HomeTNPSC GROUP 1TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 MAINS EXAM QUESTION TERMS OR...

TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 MAINS EXAM QUESTION TERMS OR TERMINOLOGY

THATSTAMIL-GOOGLE-NEWS

TNPSC GROUP 1 AND TNPSC GROUP 2 MAINS EXAM QUESTION TERMS OR TERMINOLOGY

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 மற்றும் குரூப் 2 முதன்மை தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில், வினாத்தாளில் உள்ள Question Keywords மற்றும் Question Terms (Question Terminology) பற்றிய தெளிவான விளக்கம் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.படித்து பயன் பெறுங்கள்…

Question Keywords:

1.Explain – விவரி

2.Summarise – சுருக்குக

 1. Elaborate – விரிவாக விளக்குக
 2. Elucidate – தெளிவுப்படுத்துக
 3. Substantiate – ஆதாரத்துடன் விளக்குக

6.Discuss – விவாதி

 1. Comment – கருத்திடுக
 2. Examine – ஆராய்க
 3. Critically Examine
 4. Evaluate – மதிப்பிடுக
 5. Critically Evaluate/Analyse – விமர்சன ரீதியாக மதிப்பிடுக
 6. Analyze – ஆராய்க
 7. Enumerate/Outline – பட்டியலிடுக
 8. Do you Agree – நீங்கள் ஏற்கிறீர்களா
 9. Describe – விவரித்தல்
 10. Critically Analyse – கவனமாக ஆராய்க.
 11. Bring out – வெளிக்கொணர்க
 12. What do you know about – நீவீர் அறிவது என்ன?
 13. Give an account on – குறிப்பு தருக
 1. Highlight – ஒளிரூட்டுக
 2. Justify – நியாயப்படுத்துக

 

Question Terminology

Detailed explanation – விரிவான விளக்கம்

How, What, Why – எப்படி, என்ன, ஏன் போன்ற விளக்கங்களோடு வரும்.

 

Explain Meaning in Tamil and English

1.Explain - விவரி

Example Question in English and Tamil 

Explain the characteristics and distribution of soil types in India and list out the causes of infertility of soils.

இந்திய மண்வகைகளின் குணாதிசயங்கள் மற்றும் பரவலை விவரித்து மண் வள குன்றலுக்கான காரணங்களை பட்டியலிடுக.

 

Summarise Meaning in Tamil and English

2.Summarise - சுருக்குக

Only main facts – Give a condensed version

முக்கியமான குறிப்புகள் மட்டும் கொடுத்து சுருக்கமாக விடையளிக்க வேண்டும்.

Example Question in English and Tamil

Summarise the role played by Gandhi in Kheda Satyagraha

கேதா சத்யகிரகத்தில் காந்தியின் பங்கு குறித்து சுருக்கமாக எழுதுக.

 

Elaborate Meaning in Tamil and English

3.Elaborate - விரிவாக விளக்குக

Just Explain What it is….in Detailed view of your Answers…

Examiner/Paper Evaluator – க்கு ஒன்றும் தெரியாது அல்லது திருத்துபவருக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து கேள்விக்கான பதிலை முழுமையாக விவரித்து எழுத வேண்டும்.

Example Question in English and Tamil

Many voices had strengthened and enriched the nationalist movement during the Gandhian phase – Elaborate

காந்திக் காலத்தில் சில குரல்கள் விடுதலைப் போராட்டத்திற்கு வலுக் கொடுத்தன அதனைப் பற்றி விரிவாக விளக்குக.

 

Elucidate Meaning in Tamil and English

4.Elucidate - தெளிவுப்படுத்துக

Explain with Reasons, Examples,case studies…..

Examiner/Paper Evaluator – க்கு ஒன்றும் தெரியாது,திருத்துபவருக்கு எதுவும் தெரியாது அவருக்கு புரியும் வகையில் உதாரணங்கள், காரணங்கள் மற்றும் ஆய்வுகளோடு விவரித்து எழுத வேண்டும்.

Example Question in English and Tamil

Elucidate the reason begind the failure of chandrayan – 2

சந்திராயன் – 2 தோல்விக்கு பின் உள்ள காரணத்தை தெளிவுப்படுத்துக.

 

Substantiate Meaning in Tamil and English

5.Substantiate - ஆதாரத்துடன் விளக்குக

Explain with case studies that is Evidences….(your Answers format)

தரவுகள் மற்றும் ஆய்வுகளோடு விவரித்தல் அதாவது, ஆதாரப்பூர்வமாக உங்களது பதில்களை விவரித்து எழுத வேண்டும்.

Example Question in English and Tamil

Cop – 25 conference will reduce CO2 Emission by 2020 – substantiate

Cop – 25 மாநாடு 2020 – CO2 வெளியீட்டைக் குறைக்குமா ஆதாரத்துடன் விளக்குக.

 

Discuss Meaning in Tamil and English

6.Discuss - விவாதி

Say both positive + Negative conclude with any one in your final Answers….

நன்மை மற்றும் தீமைகளை எடுத்துக் கூறி ஏதேனும் ஒன்றை (நன்மை/தீமை) கொண்டு முடிவுரை கொடுத்து கடைசியாக உங்களது பதில்களை எழுதி முடிக்க வேண்டும்.

Example Question in English and Tamil

Discuss the important provisions of the Regulating Act of 1773.

1773 ஒழுங்குமுறைச் சட்டத்தின் முக்கியமான விதிகளைப் பற்றி விவாதிக்கவும்.

 

Comment Meaning in Tamil and English

7.Comment - கருத்திடுக

Students’s view that is Positive or Negative….Answers….

மாணவரின் தனிப்பட்ட கருத்தினை தெரிவிக்கலாம். அது நேர்மறை (அ) எதிர்மறை முடிவுகளாக பதில் அமையலாம்…..

Example Question in English and Tamil

The Constitution of India provides for a High Court for each state, but the seventh amendment act of 1956 authorised for common High Court for two or more States and a Union territory. Now, there are only 24 High Courts in the country. It will be better if each State has a High Court – Comment.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு மாநிலத்திற்கு ஒரு உயர்நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று கூறுகிறது. அதே நேரத்தில் ஏழாவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 1956 – ன் கீழ் ஒன்று அல்லது இரண்டு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு சேர்த்து ஒரு உயர்நீதிமன்றம் அமையலாம் என்று கூறுகிறது. தற்போது நமது நாட்டில் 24 உயர் நீதிமன்றங்கள் மட்டுமே உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் உயர்நீதிமன்றம் இருந்தால் சிறப்பாக இருக்கும். உங்களது கருத்தினை தெரிவித்து விவாதிக்க.

 

Examine Meaning in Tamil and English

8.Examine - ஆராய்க

Examiner/Paper Evaluator – க்கு அனைத்தும் தெரியும், So, give unique points about that. திருத்துபவருக்கு அதனை பற்றி முழுமையாக தெரியும்.அதனால் தனித்துவமான மற்றும் முக்கியமான உங்களது குறிப்புகளை பதில்களாக தர வேண்டும்.

Example Question in English and Tamil

In the Indian context, Examine the causes, effects and control measures of desertification.

பாலை நிலமாதலின் காரணிகள், அது ஏற்படுத்தும் விளைவுகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் முறைகளை நம் நாட்டின் சூழ்நிலையின் அடிப்படையில் ஆய்க.

 

Critically Examine Meaning in Tamil and English

9.Critically Examine - விமர்சன ரீதியாக ஆராய்க.

Examiner/Paper Evaluator – க்கு அனைத்தும் தெரியும் so give more detailed unique comments over it. திருத்துபவருக்கு அதனை பற்றிய முழுமையான அறிவுண்டு. எனவே விரிவான தனித்துவமான உங்களது கருத்துக்களை பதில்களாக எழுதி முடிக்க வேண்டும்.

Example Question in English and Tamil

Critically Examine the citizenship Amendment bill ?

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை விமர்சன ரீதியாக ஆராய்க?

 

Evaluate Meaning in Tamil and English

10.Evaluate - மதிப்பிடுக

Give Positive and Negative points.Which points more weighs in positive or Negative points. Mention any one Points in your final conclusion.

நன்மை மற்றும் தீமைகளை பற்றி குறிப்பிட்டு, அவைகளில் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் குறிப்பிட வேண்டும். கடைசியாக முடிவுரையில் உங்களது பதில்களில் நன்மை அல்லது தீமை ஏதேனும் ஒன்று பற்றி குறிப்பிட்டு முடிக்க வேண்டும்.

Example Question in English and Tamil

Evaluate the contribution of Periyar E.V.R. in the promotion of Social Justice.

சமூக நீதியின் மேம்பாட்டிற்கு பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய பங்கினை மதிப்பிடுக.

 

Critically Evaluate Meaning in Tamil and English

11.Critically Evaluate/Analyse - விமர்சன ரீதியாக மதிப்பிடுக

Give Both Positive and Negative Points & say Why Negative > Positive

நன்மை மற்றும் தீமை இரண்டையும் குறிப்பிட்டு எதனால் நன்மைகளை விட தீமைகள் அதிகம் இருக்கின்றன என்பதனை கூற வேண்டும்.

Example Question in English and Tamil

Critically analyse the Special Economic Zones (SEZs)

சிறப்பு பொருளாதார மண்டலம் பற்றி தீர ஆய்க.(SEZs)

 

Analyze Meaning in Tamil and English

12.Analyze - ஆராய்க

Explain both positive & negative, conclusion is needed

நன்மை மற்றும் தீமைகளை பற்றி விவரித்த பிறகு முடிவுரை கூறப்பட வேண்டும்.

Example Question in English and Tamil

There was a disintegration of Rural Economy due to the impact of British Rule in India – Analyse.

இந்தியாவில் பிரிட்டி ஆட்சியின் விளைவாக கிராமப்புற பொருளாதாரம் சீரழிந்தது – திறனாய்வு செய்.

 

Enumerate/Outline Meaning in Tamil and English

13.Enumerate/Outline - பட்டியலிடுக

List out the reasons

காரணங்களை பட்டியலிடுதல்

Example Question in English and Tamil

Who was popularly called as Madurai Gandhi? Enumerate his achievements.

மதுரை காந்தி என அழைக்கப்பட்டவர் யார்? அவரது சாதனைகளை வரிசைப்படுத்துக.

 

Do you Agree Meaning in Tamil and English

14.Do you Agree - நீங்கள் ஏற்கிறீர்களா

Give points for either Agree/ Disagree

ஏற்கிறீர்களா/ மறுக்கிறீர்களா என்பதை கூறிய பிறகு, ஏன் என்பதற்கான காரணங்களை கூறி பதிலை நிறைவு செய்ய வேண்டும்.

Example Question in English and Tamil

“India is an Under developed country” – Do you agree with this. If no, give reasons for it and describe the salient features of the Indian economy.

“இந்தியா வளர்ச்சியடையாத நாடு” இதை ஒப்புக் கொள்வீரா? இல்லையெனில் அதற்கான காரணங்களை தருக மற்றும் இந்தியப் பொருளாதாரத்தின் சிறப்பியல்புகளை விளக்குக.

 

Describe Meaning in Tamil and English

15.Describe - விவரித்தல்

Trace the outline from the beginning

ஆரம்ப கட்டத்தில் இருந்து அதன் பாதையை விவரித்து உங்களது பதில்களை எழுத வேண்டும்.

Example Question in English and Tamil

Describe the Peasant uprisings during colonial rule in India

காலனியாதிக்கத்தின் கீழ் இந்தியாவில் ஏற்பட்ட விவசாய எழுச்சிகளை விவரி.

 

Critically Analyse Meaning in Tamil and English

16.Critically Analyse - கவனமாக ஆராய்க.

Examine the arguments in terms of its Strength and weaknesses

அதன் வலிமை அல்லது பலம் (நிறைகள்) மற்றும் குறைகள் அல்லது பலவீனங்கள் பற்றிய விவாதங்களை ஆராய்ந்து உங்களது பதில்களை எழுத வேண்டும்.

Example Question in English and Tamil

Critically analyse the defects of the Government of India Act 1935.

1935 – ஆம் ஆண்டு இந்திய அரசாங்க சட்டத்தின் குறைகளை ஆராய்க.

 

Bring out Meaning in Tamil and English

17.Bring out - வெளிக்கொணர்க

Bring out the best with in

அதன் சிறப்பம்சங்களை வெளிக்கொண்டு வரவும்.

Example Question in English and Tamil

Bring out the objectives of Nazal bari movement.

நக்சல் பாரி இயக்கத்தின் நோக்கங்களைக் கொணர்க.

 

What do you know about Meaning in Tamil and English

18.What do you know about - நீவீர் அறிவது என்ன?

Simply say what you know

உங்களுக்கு தெரிந்ததை எளிமையாக கூறி, உங்கள் பதில் விடைத்தாளில் அமைய வேண்டும்.

Example Question in English and Tamil

What do you know about “Kudumiyan malai” inscription?

குடுமியான் மலை கல்வெட்டுப் பற்றி நீ அறிவதென்ன?

 

Give an account on Meaning in Tamil and English

19.Give an account on - குறிப்பு தருக

Give detailed description, Not only said what, but why something in happened

விளக்கமான விவரம், எதனால் ஏற்பட்டது என்று மட்டுமல்லாமல் ஏன் என்பது பற்றியும் விவரித்து உங்கள் பதில் அமைய வேண்டும்.

Example Question in English and Tamil

Give an account on Kazhugu malai monolithic rock cut cave temple of the Pandyas.

பாண்டியர்களின் கழுகுமலை ஒற்றைக்கல் குடைவரை கோவில் பற்றி குறிப்பு தருக.

 

Highlight Meaning in Tamil and English

20.Highlight - ஒளிரூட்டுக

Highlight the importance of topic

தலைப்பின் முக்கியத்துவத்தை அறிந்து உங்களது பதில் அமைய வேண்டும். மையக் கருத்தினை விளக்கி எழுத வேண்டும்.

Example Question in English and Tamil

Highlight the twin epics of later Sangam literature.

பிற்கால சங்க இலக்கியங்களான இருபெரும் காப்பியங்களை ஒளிரூட்டுக.

 

Justify Meaning in Tamil and English

21.Justify - நியாயப்படுத்துக

You have to argue in favour & write favourite comments as far as possible

நீங்கள் உங்களைப் பொறுத்தமட்டில் விருப்பத்திற்காக வாதடவும், அதுகுறித்து உங்கள் குறிப்புகளை முடிந்தவரை தரவும். அதாவது உங்களால் முடிந்தவரையில் நேர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து, அதை கடைசிவரையில் உங்களது பதில்களில் கொண்டு செல்ல வேண்டும்.

Example Question in English and Tamil

Great plains are economically significant land forms in India – Justify.

பெரியச் சமவெளிகள் இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நிலத்தோற்றங்கள் – நியாயப்படுத்துக.

THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments