நரம்புகள் வலிமை பெற மற்றும் நரம்புத் தளர்ச்சி நீங்க வைட்டமின்கள் நிறைந்த இந்த உணவுப் பொருள்களை கட்டாயம் எடுத்துக்கோங்க..
மனித உடலில் இருக்கக்கூடிய உறுப்புகளில் நரம்பு மண்டலம் மிக முக்கியமான பகுதியாகும். நமது உடலில் மூளையும், தண்டுவடமும் மைய நரம்பு மண்டலமாக (Central nervous system) அமைகின்றன. இந்தப் பகுதிகளில் இருந்து பிரிந்து செல்லும் நரம்புகள் அனைத்தும் சேர்ந்து நரம்பு மண்டலத்தை உருவாக்குகின்றன.
நமது உடலில் ஏற்படும் ஒவ்வொரு அசைவிற்கும் அல்லது செயல்பாட்டிற்கும் முக்கிய பங்கு வகிப்பது இந்த நரம்பு மண்டலமாகும்.
நரம்பு மண்டலம் ஆனது நினைவகம், காட்சி, உணர்வுகள், கேள்வி, சுவை, மணம் ஆகியவற்றுடன் பிரதானமாகச் சம்பந்தப்பட்டிருக்கின்றன.
வலுவான நரம்புகளே நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். இதுவே உடலுக்கு பலம் தரும்.
நாம் எந்த ஒரு செயலை செய்யும்போதும் ஏற்படக்கூடிய நடுக்கம், சோர்வு, களைப்பு, தலைவலி, நிலை தடுமாற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைவது வலிமையற்ற நரம்புகளே ஆகும்.
இன்றைய இளைய தலைமுறையினர் அதிகமாக சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்றுதான் இந்த நரம்புத் தளர்ச்சி பிரச்சினையாகும்.
நரம்புகள் வலுவாக இருந்தால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற நோய்களின் தாக்கம் கணிசமாக குறையும்.
நரம்புத் தளர்ச்சியை நீக்கவும், உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தவும் நாம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருள்களை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம் வாருங்கள் நண்பர்களே..
உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்த நாம் சாப்பிட வேண்டிய உணவுகள்
- மணத்தக்காளி கீரை
- பொன்னாங்கண்ணிக் கீரை
- ஜாதிக்காய்
- லவங்கப்பட்டை
- பூசணி விதைகள்
- வால்நட்
- சக்கரவள்ளி கிழங்கு
நரம்புகளின் வலிமைக்கு உதவும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகள்
வைட்டமின் பி12
வைட்டமின் பி12 நிறைந்த உணவு பொருட்கள் முட்டை, இறைச்சி, காளான் மற்றும் கீரை வகைகள்.
வைட்டமின் B9 (ஃபோலிக் அமிலம்)
வைட்டமின் B9 நிறைந்த உணவு பொருட்கள் பச்சை இலைக் காய்கறிகள், சோயாபீன்ஸ் மற்றும் கருப்பு பீன்ஸ்
வைட்டமின் ஈ
வைட்டமின் ஈ நிறைந்த உணவு பொருட்கள் காய்கறிகள், எண்ணெய், பாதாம், அக்ரூட் பருப்புகள்.
வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B1
வைட்டமின் B6 மற்றும் வைட்டமின் B1 நிறைந்த உணவு பொருட்கள் வாழைப்பழம், நிலக்கடலை, பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் ஓட்ஸ்.