Homeஆன்மீகம்மகா சிவராத்திரி (Maha shivaratri in Tamil 2023) சிறப்புகள் மற்றும் சிவராத்திரி விரதம் இருப்பது...

மகா சிவராத்திரி (Maha shivaratri in Tamil 2023) சிறப்புகள் மற்றும் சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?

THATSTAMIL-GOOGLE-NEWS

மகா சிவராத்திரி (Maha shivaratri in Tamil 2023) சிறப்புகள் மற்றும் சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி ?

மகா சிவராத்திரி நாளில் அன்று இரவு முழுவதும் கண்விழிக்க முடியாதவர்கள் இந்த சிவ மந்திரத்தை உச்சரித்தாலே போதும். இதன் மூலம் சிவபெருமானின் அருளை நீங்கள் முழுமையாக பெற்றுவிடலாம்.

சிவ பக்தர்களினால் கொண்டாடப்படும் ஒரு நாள் தான் இந்த சிவராத்திரி. அதாவது சிவராத்திரி என்பது “சிவனுக்கு மிகவும் உகந்த இரவு” என்பது பொருள். இந்த சிவராத்திரியில் ஐந்து வகை உள்ளது.

1. மகா சிவராத்திரி
2. யோக சிவராத்திரி
3. நித்திய சிவராத்திரி
4. பட்ச சிவராத்திரி
5. மாத சிவராத்திரி

குறிப்பு:

மாத சிவராத்திரி

இந்த மாத சிவராத்திரி தான் மாதந்தோறும் “தேய்பிறை சதுர்தசி இரவு நாளில்” கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரி நாளில் சிவ பக்தர்கள் விரதம் இருந்தும் சிவாலயம் சென்றும் இரவு நேரத்தில் கண்விழித்தும் சிவபெருமானை வழிபடுவார்கள்.

இந்த 2023 வருடத்தில் வரும் 12 மாத சிவராத்திரிகளை பற்றி இந்தப் பதிவின் இறுதி பகுதியில் பார்ப்போம் நண்பர்களே.

Maha Shivaratri 2023 Tamil Date | மகா சிவராத்திரி 2023 தேதி

இந்த 2023 வருடத்தில் வரும் மகா சிவராத்திரி தேதி ➨ 18-02-2023 (சனிக்கிழமை)

மகா சிவராத்திரி நாளானது மற்ற நாட்களை விட பக்தர்களுக்கு இரட்டிப்பு பலனை பெற்றுத் தரும்.

 

இந்த 2023 வருடத்தில் வரும் மகா சிவராத்திரி ஆனது சனிக்கிழமை அன்று வருகிறது. அதுவும் அன்றைய தினத்தில் சனிப்பிரதோஷமும் வருகிறது. இது மிகவும் சிறப்பான நாளாகும். இந்த சிவராத்திரி தினத்தை யாரும் தவற விடாதீர்கள் நண்பர்களே.. இந்த நாளில் சிவ வழிபாடு செய்வது நமக்கெல்லாம் கிடைத்த ஒரு மிகப்பெரிய பாக்கியம்.

இந்தப் பதிவில் மகா சிவராத்திரி அன்று எப்படி முறையாக விரதம் இருப்பது மற்றும் எப்படி விரதத்தை தொடங்கி, எப்படி விரதத்தை முடிப்பது மற்றும் சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் சிவபெருமானின் ஆசிர்வாதத்தை முழுமையாக எப்படி பெறுவது மற்றும் எந்த சிவ மந்திரத்தை உச்சரிப்பது என இது போன்ற பல தகவல்களை இங்கே பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே…

மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? | Maha shivaratri in Tamil 2023

மகா சிவராத்திரி (Maha Shivratri 2023) சிறப்புகள் மற்றும் சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி

 

மகா சிவராத்திரி விரதம்

பிப்ரவரி 18 ஆம் தேதி அதிகாலையிலேயே உங்களது விரதத்தை தொடங்க வேண்டும்.

பிப்ரவரி 18 ஆம் தேதி அதிகாலையிலேயே எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழித்து குளித்து விட வேண்டும். பின்பு பூஜை அறையில் சிவபெருமானின் திருவுருவப் படம் அல்லது சிவ லிங்கம் இருந்தால் அதன் அருகில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும்.

உங்கள் வீட்டில் சிவ லிங்கம் இருந்தால் அதற்கு பால் அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பு.

உங்களுடைய வாழ்க்கை தேன் போல இனிமையாக மாற சிவபெருமானுக்கு சிவராத்திரி அன்று தேன் அபிஷேகம் செய்வது சிறப்பு.

சிவபெருமானுக்கு வில்வ இலைகளைக் கொண்டு அலங்காரம் செய்து “ஓம் நம சிவாய” என ஐந்து எழுத்து மந்திரத்தை சொல்லி உங்களது விரதத்தை தொடங்குங்கள்.

maha shivaratri story in tamil

அவரவர் உடல் நலத்திற்கு தகுந்தார் போல் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம் அல்லது பழம் சாப்பிட்ட பின்பு விரதம் இருக்கலாம் அல்லது ஒரு வேளை உணவு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உங்களது உடலை வருத்திக் கொண்டுதான் நீங்கள் விரதம் இருக்க வேண்டும் என்பதை சிவபெருமான் நினைக்க மாட்டார். முழு பக்தியோடு மனம் தூய்மையோடு இருந்தால் போதும் உங்களது சிவ வழிபாடு வெற்றி அடையும்.

நீங்கள் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்தாலும் கட்டாயம் தண்ணீர் மட்டுமாவது அருந்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.

மகா சிவராத்திரி விரதம் தொடங்கும் நாள் ➨ பிப்ரவரி 18ஆம் தேதி காலையில் விரதத்தை தொடங்க வேண்டும்.

பிப்ரவரி 18ஆம் தேதி இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டும்.

மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் பிப்ரவரி 19ஆம் தேதி காலை தான் உணவு சாப்பிட்டு விட்டு உங்களுடைய விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும். பிப்ரவரி 19ஆம் தேதி காலை தூங்கக்கூடாது.

பிப்ரவரி 19ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் சிவபெருமானை தரிசனம் செய்துவிட்டு விரதத்தை நல்லபடியாக முடித்ததற்கு சிவபெருமானிடம் நன்றி கூறிவிட்டு, அதன் பின்பு தான் தூங்க செல்ல வேண்டும். இதுதான் முழுமையான மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறையாகும்.

உங்களது வீட்டிற்கு அருகில் சிவன் ஆலயங்கள் ஏதேனும் இருந்தால் அங்கு சென்று சிவ பூஜையில் கலந்து கொள்ளுங்கள். மகா சிவராத்திரி தினத்தில் நான்கு கால பூஜையிலும் கலந்துகொண்டு சிவபெருமானை தரிசனம் செய்வது நமக்கு கோடி புண்ணியத்தை பெற்றுத் தரும்.

மகா சிவராத்திரி அன்று கண் விழிக்க முடியாதவர்கள் என்ன செய்வது ?

அனைவரது உடல் நிலையும் ஒரே மாதிரியாக இருக்காது. சிலருக்கு விரதம் இருக்க உடல் நலம் ஒத்துழைக்கும். சிலருக்கு உடல் நலம் ஒத்துழைக்காது. அப்படிப்பட்டவர்கள் என்ன செய்வது வாருங்கள் பார்ப்போம்…

பிப்ரவரி 18ஆம் தேதி காலையில் ஒரு குறிப்பிட்ட மணி நேரத்தை சிவபெருமானுக்காக ஒதுக்கி ஒரு இடத்தில் அமர்ந்து “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை உச்சரியுங்கள். இந்த மந்திரத்தை நீங்கள் கணக்கு வைத்து உச்சரிக்கக் கூடாது. உங்களால் எவ்வளவு நேரம் இந்த “ஓம் நம சிவாய” என்கிற மந்திரத்தை உச்சரிக்க முடியுமோ அவ்வளவு முறை உச்சரியுங்கள். இதை மனத்தூய்மையோடு செய்து வந்தால் போதும் சிவராத்திரி அன்று விரதம் இருந்த முழு பலனையும் நீங்கள் அடைந்து விடுவீர்கள்.

mahashivratri quotes in tamil

மகா சிவராத்திரி பூஜை நேரம்

சிவராத்திரியில் மூன்றாம் கால பூஜையில் சிவபெருமானை தரிசிப்பது மிகச் சிறப்பு. இந்த மூன்றாவது கால பூஜை ஆனது பிப்ரவரி 18ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் சரியாக 12 மணிக்கு சிவ ஆலயங்களில் நடைபெறும். இதில் கலந்துகொண்டு சிவபெருமானை வில்வ இலையை கொண்டு வழிபட்டால் மிக அற்புதமான பலன்களை நீங்கள் பெறலாம். சிவபெருமானிடம் நீங்கள் வேண்டிய வரத்தை இந்த நேரத்தில் கேட்டால் அது உடனடியாக நிறைவேறும் என்பது நம்பிக்கை. சிவபெருமானின் மனம் குளிர்ந்து வரங்களை அளிக்கக்கூடிய மிகச் சிறப்பான நேரம் ஆகும். காரணம் என்னவென்றால் மூன்றாம் கால பூஜையில் தான் பார்வதி தேவி சிவபெருமானை வழிபட்டதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி வழிபாட்டின் நன்மைகள்

  • ஆரோக்கியமான வாழ்க்கை அமையும்.
  • செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.
  • மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
  • நவக்கிரக தோஷத்தில் இருந்து விடுதலை அடையலாம்.
சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய மூன்று பொருட்கள்
1. கருங்காலி மாலை

mahashivratri wishes in tamil

கருங்காலி மாலையை வாங்கி நாம் அணிவதால் நமது குலதெய்வத்தின் முழு அருளையும் பெறலாம். இதன் மூலம் குடும்பத்திற்கு பண வரவு கிடைத்து கடன் தொல்லை நீங்கும். இது மட்டுமல்லாமல் கருங்காலி மாலையை நாம் அணிவதால் நம்முடைய மன அழுத்தம் நீங்கும்.

கருங்காலி மாலையை வாங்கியவுடன் நீங்கள் அதை சிவன் கோவிலுக்கு எடுத்துச் சென்று ஒரு அர்ச்சனை செய்து விட்டு அதன் பிறகு அணிந்து கொண்டு சிவனுடைய மந்திரத்தை உச்சரித்தால் சிவபெருமானின் முழு அருளையும் பெறலாம்.

2. படிக மாலை

Maha shivaratri valipadu in Tamil

சிவபெருமானின் ஆற்றல் நிறைந்த பொருட்களில் இந்த படிக மாலையும் ஒன்றாகும். மகா சிவராத்திரி தினத்தில் புனித நீராடிவிட்டு படிக மாலையை அணிந்து கொண்டு சிவபெருமானின் மந்திரத்தை கூறினால் சிவபெருமானின் முழு அருளையும் பெறலாம்.

3. ருத்ராட்ச மாலை

Maha Shivaratri in Tamil

மகா சிவராத்திரி தினத்தில் ருத்ராட்ச மாலையை வாங்கி, சிவபெருமானின் பாதத்தில் வைத்து ஒரு அர்ச்சனை செய்துவிட்டு “ஓம் நம சிவாய” என்ற மந்திரத்தை உச்சரித்து அணிந்து கொண்டால் சிவபெருமானின் முழு அருளையும் பெறலாம்.

சிவராத்திரி தினத்தில் இந்த மூன்று பொருட்களை வாங்கினால் மனதில் நினைத்த காரியம் கைகூடும். மனம் மகிழ்ச்சி அடையும். குடும்பத்தில் செல்வம் செழிக்கும். உங்களால் முடிந்தால் இந்த மூன்று பொருட்களையும் வாங்கலாம். இந்த மூன்றில் ஏதேனும் ஒரு பொருளை இந்த தினத்தில் வாங்கினால் கூட போதுமானது. அது உங்களுக்கு நன்மை பயக்கும்.

Matha Shivaratri Date 2023 | மாத சிவராத்திரி பட்டியல் மாதந்தோறும் 2023
நாள்  கிழமை  சிவராத்திரி வகை
20.01.2023 வெள்ளிக்கிழமை மாத சிவராத்திரி
18.02.2023 சனிக்கிழமை ஸ்ரீ மகா சிவராத்திரி
20.03.2023 திங்கட்கிழமை மாத சிவராத்திரி
18.04.2023 செவ்வாய்க்கிழமை மாத சிவராத்திரி
17.05.2023 புதன்கிழமை  மாத சிவராத்திரி
16.06.2023 வெள்ளிக்கிழமை மாத சிவராத்திரி
15.07.2023 சனிக்கிழமை  மாத சிவராத்திரி
14.08.2023 திங்கட்கிழமை   மாத சிவராத்திரி
13.09.2023 புதன்கிழமை மாத சிவராத்திரி
12.10.2023 வியாழக்கிழமை மாத சிவராத்திரி
11.11.2023 சனிக்கிழமை மாத சிவராத்திரி
11.12.2023 திங்கட்கிழமை  மாத சிவராத்திரி

 

இதையும் படிக்கலாமே,

tamil horoscope

9 நவகிரகங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? | ஜோதிடத்தில் நவகிரகங்களின் பங்கு என்ன?
Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்
சனியின் பிடியில் சிக்கித் தவிப்பவரா நீங்கள் இதோ உங்களுக்கான வாழ்வியல் பரிகாரங்கள்
THATSTAMIL
THATSTAMILhttps://thatstamil.in
“ உன்னுடைய முயற்சியே   உன்னுடைய வெற்றியின் முதல் படி” “ உன்னுடைய தோல்விகளே உன்னை சிறந்த மனிதனாக செதுக்கும் ஆயுதம்”                                                     - SAKTHIVEL MURUGANANTHAM
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments