Homeதமிழ்Proverbs in Tamil and English | பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

Proverbs in Tamil and English | பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

THATSTAMIL-GOOGLE-NEWS

Proverbs in Tamil and English | பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

பழமொழிகள்

பழமொழியை தொல்காப்பியம் ‘முதுசொல்’ என்று குறிப்பிடுகின்றது.

பழமொழிகள் சுருக்கமான வார்த்தைகளில் இருந்தாலும் அது வாழ்வியல் கருத்துக்களை பெரிய அளவில் எடுத்துக் கூறி மக்களை நல்வழிப்படுத்துகிறது.

பழமொழி தமிழர்களின் பண்பாட்டோடும், கலாச்சாரத்தோடும் நெருங்கிய தொடர்பு மொழியாக இருந்து வந்துள்ளது.

பழமொழிகள் மூலம் தமிழர்கள் நற்பண்புகளையும் மற்றும் நல்ல வாழ்வியல் முறைகளையும் கற்றுக் கற்றுக்கொண்டனர்.

பழமொழி என்றால் என்ன?

பழமொழி என்பது ஏதாவது ஒரு வார்த்தையை அல்லது வார்த்தை அமைப்பை எளிய முறையில் சுருங்க சொல்லி விளங்க வைத்தல் ஆகும்.

காலம் காலமாக சமுதாயத்தில் இருந்து வரும் அனுபவ கருத்துக்களை குறிப்புகளாக வெளிப்படுத்துவது பழமொழியாகும்.

ஒரு கருத்தை எளிய முறையில் புரிய வைக்க பொருளை சுருக்கமாகவும் தெளிவாகவும் சுவையாகவும்  விளக்குவது பழமொழிகள் ஆகும்.

மக்களின் நீண்ட கால வாழ்வியல் அனுபவத்தின் வெளிப்பாடுகளை சுருக்கமாக சொல்வதே பழமொழிகள் ஆகும்.

பழமொழிகளைக் கொண்டு பழமொழி நானூறு என்னும் நீதி நூல் படைக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் ஒரு சில செய்கையைக் குறிக்கவும்,அதன் மூலம் கருத்து சொல்லவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நம் முன்னோர்கள் பல பழமொழிகளை சொல்லி வந்தனர்.

வாழ்வியல் பழமொழிகள்

Proverbs in Tamil Part 1 | பழமொழிகள் பகுதி 1

1.  ஆசைக்கு அளவில்லை

2.  நல்ல அறிவுரை விலைமதிப்பற்றது

3.  பேராசைக்கு இல்லை இரக்ககுணம்

4.  வாய்மையே வெல்லும்

5.  எறும்பு ஊரக் கல்லும் தேயும்

6. ‘போதும்’ என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

7. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

8. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

9. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

10. வல்லான் வகுத்ததே வாய்க்கால்

11. தன் கையே தனக்கு உதவி

12. புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து

13. இளங்கன்று பயம் அறியாது

14. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

15. மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே

16. யானைக்கும் அடிசறுக்கும்?

17.  தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்?

18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை?

19. எறும்பு ஊரக் கல்லும் தேயும்?

20. ஊழி பெயரினும் தாம் பெயரார்?

21. முயற்சி திருவினையாக்கும்

22.  அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

23.  சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்

24. அறிவே ஆற்றல்

25. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

 

Proverbs in Tamil Part 2 | பழமொழிகள் பகுதி 2

26. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

27.  வருமுன் காப்போம்

28. சுத்தம் சோறு போடும்

29.  பருவத்தே பயிர் செய்

30.  பசித்து புசி

31.  உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

32.  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

33.  உப்பிட்டவரை உள்ளளவும் நினை

34.  விருந்தும் மருந்தும் மூன்று வேளை

35.  அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

36.  இளமையில் கல்வி சிலையில் எழுத்து

37.  சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

38. கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.

39. அடியாத மாடு படியாது

40. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

41. அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு

42. அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?

43. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்

44. அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்

45. அடக்கமே பெண்ணுக்கு அழகு

46. அசைந்து தின்கிறது யானை,அசையாமல் தின்கிறது வீடு

47. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

48.  அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டார்கள்.

49. அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.

50. அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது.

proverbs in tamil and english

Proverbs in Tamil Part 3 | பழமொழிகள் பகுதி 3

51.  அடக்கம் உடையார் அறிஞர்,அடங்காதவர் கல்லார்.

52.  அந்தி மழை அழுதாலும் விடாது

53.  அகல உழுகிறதை விட ஆழ உழு

54.  அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு
இரைச்சல் இலாபம்.

55.  அடாது செய்தவன் படாது படுவான்.

56. அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்

57.  அகல் வட்டம் பகல் மழை

58.  அணில் கொம்பிலும், ஆமை கிணற்றிலும்.

59.  அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?

60.  அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.

61. அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்

62. அன்னைக்கு உதவாதவன் யாருக்கும் ஆகான்

63. அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.

64. அப்பன் அருமை மாண்டால் தெரியும்.

65. அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர்

66. அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்

67. அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.

68. அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.

69. அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்

70. அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்கப் பாயில்லை.

71. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

72. ஆக்கப் பொறுத்தவர் ஆறப் பொறுப்பதில்லை.

73. ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.

74. ஆரால் கேடு, வாயால் கேடு

75. ஆனைக்கும் அடிசறுக்கும்

Proverbs in Tamil Part 4 | பழமொழிகள் பகுதி 4

76. ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு

77. ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

78. ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.

79. ஆனை படுத்தால் ஆள் மட்டம்

80. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

81. ஆறின கஞ்சி பழங் கஞ்சி

82. ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்

83. ஆடையில்லாதவன் அரை மனிதன்

84. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.

85. ஆழமறியாமல் காலை இடாதே

86. ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு

87. ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.

88. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்

89. இறைக்கிற ஊற்றே சுரக்கும்

90. ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.

91. இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.

92. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை

93. இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம்

94. இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு.

95. இளமையில் கல்

96. இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை. இராச திசையில் கெட்டவணுமில்லை.

97. இராமனைப்போல் இராசா இருந்தால் அனுமானைப்போல் சேவகனும் இருப்பான்.

98. இரும்படிக்கும் இடத்தில் ஈக்கென்ன வேலை?

99. இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்.

100. இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா.

Proverbs in Tamil Part 5 | பழமொழிகள் பகுதி 5

101. விதை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?

102. வெளுத்ததெல்லாம் பாலல்ல

103. விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?

104. வெறுங்கை முழம் போடுமா?

105. விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.

106. வீட்டில் எலி வெளியில் புலி

107. விளையும் பயிர் முளையிலே தெரியும்

108. வெட்டு ஒன்று துண்டிரண்டு

109. மாடு மேய்க்காமற் கெட்டது, பயிர் பார்க்காமற் கெட்டது.

110.மாரியல்லது காரியம் இல்லை

111. மாடு கிழமானாலும் பாலின் சுவை போகுமா?

112. மாமியார் மெச்சின மருமகளில்லை,மருமகள் மெச்சின மாமியாரில்லை.

113. மாமியார் உடைத்தால் மண் குடம்,மருமகள் உடைத்தால் பொன்குடம்.

114. போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

115. பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை,மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

116. பொறுமை கடலினும் பெரிது.

117. பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.

118. பொறுத்தார் பூமி ஆள்வார் பொங்கினார் காடாள்வார்.

119. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

120. பொற்கலம் ஒலிக்காது, வெண்கலம் ஒலிக்கும்.

121. போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?

122. யானை இருந்தாலும் ஆயிரம் பொன்,இறந்தாலும் ஆயிரம் பொன்.

123. விண் பொய்த்தால் மண் பொய்க்கும்

124. விதி எப்படியோ மதி அப்படி

125. வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்

Proverbs in Tamil Part 6 | பழமொழிகள் பகுதி 6

126. வட்டி ஆசை முதலுக்கு கேடு

127. வரவு எட்டணா செலவு பத்தணா

128. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

129. வியாதிக்கு மருந்துண்டு, விதிக்கு மருந்துண்டா?

130. வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.

131. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு

132. நித்தம் போனால் முத்தம் சலிக்கும்

133. நீலிக்குக் கண்ணீர் இமையிலே

134. நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.

135.  நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.

136. நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

137. நாக்கிலே இருக்கிறது நன்மையும் தீமையும்.

138. நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்.

139. நாய்க்கு வேலையில்லை, நிற்க நேரமும் இல்லை.

140. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.

141. நாற்பது வயதுக்கு மேல் நாய்க் குணம்.

142. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்,கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

143. நாய் விற்ற காசு குரைக்குமா?

144. நாய் இருக்கிற இடத்தில் சண்டை உண்டு.

145. நாய் வாலை நிமிர்த்த முடியாது.

146. மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்

147. மீதூண் விரும்பேல்

148. முள்ளுமேல் சீலைபோட்டால் மெள்ள மெள்ள வாங்கவேண்டும்.

149. முள்ளை முள்ளால் எடு

150. மின்னுவது எல்லாம் பொன்னல்ல.

Proverbs in Tamil Part 7 | பழமொழிகள் பகுதி 7

151. முருங்கை பருத்தால் தூணாகுமா?

152. மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?

153. மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்

154. முகத்துக்கு முகம் கண்ணாடி

155. முப்பது வருடம் வாழ்ந்தவனும் இல்லை,முப்பது வருடம் தாழ்ந்தவனும் இல்லை.

156. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.

157. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

158. முன்கை நீண்டால் முழங்கை நீளும்.

159. முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?

160. முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா?

161. முதல் கோணல் முற்றுங் கோணல்

162. முன்னவனே முன் நின்றால் முடியாத பொருள் உளதோ?

163. ஏருழுகிறவன் இளப்பமானால், எருது மச்சான் முறை கொண்டாடும்.

164. ஏழைபேச்சு அம்பலம் ஏறாது.

165. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.

166. கையூன்றிக் கரணம் போடவேண்டும்.

167. கையாளாத ஆயுதம் துருப்பிடிக்கும்.

168. கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.

169. கையிலே காசு வாயிலே தோசை.

170. புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.

171. பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.

172. புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

173. பூ விற்ற காசு மணக்குமா?

174. புயலுக்குப் பின்னே அமைதி.

175. பூனைக்குக் கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

Proverbs in Tamil Part 8 | பழமொழிகள் பகுதி 8

176. புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்

177.  பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.

178. பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது.

179. தங்கம் தரையிலே தவிடு பானையிலே.

180.  தண்ணீரையும் தாயையும் பழிக்காதே

181. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அணைக்கும்.

182. தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.

183. தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.

184. தடி எடுத்தவன் தண்டல்காரனா ?

185. தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.

186. பெண் என்றால் பேயும் இரங்கும்.

187. பேசாதிருந்தால் பிழையொன்றுமில்லை

188. பேராசை பெருநட்டம்

189. பெருமையும் சிறுமையும் வாயால் வரும்.

190. பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.

200. உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்?

Proverbs in Tamil Part 9 | பழமொழிகள் பகுதி 9

201. ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடேல்.

202. உள்ளது போகாது இல்லது வாராது.

203. ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.

204. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்

205. ஊருடன் ஒட்டி வாழ்

206. செருப்பின் அருமை வெயிலில் தெரியும்.

207. நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

208. சேற்றிலே செந்தாமரை போல.

209. செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.

210. சிறு துளி பெருவெள்ளம்.

211. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டாதே.

212. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

213. பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

214. பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.

215. பழி ஒரு பக்கம், பாவம் ஒரு பக்கம்.

216. பனி பெய்தால் மழை இல்லை, பழம் இருந்தால் பூ இல்லை.

217. பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம்.

218. பாம்புக்குப் பால் வார்த்தாலும் நஞ்சைத்தான் கக்கும்.

219. பனை நிழலும் நிழலோ, பகைவர் உறவும் உறவோ?

220. பனை மரத்தின் கீழே பாலைக் குடித்தாலும் கள் என்று நினைப்பர்.

221. பன்றி பல குட்டி, சிங்கம் ஒரு குட்டி.

222. பாம்பின் கால் பாம்பு அறியும்.

223. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சுமா?

224. மந்திரிக்கும் உண்டு மதிக்கேடு.

225. மனம் போல வாழ்வு.

Proverbs in Tamil

Proverbs in Tamil Part 10 | பழமொழிகள் பகுதி 10

226. மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

227. மன்னன் எப்படியோ, மன்னுயிர் அப்படி.

228. மருந்தும் விருந்தும் மூன்று வேளை.

229. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.

230. மண்னுயிரைத் தன்னுயிர்போல் நினை.

231. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?

232. மனம் தடுமாறினால் மாற்றானுக்கு வலிமை.

233. மழைமுகம் காணாத பயிரும் தாய்முகம் காணாத பிள்ளையும்.

234. மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

235. மவுனம் கலக நாசம்.

236. மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.

237. மண்டையுள்ள வரை சளி போகாது.

238. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்காதே.

239. உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.

240. உழுகிற நாளில் ஊருக்குப் போனால்,அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.

241. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.

242. உயிர் காப்பான் தோழன்

243. உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?

244. உதட்டில் உறவு உள்ளத்தில் பகை.

245. உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா?

246. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

247. பகுத்தறியாமல் துணியாதே, படபடப்பாகச் செய்யாதே.

248. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

249. பசி வந்திடில் பத்தும் பறந்துபோம்.

250. பணம் பத்தும் செய்யும்.

Proverbs in Tamil Part 11 | பழமொழிகள் பகுதி 11

251. பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது.

252. பதறாத காரியம் சிதறாது.

253. பணக்காரன் பின்னும் பத்துப்பேர், பைத்தியக்காரன் பின்னும் பத்துப்பேர்.

254. பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.

255. பஞ்சும் நெருப்பும் ஒன்றாய்க் கிடக்குமோ?

256. பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும்.

257. படிக்கிறது திருவாய் மொழி இடிக்கிறது பெருமாள் கோயில்.

258. பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும்.

259. பச்சை மண்ணும் சுட்டமண்ணும் ஒட்டுமா?

260. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்.

261. பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால்,கொட்டைப் பாக்கு விலை சொல்லுகின்றாய்.

262. பட்டா உன்பேரில் சாகுபடி என்பேரில்.

263. எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும்.

264.  எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்

265.  எலி வளையானாலும் தனி வலை வேண்டும்.

266. எலும்பு கடிக்கிற நாய் இரும்பைக் கடிக்குமா?

267. எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்?

268. எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?

269. எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கொடுத்தான்.

270. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.

271. நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு

272. நெருப்பு என்றால் வாய் வெந்து போகுமா ?

273. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும்.

274. நேற்று உள்ளார் இன்று இல்லை.

275. நைடதம் புலவர்க்கு ஒளடதம்

Proverbs in Tamil Part 12 | பழமொழிகள் பகுதி 12

276. நூல் கற்றவனே மேலானவன்.

277. நெருப்பில்லாமல் புகையாது.

278. நுணலும் தன் வாயால் கெடும்.

279. நொறுங்கத் தின்றால் நூறு வயது.

280. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

281. நடந்தால் நாடெல்லாம் உறவு, படுத்தால் பாயும் பகை.

282.  நல்ல மாட்டிற்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு சொல்.

283. நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாள் செல்லும்.

284. நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும்.

285. நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம்.

286. நல்லார் பொல்லாரை நடத்தையால் அறியலாம்.

287. எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு.

288. எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்.

289. எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.

290. எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு.

291. எதை அடக்காவிட்டாலும் நாக்கை அடக்கவேண்டும்.

292. எத்தனை புடம் போட்டாலும் இரும்பு பசும்பொன் ஆகுமா?

293. தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.

294. தாய் எட்டடி பாய்ந்தால், குட்டி பதினாறடி
பாயும்.

295. துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.

296. தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி.

297. தனக்கு மிஞ்சித் தான் தானமும் தர்மமும்.

298. தனி மரம் தோப்பாகாது.

299. தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

300. தன் கையே தனக்குதவி

Proverbs in Tamil Part 13 | பழமொழிகள் பகுதி 13

301. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

302. தானாடா விட்டாலும் தன் சதையாடும்.

303. தன் வினை தன்னைச் சுடும்.

304. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.

305. தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை,தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

306.  தாயும் பிள்ளையுமானாலும், வாயும் வயிறும் வேறு.

307. தலை இருக்க வால் ஆடலாமா?

308. தருமம் தலைகாக்கும்.

309. தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.

310. தவளை தன் வாயாற் கெடும்.

311. தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.

312. கோள் சொல்பவனைக் கொடுந்தேள் என நினை.

313. கோள் சொல்லும் வாய் காற்றுடன் நெருப்பு.

314. கோத்திரமறிந்து பெண்ணைக்கொடு,பாத்திரமறிந்து பிச்சையிடு.

315. கோழி மிதித்துக் குஞ்சு முடம் ஆகுமா?

316. கோபம் உள்ள இடத்தில் குணம் உண்டு.

317. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

318. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

319. சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

320. சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

321. சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

322. சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.

323. சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

324. ஒரு கை தட்டினால் ஓசை எழும்புமா?

325. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.

Proverbs in Tamil Part 14 | பழமொழிகள் பகுதி 14

326. ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்.

327. ஒழுக்கம் உயர்குலத்தின் நன்று.

328. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

329. ஒருவர் அறிந்தால் இரகசியம், இருவர் அறிந்தால் அம்பலம்

330. ஒரு நாள் கூத்துக்கு மீசையை எடுக்கவா?

331. ஒருவனாய்ப் பிறந்தால் தனிமை, இருவராய்ப் பிறந்தால் பகைமை.

332. ஒரு நன்றி செய்தவரை உள்ள அளவும் நினை.

333. ஓடிப்போனவனுக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, அகப்பட்டவனுக்கு அட்டமத்திலே சனி.

334. கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.

335. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.

336. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.

337. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

338. சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.

339. சாது மிரண்டால் காடு கொள்ளாது.

340. சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

341. சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்

342. சின்ன மீனைப் போட்டுப் பெரிய மீனைப் பிடி.

343. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா?

344.  கட்டினவனுக்கு ஒரு வீடானால் கட்டாதவனுக்கு பல வீடு.

345. கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம்.

346. கொடுக்கிறவனைக் கண்டால் வாங்குகிறவனுக்கு இளக்காரம்.

347. கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சியா?

348. கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.

349. கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.

350. கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.

Proverbs in Tamil Part 15 | பழமொழிகள் பகுதி 15

351. கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.

352. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

353. கரணம் தப்பினால் மரணம்.

354. கெடுவான் கேடு நினைப்பான்

355. கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக்
காற்பணம் சம்பாதிப்பது மேல்.

356. கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு.

357. கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாஞ் சிறப்பு.

358. கனவில் கண்ட பணம் செலவிற்கு உதவுமா?

359. கற்கையில் கல்வி கசப்பு, கற்றபின் அதுவே இனிப்பு.

360. குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

361. கந்தையானாலும் கசக்கிக் கட்டு.

362. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

363. குரு இலார்க்கு வித்தையுமில்லை, முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.

364. குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?

365. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

366. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

367. கூழானாலும் குளித்துக் குடி

368. கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?

369. காரியமாகும் வரையில் கழுதை காலையும் பிடி.

370. காற்றில்லாமல் தூசி பறக்குமா?

371. காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.

372. காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.

373. குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.

374. குணம் பெரிதேயன்றிக் குலம் பெரியதன்று.

375. குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.

பழமொழிகள் தமிழ் விளக்கம்

1. புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.

உண்மை பொருள்: புண்பட்ட மனதை புகை விட்டு ஆற்று.

விளக்கம்:

மனம் புண்பட்டு இருக்கும்போது தமக்கு பிடித்த வேறு ஒரு செயலில் மனதைப் புகை விட்டு (செலுத்தி) ஆற்றிக்கொள்ள வேண்டும் என்பதே சரி.

2. தன் கையே தனக்கு உதவி

விளக்கம்:

ஒரு பணியை செய்வதற்கு பிறரை நம்பாமல் தன்னை மட்டுமே நம்புவது சிறப்பு என்று கூறுகிறது.

3. இளங்கன்று பயம் அறியாது

விளக்கம்:

இளமைப் பருவத்தினர், தனக்குப் பின்னால் நேரக்கூடிய துன்பத்தினைப் பற்றிய பயம்
அறியாமல் தற்போது உடனே ஒரு முடிவினை எடுத்து விடுவர். அது பேராபத்தாய் கூட முடிந்து விடும்.

4. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

விளக்கம்:

இளமையில் கல்வி கற்காதவன் முதுமையில் கல்வி கற்பது என்பது முடியாத காரியம் ஆகும். அதுபோல இளமையில் முயற்சி செய்யாதவன் முதுமையில் முயற்சி செய்ய முடியாது என்பதை இப்பழமொழி உணர்த்தும் பொருளாகும்.

5. மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே

விளக்கம்:

ஆற்றின் நடுவே உள்ள மண் திட்டுகளை நம்பி, ஆற்றுக்குள் இறங்கக்கூடாது. அவை, நீர் ஊறிய மண்மேடுகள் என்பதால் காலை வைத்தவுடன் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். இதையே மேற்கண்ட பழமொழி எடுத்துக்காட்டுகிறது.

குறிப்பு:

மண்குதிர் ➨ மண்மேடு/ மண்திட்டு

6.  குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்பதுபோல குமரன் தன் தந்தை சேமித்து வைத்த பெருஞ்செல்வத்தை, உழைக்காமலே செலவழித்து வறியன் ஆனான்.

7. யானைக்கும் அடிசறுக்கும்?

விளக்கம்:

தன்னம்பிக்கையோடு வாழ்ந்த என் தந்தை தனியார் சீட்டுக் குழுமத்தின் பகட்டு விளம்பரத்தால் பணம் கட்டி ஏமாந்தது “யானைக்கும் அடிசறுக்கும்” போல ஆயிற்று.

8. தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்?

விளக்கம்:

வாழ்க்கையில் நாம் பிறருக்கு நன்மை செய்து வந்தோம் என்றால் நமக்கும் நன்மையே நடக்கும்.

வாழ்க்கையில் நாம் பிறருக்கு தீமை செய்து வந்தோம் என்றால் நமக்கும் தீமையே நடக்கும்.

9. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை?

விளக்கம்:

நட்பு எனக்கொண்ட பிறகு குற்றம் இருப்பின் அதைப் பொறுக்கும் குணம் வேண்டும். அதை விடுத்து குற்றத்தைக் கடிந்துரைத்தால் (சுற்றம்) நட்பு தொடராது.

10. எறும்பு ஊரக் கல்லும் தேயும்?

விளக்கம்:

வாழ்க்கையில் சின்னச் சின்ன தவறுகளை இழைத்துக் கொண்டே வருவதால் தன் புகழுக்குத் களங்கம் வராது என்று நினைக்கிறோம். மாறாக, “எறும்பு ஊரக் கல்லும் தேயும்” என்பது போல நம் புகழ் அழிவதற்கு நாம் செய்த சிறு தவறுகளே காரணமாகிவிடும்.

11. ஊழி பெயரினும் தாம் பெயரார்?

விளக்கம்:

நற்பண்புகளைக் கைவரப் பெற்றவர்கள் வாழ்வில் உயர்ந்து தாழ்வு வந்தபோதும் தன்னிலையில் மாறமாட்டார்கள்.

12.  “துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது” என்ற இராமனின் கூற்று பழமொழிகளில் குறிப்பிடுவது?

விளக்கம்:

நிழலின் அருமை வெயிலில் தெரியும். அதுபோல குகனின் வருத்தத்தை உணர்ந்த இராமன் கூறியது, துன்பம் என்று ஒன்று இருந்தால்தான் இன்பம் என்பது புலப்படும்.

13.  ஊருடன் ஒத்து வாழ்?

விளக்கம்:

நாம் வாழும் ஊர் மக்களுடன் இணைந்து வாழ வேண்டும்.

14.  பதறாத காரியம் சிதறாது?

விளக்கம்:

பதறாத காரியம் சிதறாது என்பதற்கேற்ப நிதானமாகச் செயல்பட்டால் எதிலும் வெற்றி கிட்டும்.

15.  ஒரு கை தட்டினால் ஓசை வராது?

விளக்கம்:

ஒரு கை தட்டினால் ஓசை வராது என்பதைப்போல் நம்மிடையே ஒற்றுமை இல்லையேல் உயர்வில்லை.

16. நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல.

விளக்கம்:

நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்குப் பாய்வது போல படிக்கும் நல்லார் சொன்ன அறிவுரை தீயவருக்கும் போய் சேர்ந்தது.

17.  தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.

விளக்கம்:

தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் போலப் பிறர் கூறும் அறிவுரை கடினமானாலும் அது நம்மை நல்வழிப்படுத்தும்.

18.  மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும்.

விளக்கம்:

மெல்லப் பாயும் தண்ணீர் கல்லையும் கரைக்கும் போல கடினமான செயலையும் விடாமுயற்சியுடன் செய்தால் வெற்றி பெற முடியும்.

19.  கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது

விளக்கம்:

கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டு போகாது போல பிறருக்கு நாம் சொல்லிக் கொடுப்பதால் நம்முடைய அறிவானது குறைபடாது.

Proverbs in Tamil and English | பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

1. இந்தத் துணிகள் துவைக்கும் போது சுருங்கி விடுகின்றன.

The Cloth Shrinks in wash.

2. பெற்றோர்கள் கடினமாக உழைத்து சேர்த்த பணத்தை புத்தி இல்லாத மாணவர்கள் வீணடிக்கின்றனர்.

Many foolish students waste the hard earned money of their parents.

3. இந்தக் குழாயிலிருந்து தண்ணீர் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது.

The tap is running to no purpose.

4. பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும்.

Money makes the Mare go.

5. கலிங்கப் போருக்குப் பின் அசோகரின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

Ashoka turned over a new Leaf after the battle of Kalinga.

6. அவன் வீசிய வலையில் இவன் வீழ்ந்தான்.

He fell into his trap.

7. வரவுக்கு மேல் செலவு செய்யாதே.

Do not spend beyond your means.

8. குரைக்கும் நாய் கடிக்காது. இடி இடித்து மழை பெய்யாது.

Barking dogs seldom bite. Thundering clouds seldom rain.

9. உண்மையான குற்றவாளி சாதாரணமாகத் தப்பிவிட்டான்.

The real culprit got off scot free.

10. சட்டத்தினை கையில் எடுத்துக் கொண்டால், நீ கைது செய்யப்படுவாய்.

If you take law into your hands, you will be brought to book.

11. வல்லான் வகுத்ததே வாய்க்கால்

Might is right

12.  மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு

Every flower is a soul blossoming in nature

13. தோல்வியே வெற்றிக்கு அடிப்படை (அ) ஒன்றன் மறைவில் இருந்தே புதியன தோன்றும்

Sunset is still my favourite colour, and rainbow is second

14.  நன்றாய் தொடங்கும் செயல் நன்றாகவே முடியம் (அ) சிறந்த தொடக்கமே வெற்றிக்கு அடிப்படை

An early morning walk is a blessing for the whole day

15.  இலட்சியமுள்ள வாழ்வே சிறந்த வாழ்வாகும். வெறும் வாழ்வு வீணாகும்

Just living is not enough… One must have sunshine, freedom, and a little flower

16.  ஒரு நாட்டின் பண்பாடானது மக்களின் இதயங்களிலும், ஆன்மாவிலும் தங்கியுள்ளது ➨ மகாத்மா காந்தி

A nation’s culture resides in the hearts and in the soul of its people ➨ Mahatma Gandhi

17.  மக்களின் கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் ➨ ஜவஹர்லால் நேரு

The art of people is a true mirror to their minds ➨ Jawaharlal Nehru

18.  அன்புக் குறைவும்,தொண்டுப் பற்றாக்குறையும் தான் இன்றைய மிகப்பெரிய பிரச்சனை ➨ அன்னை தெராசா

The biggest problem is the lack of love and charity ➨ Mother Teresa

19.  உங்கள் கனவுகள் நனவாகும் வரை கனவு காணுங்கள் ➨ ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

You have to dream before your dreams can come true ➨ A.P.J. Abdul Kalam

20. வெற்றியாளர்கள் வேறுபட்ட செயல்களைச் செய்வதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள் ➨ ஷிவ் கேரா

Winners don’t do different things; they do things differently ➨ Shiv Khera

இதையும் படிக்கலாமே,
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments