Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள்

Today Rasi Palan in Tamil | இன்றைய ராசி பலன்கள் | indraya rasi palan | rasi palan today | daily rasi palan | tamil rasi palan

Today Rasi Palan in Tamil | Indraya Rasi palan

இன்றைய நாள் நமக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள பொதுவாக நாம் தினசரி இராசி பலன்களை பார்ப்போம். அவ்வாறு இராசி பலன்களை பார்த்து அதற்கு ஏற்றாற்போல் நாம் முன் எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். அதாவது ஒவ்வொரு கிரக நிலைக்கும் ஏற்ப இராசி பலன்கள் சந்திரனை மையமாக வைத்து கணிக்கப்படுவதால், நாம் இன்று எப்படி நடந்து கொள்ள வேண்டும், தங்களுக்கான ராசி பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொண்டு அதற்க்கு ஏற்ப  நடந்தால்தான் அன்றைய தினம் சிறந்த நாளாக அமையும். அந்த வகையில் இங்கு மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை இன்றைய ராசி பலன் என்ற தொடரில் வழங்கி வருகிறோம்.

இன்றைய ராசி பலன்கள்

Today Rasi Palan

Rasi Palan is the zodiac prediction for 12 zodiac signs. The prediction will change and happen everyday. So it is called as Daily rasi plan in Tamil or Indraya rasi palan in Tamil or enraya rasipalan or indriya rasipalan or inraya Rasi Palan indraiya Rasi palangal or Josiyam today or today Rasi palangal in Tamil. We calculate Rasi Palan for all 12 Rasi. Here we have Mesha Rasi Palan today, Rishaba Rasi Palan today, Mithuna Rasi Palan today, Kadaga Rasi Palan today, Simma Rasi Palan today, Kanni Rasi Palan today, Thulam Rasi Palan today, Virichiga Rasi Palan today, Dhanusu Rasi Palan today, Magara Rasi Palan today, kumba Rasi palan today and Meena rasi palan today in Tamil

today rasi palan,rasi palan,indraya rasi palan,இன்றைய ராசிபலன்,today rasi palan in tamil,tomorrow rasi palan,kanni rasi palan today,thulam rasi palan today,mesha rasi palan today,kadagam rasi palan today, magaram rasi palan today,mithuna rasi palan today,viruchigam rasi palan today, kumbam rasi palan today,meena rasi palan today,rishaba rasi palan today,simmam rasi palan,dhanusu rasi palan today,thatstamil rasi palan

today rasi palan in tamil

Today Rasi Palan | இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் என்பது இந்த நாளுக்குரிய ராசி பலனை குறிப்பதாகும். மேஷ ராசி, ரிஷப ராசி, மிதுன ராசி, கடக ராசி, சிம்ம ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சிக ராசி, தனுசு ராசி, மகர ராசி, கும்ப ராசி, மீன ராசி என அனைத்து ராசிகளுக்கும் துல்லியமாக கணிக்கப்பட்ட தினசரி இராசி பலன்களை நமது தட்ஸ்தமிழ் வலைத்தளத்தில் தொகுத்து கொடுத்து வருகிறோம்.படித்து பயன் பெறுங்கள் வாசகர்களே !

12 Rasi in Tamil and Basic Characteristics

ராசி சக்கரத்தில் 12 ராசி வீடுகள் மற்றும் 27 நட்சத்திரங்கள் மற்றும் 9 கிரகங்களும் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களைக் கொண்டுள்ளன. மொத்தம் 108 நட்சத்திர பாதங்கள் ராசி சக்கரத்தில் உள்ளன. வாருங்கள் நண்பர்களே, ஒவ்வொரு ராசிக்கும் உள்ள தனித்தன்மையான நற்பண்புகளைப் பற்றிய தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்…

12 ராசிகள் மற்றும் அதன் தனித்தன்மையான நற்பண்புகள்

12 Rasi in Tamil and Basic Characteristics

மேஷம் (Aries)

இவர்கள் வைராக்கியம் அல்லது பிடிவாதம்  குணம் கொண்டவர்கள். தேச நலன் பற்றிய சிந்தனை இருக்கும். எல்லா காரியத்தையும் எடுத்து நிறைவேற்ற வேண்டும் என்ற பண்பு இருக்கும். இவர்கள் துணிச்சல் மிகுந்தவர்கள். இவர்கள் பெரியவர்களிடம் மட்டுமே கீழ்படிவார்கள். எதையும் வெளிப்படையாக பேசும் குணம் இருக்கும். எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் இருக்கும்.

ரிஷபம் (Taurus)

இவர்கள் பொதுவாக அகிம்சை வாதிகள். இவர்களிடம் இரக்க குணம் இருக்கும். இவர்கள் எந்த ஒரு செயலுக்கும் அதற்குரிய காரணத்தை அறிய முற்படுவார்கள். இவர்கள் அனைவரிடமும் அக்கறையுடன் நடந்து கொள்வார்கள். பெருந்தன்மையாக இருப்பது இவர்களது இயல்பு குணம். இவர்கள் பண்புடைமை வாதிகள் இவர்கள் சகிப்புத்தன்மை மிக்கவர்கள்.

மிதுனம் (Gemini)

எழுதுதல் என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. இவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுக்கக் கூடியவர்கள். (அதாவது, இடத்திற்கு தகுந்தார் போல் செயல்படுபவர்கள்) இவர்களிடம் நகைச்சுவை கலந்த பேச்சு இருக்கும். இவர்கள் கலை மற்றும் தொழில்நுட்ப பிரிவில் வல்லவர்கள். இவர்களுக்கு எதையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் இருக்கும். இவர்கள் காரண காரியம் அறிந்து செயல்பட கூடியவர்கள். இவர்களது இயல்பு தந்திரமாக பேசுதல் எதையும் புரிந்து கொள்ளும் திறன் இருக்கும்.

கடகம் (Cancer)

தொண்டு செய்தல் என்பது இவர்களுக்கு பிடித்த ஒன்று. அனைவருக்கும் நன்மை செய்ய விரும்புதல் என்பது இவர்களது இயல்பு. மற்றவர்களுக்கு உதவுகின்ற மனப்பான்மை இருக்கும். இவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கும். மன்னிக்கும் குணம் பெற்றவர்கள்.

சிம்மம் (Leo)

அனைத்து துறையிலும் தலைமை வகிக்க கூடியவர்கள். அனைத்து செயல்களிலும் இவர்களது ஒத்துழைப்பு மற்றவர்களுக்கு நன்றாக இருக்கும். சுதந்திரமாக செயல்பட கூடியவர்கள். எதையும் ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர்கள். ஒற்றுமை குணம் உடையவர்கள். தயாள குணம் கொண்டவர்கள். எதையும் பகிர்ந்து கொள்ளுதல் என்ற பண்பு இருக்கும். (இன்ப,துன்பங்களை நல்லவை,கெட்டவைகளை…)

கன்னி (Virgo)

தூய்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். அனைவரிடமும் பழகுதல் என்பது இவர்களது இயல்பு. சுதந்திரமான நிலை உடையவர்கள். தனிநபர் உரிமை பற்றி பேசுபவர்கள். தூய்மையான எண்ணம் உடையவர்கள். எதிலும் உண்மையாக நடந்து கொள்ளக் கூடியவர்கள். நட்பு பாராட்டக் கூடியவர்கள் நல்லொழுக்கம் உடையவர்கள்.

துலாம் (Libra)

சமநிலை காத்தல் என்பது இவர்களது இயல்பு. பாரபட்சமின்மையின்றி நடக்கக் கூடியவர்கள். எதிலும் நியாயம் பேசுதல் இவர்களது இயல்பு. நடுநிலையாக நடக்கக் கூடியவர்கள். இவர்கள் அணிந்திருக்கும் துணியில் சிறு கறை இருந்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.

விருச்சிகம் (Scorpio)

உதவும் மனப்பான்மை உடையவர்கள். விழிப்புணர்வுடன் இருத்தல் இவர்களது பண்பு (எச்சரிக்கையாக இருத்தல்) எதிலும் சீரிய யோசனை உடையவர்கள். பகுத்தறிதல் இவர்களது இயல்பு. இவர்கள் அதிகம் மற்றவர்களை கண்காணிப்பார்கள். அறிவுநுட்பம் உடையவர்கள். கோபம் வந்துவிட்டால் தேள் போன்று வார்த்தைகளை கொட்டி விடுவார்கள்.

தனுசு (Sagittarius)

லட்சியம் உடையவர்கள். உழைப்பை நேசிப்பது இவர்களது இயல்பு. திடமான நோக்கம்/குறிக்கோளுடன் இருப்பார்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பவர்கள். நம்பிக்கைக்குரியவர்கள். ஊக்கத்துடன் முயற்சியும் வேண்டும் என்று நினைப்பவர்கள்.

மகரம் (Capricorn)

அமைதி குணம் உடையவர்கள். கண்ணியம்,கட்டுப்பாடு உடையவர்கள். சிறந்த வேலைக்காரர். எந்த வேலையை கொடுத்தாலும் சிறப்பாக முடிப்பார்கள். எதிலும் பொறுமை குணம் உடையவர்கள்.

கும்பம் (Aquarius)

சுய அதிகாரம் உடையவர்கள். மதிப்பு மற்றும் மரியாதையுடன் நடக்கக் கூடியவர்கள். இவர்களை மற்றவர்கள் கட்டுப்படுத்தினால் இவர்களுக்கு பிடிக்காது. ரகசியம் காப்பாளர்கள். பொது கட்டுப்பாடு உடையவர்கள். சுயமரியாதை குணமடையவர்கள்.

மீனம் (Pisces)

நற்குணம் உடையவர்கள். நடப்பதை முன்கூட்டியே அறிபவர்கள் ஞானியர்கள் நேர்மறை சிந்தனை உடையவர்கள். மீன் போன்ற விழிகளை பெற்றிருப்பவர்கள். முன்யோசனை உடையவர்கள். விருந்தோம்பல் பண்பு உடையவர்கள். மேலும் 12 ராசிகள் பற்றிய விரிவான அடிப்படை குறிப்புகளை தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Today Rasi Palan | ஜோதிடத்தில் 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்கள்

12 Zodiac Signs and 27 Stars in Astrology

ராசிகள் – Zodiac Signs நட்சத்திரங்கள் – Stars
மேஷம் – Aries அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம் முடிய – Ashwini, Bharani, upto 1st phase of Krithikai
ரிஷபம் – Taurus கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2ஆம் பாதம் வரை – From Krithikai 2nd,3rd,4th phase, Rohini and upto Mirugaseerisham 1st,2nd phase.
மிதுனம் – Gemini மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதம் முடிய – From Mirugaseerisham 3rd,4th phase, Ardra, upto Punarpoosam 1st,2nd,3rd phase
கடகம் – Cancer புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம் – Punarpoosam 4th Phase, Poosam, Ayilyam
சிம்மம் – Leo மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம்
முடிய – Makam, Pooram, and upto Uthiram 1st phase
கன்னி – Virgo

உத்திரம் 2,3,4ஆம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம் – From Uthiram 2nd,3rd,4th phase, Astham and upto Chithirai 1st, 2nd phase

துலாம் – Libra சித்திரை 3,4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2,3ஆம் பாதம் முடிய – From
Chithirai 3rd,4th phase, Swathi and upto Vishakam 1st, 2nd, 3rd phase
விருச்சிகம் – Scorpio விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை முடிய – From Vishakam 4th phase, Anusham, Kettai
தனுசு – Sagittarius மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் வரை – Moolam, Pooradam and upto Uthradam 1st Phase
மகரம் – Capricorn உத்திராடம் 2,3,4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம்
முடிய – From Uthradam 2nd, 3rd, 4th phase, Thiruvonam (Shravan) and upto Avittam 1st, 2nd phase
கும்பம் – Aquarius அவிட்டம் 3,4ஆம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம் பாதம் முடிய – From Avittam 3rd,4th phase, Sathayam and upto
Poorattathi 1st, 2nd, 3rd phase
மீனம் – Pisces பூரட்டாதி 4ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி முடிய – From Poorattathi 4th phase, Uthirattathi and Revathi
27 நட்சத்திரங்கள் அதிபதிகள் மற்றும் 12 ராசி அதிபதிகள்

நாம் இந்த பதிவில் 27 நட்சத்திரங்கள் மற்றும் அதனுடைய அதிபதிகள் மற்றும் 12 ராசி அதிபதிகள் யார் யாரென்று எளிதாக புரியும் வண்ணம் கூறியுள்ளோம் படித்து தெரிந்துகொள்ளவும். கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திர அதிபதி அட்டவணை அடிப்படையில்தான் திசா காலங்கள் ஒருவருக்கு பிறந்தவுடன் முதலில் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருவரின் பிறந்த நட்சத்திரம் மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் எனில் அவருக்கு முதலில் வரும் தசை செவ்வாய் தசை ஆகும்.

27 நட்சத்திரங்கள் அதிபதி

நட்சத்திர அதிபதி அட்டவணை

குரு – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
சூரியன் – கார்த்திகை, உத்திரம், உத்திராடம்
சந்திரன் – ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்
புதன் – ஆயில்யம், கேட்டை, ரேவதி
கேது – அஸ்வினி, மகம், மூலம்
ராகு – திருவாதிரை, சுவாதி, சதயம்
செவ்வாய் – மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
சனி – பூசம், அனுஷம், உத்திரட்டாதி
நவகிரகங்கள்
12 ராசி அதிபதிகள்

ஒவ்வொரு ராசியையும் இயக்கும் கிரகங்கள் ராசி அதிபதி ஆவார்கள்(ராகு கேது தவிர)

ஒவ்வொரு நவகிரகத்திற்கும் ஒரு ராசி வீடாகும். சில கிரகத்திற்கு இரண்டு வீடுகள் உண்டு. நிழல் கிரகங்கள் என்று கூறப்படும் ராகு மற்றும் கேது கிரகத்திற்கு வீடு கிடையாது. மாறாக அவர்கள் ஒரு ஜாதகத்தில் எந்த ராசியில் இருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீடாகும்.

ராசி அதிபதி
மேஷம் செவ்வாய்
ரிஷபம் சுக்கிரன்
மிதுனம் புதன்
கடகம் சந்திரன்
சிம்மம் சூரியன்
கன்னி புதன்
துலாம் சுக்கிரன்
விருச்சிகம் செவ்வாய்
தனுசு குரு
மகரம் சனி
கும்பம் சனி
மீனம் குரு
ராசி அதிபதி காரகத்துவம் 
  • மேஷம், விருச்சிக ராசி அதிபதி செவ்வாய். இவர் நிலம், ஆற்றல், திறமைகளுக்குக் காரகனான இருக்கிறார்.
  • ரிஷபம் , துலாம் ராசி அதிபதி சுக்கிரன். இவர் களத்திர காரகன் ஆவார்.
  • மிதுனம், கன்னி ராசி அதிபதி புதன். இவர் கல்வி, புத்தி காரகன் ஆவார்.
  • கடக ராசி அதிபதி சந்திரன். இவர் மனம், தாய்க்குக் காரகன் ஆவார்.
  • சிம்ம ராசி அதிபதி சூரியன். இவர் உடல் , தந்தைக்குக் காரகன் ஆவார்.
  • தனுசு , மீனம் ராசி அதிபதி குரு. இவர் தனம், புத்திர காரகன் ஆவார்.
  • மகரம் , கும்பம் ராசி அதிபதி சனி. இவர் ஆயுள், தொழில் காரகன் ஆவார்.

THATSTAMIL GOOGLE NEWS

இதையும் படிக்கலாமே,

9 நவகிரகங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? | ஜோதிடத்தில் நவகிரகங்களின் பங்கு என்ன?
சனியின் பிடியில் சிக்கித் தவிப்பவரா நீங்கள் இதோ உங்களுக்கான வாழ்வியல் பரிகாரங்கள்
Vaikunda ekadasi 2023 | வைகுண்ட ஏகாதசி விரதம் எப்படி இருக்க வேண்டும்