) வைரஸ் தொற்றை எதிர்க்க

Answer: A

3) கிருமி நாசினியாகவும் , நோய்த் தொற்றைத் தடுக்கவும் பயன்படும் , அடர் நீலம் கலந்த சிவப்பு நிறம் கொண்ட சேர்மம் எது?

A) பொட்டாசியம் நைட்ரேட்
B) சோடியம் தயோ சல்பேட்
C) பொட்டாசியம் பெர்மாங்கனேட்
D) கால்சியம் பாஸ்பேட்

Answer: C

4)  துருப்பிடித்தலை தடுப்பதற்கு குரோமியத்தை பெற்றுள்ள எஃகு உலோகக்கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 A) தேன் இரும்பு
B) வார்ப்பு இரும்பு
C) கடினமான  எஃகு
D) துருப்பிடிக்காத இரும்பு

Answer: D

5) பேக்கலைட் எதிலிருந்து பெறப்படுகிறது?

A) பீனால், பார்மால்டிஹைடு
B) பீனால், பார்மிக் அமிலம்
C) எத்திலின், அசிட்டால்டிஹைடு
D) அடிபிக் அமிலம்,காப்ரோலேக்டம்

Answer: A

6) தூய்மையான ஆல்கஹால் எந்த முறை மூலம் பெறப்படுகிறது?

A) அஸியோட்ராஃபிக்
B) கோல்ஃப் முறை
C) வெற்றிட காய்ச்சி வடித்தல்
D) பின்னக் காய்ச்சி வடித்தல்

Answer: A

7) வைட்டமின் “C” என்பது ?

A) அசிட்டிக் அமிலம்
B) சிட்ரிக் அமிலம்
C) லாக்டிக் அமிலம்
D) அஸ்கார்பிக் அமிலம்

Answer: D

8)  துருபிடிக்காத இரும்பு தயாரித்தலில் பயன்படுத்தப்படும் உலோக இணைகள்?

A) குரோமியம் மற்றும் எஃகு
B) துத்தநாகம் மற்றும் இரும்பு
C) தாமிரம் மற்றும் இரும்பு
D) இரும்பு மற்றும் குரோமியம்

Answer: A

9) ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகளுக்கிடையேயுள்ள வேறுபாடு என்பது எதன் வேறுபட்ட எண்ணிக்கை?

A) புரோட்டான்கள்
B) நியூட்ரான்கள்
C) எலெக்ட்ரான்கள்
D) போட்டான்கள்

Answer: B

10)  கீழ்க்கண்டவற்றுள் எந்த மருந்து தொற்றுநோயைத் தடுக்கப் பயன்படுகிறது?

A) சல்ஃபாதையோசோல்
B) இன்சுலின்
C) ஆஸ்பிரின்
D) ரெஸ்பிரின்

Answer: A

11) சர்க்கரை நோயாளிகளின் சிறுநீரில் ……. அதிகமாக இருக்கும்.

A) சுக்ரோஸ்
B) குளுக்கோஸ்
C) லாக்டோஸ்
D) மால்டோஸ்

Answer: B

12)  இன்சுலின் என்பது வேதியியல் படி?

A) கார்போஹைட்ரேட்
B) பெப்டைட்
C) நியுக்ளியோசைட்
D) ஒலிகோ சர்க்கரை

Answer: B

13) கூற்று: A. யூரியா அதிகளவில் உரமாக பயன்படுகிறது.
காரணம்: R. யூரியா ஒரு கரிமச் சேர்மம்.

A) A மற்றும் R சரியானவை. R ஆனது A க்குச்  சரியான விளக்கம்
B) A மற்றும் R சரியானது
C) A மற்றும் R சரி. R ஆனது A க்கு சரியான விளக்கம் அல்ல
D) A சரி R தவறு

Answer: C

14) திரவ ஹைட்ரோகார்பன்கள் குறைந்த மூலக்கூறு எடை கொண்ட வாயு ஹைட்ரோ கார்பன்களாக மாற்றப்படும் முறை?

A) ஹைட்ரஜனேற்றம்
B) மறு உறுதல்
C) வெடித்தல்
D) ஒடுங்குதல்

Answer: C

15)  வேதியியல்படி நீர் என்பது?

A) ஹைடிரைடு
B) ஆக்ஸைடு
C) ஹைட்ராக்ஸைடு
D) பெராக்ஸைடு

Answer: B

16) நியுக்ளிக் அமிலங்களில் உள்ள அமிலம்?

A) நைட்ரிக் அமிலம்
B) சல்பியூரிக் அமிலம்
C) பாஸ்பாரிக் அமிலம்
D) கார்போனிக் அமிலம்

Answer: C

17) இன்சுலின் கட்டுப்படுத்துவது?

A) தைராய்டில் உள்ள அயோடினை
B) இரத்தத்தில் உள்ள மொத்த இரும்பு
C) இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு
D) இரத்தத்தில் உள்ள யூரியா அளவு

Answer: C

18) வேதியியல்படி,  இன்டர்ஃபெரான் என்பது?

A) கார்போஹைட்ரேட்
B) கிளைக்கோபுரோட்டீன்
C) நியூக்ளிக் அமிலம்
D) மஞ்சள் நிற வாயு கலந்த ஹைட்ரோ கார்பன்

Answer: B

19)  இன்டர்ஃபெரான் எதை அனுமதிப்பதில்லை?

A) பாக்டீரியா
B) வைரஸ்
C) நுண்ணுயிர்கள்
D) பூஞ்சைகள்

Answer: B

20) இன்டர்ஃபெரானை உருவாக்குவது எது?

A) ரொட்டிக்கார ஈஸ்ட்
B) பாபெய்ன்
C) இன்சுலின்
D) பாக்டீரியா

Answer: D

21) வாணிப முறையில் தூய்மையற்ற சோடியம் கார்பனேட் என்பது?

A) ரொட்டிசோடா
B) சலவைசோடா
C) சுண்ணாம்பு
D) கருப்பு சாம்பல்

Answer: D

22) மிளகிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருள்?

A) தைமால்
B) மென்தால்
C) மார்பைன்
D) பைப்பரைன்

Answer: B

23) செயற்கை பட்டு இவ்வாறும் அழைக்கப்படுகிறது?

A) ரேயான்
B) டெக்ரான்
C) கண்ணாடி இழை
D) நைலான்

Answer: A

24) வேதியியல்படி, வெள்ளை ஆல்கஹால் என்பது?

A) பெட்ரோலிய ஹைட்ரோ கார்பன் கலவை
B) சுத்திகரிக்கப்பட்ட எத்தனால்
C) சுத்தமான எத்தில் ஆல்கஹால்
D) ஆல்கஹால்

Answer: A

25) உயிர் எதிர்ப்பொருள் “மைட்டோமிசின்” என்பது எதைக் குணப்படுத்த உதவுகிறது?

A) புற்றுநோய்
B) எய்ட்ஸ்
C) போலியோ
D) பால்வினை நோய் வகை

Answer: A

26) ”நியாசின்” என்னும் வேதிச் சேர்மம் எதன் பகுதிப்பொருள்?

A) வைட்டமின் C
B) வைட்டமின் B காம்ப்ளக்ஸ்
C) ஹார்மோன் தைராக்ஸின்
D) சுக்ரோஸ்

Answer: B

27) “செம்பு அரக்கன்” எனும் வார்த்தை …….. உலோகத்தைக் குறிக்கும்.

A) வெள்ளீயம்
B) நிக்கல்
C) துத்தநாகம்
D) இரும்பு

Answer: B

28) வாணிப முறையில்  அம்மோனியா தயாரிக்கப்படும் முறை?

A) ஆஸ்வால்ட் முறை
B) ஹால் முறை
C) ஹேபர் முறை
D) தொடு முறை

Answer: C

29) தொற்று நோய்  பரவாமலிருப்பதற்கும்,கருத்தடைக்கும் உபயோகிப்பது?

A) அசிட்டோன்
B) சல்பர்
C) பார்மால்டிஹைடு
D) பென்சோயிக் அமிலம்

Answer: C

30) அலுமினியத்தைப் பிரித்தெடுக்கும் முறை?

A) டவ் முறை
B) ஹேபர் முறை
C) ஹால் முறை
D) மின்னாற்பகுத்தல் முறை

Answer: C

31) பெட்ரோலியத்தில் உள்ள ஹைட்ரோ  கார்பன்களை பிரித்தெடுக்கும் முறை?

A) ஹைட்ரஜன் ஏற்றம்
B) வினையூக்கி வெடிப்பு
C) பின்ன காய்ச்சி வடித்தல்
D) பல்படியாக்கல்

Answer: C

32) ஆஸ்பிரின் என்பது?

A) அனல் ஜேசிக்
B) ஆன்டி பைரடிக்
C) மேற்கூறிய இரண்டும்
D) வசியப்படுத்துபவை

Answer: C

33) இன்டர்பெரான் என்பது?

A) பாக்டீரியா எதிர்பொருள்
B) புற்றுநோய் எதிர்பொருள்
C) வைரஸ் எதிர்பொருள்
D) ஹார்மோன்

Answer: C

34) கிளைக்கோஜன் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

A) விலங்கு ஸ்டார்ச்
B) ஹார்மோன்
C) அல்சீனிக் அமிலம்
D) செல்லுலோஸ்

Answer: A

35)  “ சைனோ ஜெனிசிஸ்” எதன் வெளியேற்றத்தை கூறுகிறது?

A) ஹைட்ரஜன் சயனைடு
B) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
C) ஹைட்ரஜன் பெராக்சைடு
D) ஹைட்ரஜன் சல்பைடு

Answer: A

36) அயோடின் அடங்கியுள்ள ஹார்மோன்?

A) தைராக்ஸின்
B) டெஸ்டோஸ்டீரோன்
C) இன்சுலின்
D) அட்ரினலின்

Answer: A

37) இயற்கை சாயமூட்டிக்கு எடுத்துக்காட்டு ?

A) பினாப்தலின்
B) மார்சியஸ் மஞ்சள்
C) அலிசரின்
D) மாலக்சைட்

Answer : C

38) இதில் எது பெரிய மூலக்கூறு இல்லை?

A) டி.என்.ஏ
B) ஸ்டார்ச்
C) பால்மைட்டேட்
D) இன்சுலின்

Answer: C

39) A.நானோ தொழில் நுட்பம் 10 -9 m என்ற அளவில் உள்ள மிக மிகச் சிறு பொருட்கள் மூலம் செயல்படுகிறது.
R. நானோ பொருட்கள் மருந்து செலுத்துவதற்கு பயன்படுகிறது.

A) (A) மற்றும் (R) சரியானவை. மேலும் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கம்.
B) (A) மற்றும் (R) சரியானவை. மேலும் (R) என்பது (A)விற்கான சரியான விளக்கமல்ல.
C) (A) சரியானது. ஆனால் (R) தவறானது.
D) (A) தவறானது ஆனால் (R) சரியானது.

Answer: B

40) தீக்குச்சியிலுள்ள கருப்புப் பொருள் எதனால்  உருவாக்கப்பட்டது?

A) மஞ்சள் பாஸ்பரஸ்
B) கருப்பு பாஸ்பரஸ்
C) சார்கோல்
D) கரி (கோல்)

Answer: A

41) உலக வெப்பமயமாதல் என்பது எவ்வாயுவின் அடர்த்தி அதிகமாவதால் நிகழ்கிறது?

A) O3
B) NO2
C) SO2
D) CO2

Answer: D

42) மூளைக்கட்டி மற்றும் தைராய்டு பிரச்சனையைக்  கண்டறிய பயன்படுவது?

A) 131I53
B) 60CO27
C) 24Na11
D) 14C6

Answer: A

43) சிரிப்பூட்டும் வாயு என்பது?

A) NO
B) N2O3
C) N2O
D) N2O5

Answer: C

44) இரத்த உறைதலில் பயன்படும் புரோட்டீன்?

A) அல்புமின் A
B) குளோபுலின்
C) ஃபைபிராயின்
D) பைப்ரினோஜன்

Answer: D

45) முதலில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கரிமச் சேர்மம்?

A) குளுக்கோஸ்
B) மீத்தேன்
C) பென்சைன்
D) யூரியா

Answer: D

46) வேதியியல்படி, இன்சுலின் என்ற ஹார்மோன்?

A) கொழுப்பு
B) ஊக்க மருந்து
C) புரோட்டீன்
D) கார்போஹைட்ரேட்

Answer: C

47) உலோக அயனி உள்ள வைட்டமின்?

A) வைட்டமின் A
B) வைட்டமின் B12
C) வைட்டமின்  B6
D) ரிபோஃபிளேவின்

Answer: B

48) முன்கழுத்துக் கழலை நோய் எதன் குறைபாட்டால்  உண்டாகிறது?

A) கால்சியம்
B) இரும்பு
C) பாஸ்பரஸ்
D) அயோடின்

Answer: D

49) குடிபோதையில் வண்டி ஓட்டுவதைக் கண்டுபிடிக்கும் மூச்சுத் தேர்வு?

ⅰ. பொட்டாசியம் குரோமைட் சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
ⅱ. 0.10% கீழ் ஆல்கஹால் இருந்தால் தவறில்லை.
ⅲ. ஆல்கஹாலின் அளவு கல்லீரலிலுள்ள ஆல்கஹாலைக் குறிக்கும்.

A) ⅰ, ⅲ
B) ⅱ, ⅲ
C)  ⅰ, ⅱ
D) ⅰ, ⅱ, ⅲ

Answer: C

50) அசிட்டோனின் IUPAC பெயர்?
A) எத்தனோன்
B) புரோபனோன்
C) பியுட்டனோன்
D) மீத்தனோன்
Answer: B
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments